100 அழகு குறிப்புகள் – Face Beauty Tips

அழகு குறிப்புகள்!

முகம் பொலிவு பெற...

கிவி பழத்தை நன்கு அரைத்து பேஸ்ட் செய்து முகம் மற்றும் கழுத்து பகுதியில் தடவி ஒரு 1/2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின்னர், சற்று வெதுவெதுப்பான நீரால் முகத்தை கழுவி மாய்ஸ்சுரைசர் ஏதேனும் தடவினால் முகம் இன்னும் சற்று பொலிவு பெரும்.


பொடுகு மறைய ...

ஒரு கப் மரிக்கொழுந்து மற்றும் அரை கப் வெந்தய கீரையை சேர்த்து நன்கு அரைத்து தலையில் தடவி கொள்ளவும். பின்னர், 10 நிமிடங்கள் கழித்து தலையை கழுவினால் பொடுகு மறைந்து விடும்.


முக புத்துணர்ச்சிக்கு...

முட்டையின் வெள்ளை கருவை தனியாக எடுத்து நன்றாக கலக்கி முகத்தில் தடவி கொள்ளவும். பின்னர், 1/2 மணி துளிகள் கழித்து முகத்தை கழுவினால் முகம் பளிச் என்று காணப்படும். பின்னர், நீங்கள் விரும்பும் மாய்ஸ்சுரைசர் ஏதேனும் தடவி கொள்ளலாம்.


கருமை நீங்க...

பாதி கரோட் மற்றும் கொய்யா பழத்தை சேர்த்து அரவையில் போட்டு நன்கு அரைத்து கொள்ளவும். பின்னர், அதை முகத்தில் தடவி ஒரு 1/2 மணி நேரம் ஊறவைத்து நீரால் கழுவிவிடவும். அதன் பின்னர் ஏற்படும் வறட்சியை தவிர்க்க மாய்ஸ்சுரைசர் ஏதேனும் தடவி கொள்ளவும்.

ஒரு எலும்பிச்சை சாறில் பாதியளவு மற்றும் 4 டீஸ்பூன் சந்தன பொடியை கலந்து முகத்தில் தடவி வந்தால் வெயிலினால் சருமத்தில் ஏற்படும் கருமையை போக்கலாம்.உதட்டின் கருமை நீங்க....

காரட் ஜூஸ்-யை உதட்டின் மீது தடவி ஒரு பத்து நிமிடம் ஊற வைக்க வேண்டும். இவ்வாறு தினமும் செய்வதால், உதட்டின் கருமை நீங்கும்.

மாதுளை சாறு, அல்லது புதினா இலையை உதட்டின் மீது தடவி வந்தால், சிகிரெட் குடித்து உதட்டில் ஏற்பட்ட கருமை மறையும்.


உதடுகள் சிவப்பாக மாற...

பீட்ருட் சாறை உதட்டின் மீது தடவி வந்தால் உதடுகள் சிவப்பாக மாறி கவர்ச்சியாக இருக்கும்.


முகம் அழகு பெற...

ஒரு பீச் பழத்தை அரைத்து மற்றும் 3 டீஸ்பூன் தயிரை சேர்த்து கலந்து கொள்ளவும். பின்னர், அதை முகத்தில் தடவி மசாஜ் செய்யவும். சிறிது நேரம் கழித்து நீரால் முகத்தை கழுவினால் முகம் பொலிவு பெரும்.

பப்பாளி சாறை முகத்தில் தடவி 1/2 மணி நேரம் கழித்து நீரால் கழுவினால் முகம் வசீகர தோற்றத்துடன் காணப்படும்.முக பருக்கள் மறைய...

சிறிது வேப்பிலை பொடி மற்றும் சிகப்பு சந்தன பொடியை நீருடன் கலந்து பேஸ்ட் செய்து முகத்தில் தடவி வந்தால், பருக்கள் மறையும்.


கரும்புள்ளி மறைய..

சிறிது தக்காளி மற்றும் எலும்பிச்சை சாறு கலந்து முகத்தில் தடவி 1/2 மணி நேரம் ஊற விடவும். இவ்வாறு செய்துவருவதால், கரும்புள்ளிகள் மறைய உதவும்.


கருவளையத்தை நீக்க...

பன்னீர் மற்றும் சந்தனத்தை நன்றாக கலந்து தூங்குவதற்கு முன் கரு வளையங்களில் தடவி கொள்ளுங்கள். காலையில், விழித்தெழுந்தவுடன் நீரை கொண்டு கழுவி விடவும்.

வெள்ளரிக்காய் விதையை நன்கு தூளாக்கி அதனுடன் தயிர் கலந்து கருவளையம் உள்ள பகுதியில் தடவி வந்தால், கருவளையம் காணாமல் போகும்.கூந்தலில் எண்ணெய் பிசு பிசு-க்கு நீங்க...

சதாம் வடித்த கஞ்சியில் நீங்கள் உபயோகிக்கும் ஷாம்பூவை சேர்த்து தலையில் தடவி குளித்தால், தலை முடியில் உள்ள எண்ணெய் பிசு பிசுக்கு நீங்கும்.


அம்மை தழும்புகள் மறைய...

தேங்காய் எண்ணெய் மற்றும் மஞ்சள் தூள் கலந்து தழும்பு உள்ள இடத்தில் தடவி சிறிது தேய்த்து விடவும். இவ்வாறு, செய்து வருவதால் அம்மை தழும்பு மறையும்.


பாதங்கள் மென்மையாக மாற....

தினமும் குளிக்கும் போது பீர்க்கங்காயின் நார் -யை கொண்டு பாதத்தில் தேய்த்து வந்தால் பாதங்கள் மென்மையாக மாறும்.


குதிகால் வெடிப்பு மறைய...

கல் உப்பு, நல்லெண்ணெய் மற்றும் ஆலிவ் ஆயில் ஆகிய மூன்றையும் கலந்து குதிகாலில் தேய்த்து வந்தால், குதிகால் வெடிப்புகள் மறையும்.


உதட்டில் உள்ள பருக்கள் மறைய..

சிறிதளவு மோர் எடுத்து அதில் பஞ்சை கொண்டு நனைத்து உதட்டில் உள்ள பருக்களில் மென்மையாக தடவி வந்தால் பருக்கள் ஓரிரு நாள்களில் பருக்கள் மறைந்து விடும்.


பொடுகு தொல்லை நீங்க...

வால் மிளகை ஊறவைத்து சிறிது பால் சேர்த்து அரைத்து தலையில் தடவி ஊறவைத்து குளித்தால் தலையில் பொடுகு தொல்லை இருக்காது.


அக்குளில் உள்ள முடிகளை நீக்க...

பால் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கலவை செய்து கொள்ளவும். இவற்றை அக்குளில் தடவி ஒரு அரை மணி நேரம் விட்டு பின்னர், அவற்றை ஒரு ஈர துணியால் துடைத்து எடுக்கவும். இவ்வாறு அடிக்கடி செய்து வருவதால் அக்குளில் உள்ள முடிகள் உதிர்ந்து விடும்.


முடி உதிர்வதை தடுக்க....

நெல்லிக்காய், கடுக்காய், மற்றும் தான்றிகாய் பொடிகளை நன்கு கலந்து தண்ணீரில் காய்ச்சி ஒரு ஆறு மணி நேரம் ஊறவைக்கவும். பின்னர் அதை எலும்பிச்சை சாறு சேர்த்து தலையில் தேய்த்து குளித்து வந்தால், முடி உதிர்வது நின்று விடும்.


முகத்தில் உள்ள சுருக்கங்கள் மறைய...

தயிர் மற்றும் கடலை மாவு கலந்து முகத்தில் தடவி ஒரு 15 நிமிடங்கள் ஊறவைத்து கழுவினால் முகத்தில் உள்ள சுருக்கங்கள் மறையும்.


வறண்ட சருமத்தை போக்க...

பாலாடையை முகத்தில் தடவி ஊறவைத்து பின்னர் நீரால் கொண்டு கழுவினால் வறண்ட சருமம் பொலிவு பெரும்.

மேலும், பாலாடை மற்றும் எலும்பிச்சை சாறையும் சேர்த்து முகத்தில் தடவினால் இன்னும் கூடுதல் பலன் கிடைக்கும்.

பாலாடை மற்றும் கசகசாவை சேர்த்து அரைத்து முகத்தில் தடவி வந்தால், இவை உங்கள் முகத்தை மென்மையாக்கும்.முகத்தின் நிறம் அதிகரிக்க...

தக்காளி சாறு மற்றும் மஞ்சள் துளை கலந்து முகத்தில் தடவி வந்தால், முகத்தின் நிறம் கூடும்.


சருமத்தில் உள்ள அழுக்குகள் நீங்க..

தக்காளி சாறு மற்றும் எலும்பிச்சை சாறு சேர்த்து சருமத்தில் தடவி ஒரு 15 நிமிடம் கழித்து நீரைக் கொண்டு கழுவினால் சருமத்தில் உள்ள அழுக்குகள் நீங்கும்.


புத்துணர்ச்சியோடு இருக்க..

தினமும் போதுமான அளவு நீரை அருந்தி வருவதால், சருமத்தை புத்துணர்வுடன் வைத்திருக்க முடியும்.


முகம் பளிச்சென்று மாற..

கற்றாழை ஜெல்லை முகத்தில் தடவி மசாஜ் செய்து சிறிது நேரம் காயவைத்து கழுவினால் முகம் பொலிவுடன் காணப்படும்.


சருமம் இளமையாக இருக்க...

கடலை மாவு மற்றும் இளநீர் வழுக்கையை சேர்த்து முகத்தில் வாரம் ஒரு முறை தடவி வந்தால், முகத்தின் வறட்சி நீங்கி இளமையாக காணப்படும்.


சரும பொலிவிற்கு...

உலர்ந்த ரோஜா இதழ்கள் மற்றும் பன்னீரும் சந்தனமும் கலந்து அரைத்து முகத்தில் தடவி வந்தால் சருமம் பொலிவு பெறும்.


Leave a Comment

Your e-mail address will not be published. Required fields are marked *