Amazing Beauty tips for oily skin

   உங்கள் தோல் எண்ணெய் வழிந்தோ அல்லது க்ரீஸாகவோ தோன்றுகிறதா? அப்படி இருந்தால் எதற்கும் கவலைப்பட வேண்டாம். ஏனெனில், நங்கள் இங்கே தெளிவான சருமத்தை அடைய மற்றும் எண்ணெய் சருமத்தை நீக்க சில வீட்டிலேயே செய்யக்கூடிய குறிப்புகளை பற்றி பதிவிட்டுளோம்.

எண்ணெய் சருமத்தை நீக்க உதவும் ஓட்ஸ்

    உங்கள் முகத்திலிருந்து எண்ணெய் சருமத்தை அகற்றுவதற்கான வழிகளில் ஒன்று சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்குதல் ஆகும். இதனை இயற்கையான வழியில் செய்ய ஓட்ஸ் மிகவும் உதவியாக இருக்கும்.

   உங்கள் வீட்டில் ஓட்ஸ் இருந்தால், அவற்றை இரு துண்டாக நறுக்கி அதில் 2 ஸ்பூன் எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்து அதனுடன் 2 தேக்கரண்டி எலுமிச்சை சாறு மற்றும் இரண்டு ஸ்பூன் தேன் சேர்த்து நன்றாக கலக்கவும். பின்னர், அதை உங்கள் முகத்தின் மேல் தடவி மெதுவாக விரல்களை கொண்டு வட்ட இயக்கத்தில் 3 நிமிடங்கள் வரை நன்றாக தேய்க்கவும்.

    பிறகு, அந்த பேஸ்ட்டை உங்கள் முகத்தின் மேல் 15 நிமிடங்கள் வரை ஊற வைக்கவும். பிறகு, முகத்தை வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவவும். இப்பொழுது, உங்கள் சருமத்திலிருந்து அகற்றப்பட்ட இறந்த செல் நீக்கப்பட்டு உங்கள் முகம் பளபளப்பாக மாறும்.

உங்கள் முகத்தை ஒரு நாளைக்கு இரண்டு முறை கழுவ வேண்டும்

     ஒரு நாளைக்கு இரண்டு முறை உங்கள் எண்ணெய் சருமத்திற்கு பொருத்தமான ஃபேஸ் வாஷ்-யை முகத்தில் தடவவும். பின்னர், வெதுவெதுப்பான நீரைப் பயன்படுத்தி உங்கள் முகத்தை சுத்தப்படுத்த வேண்டும். ஒரு முறை காலையிலும் மற்றொன்று படுக்கைக்குச் செல்வதற்கு முன்பும். ஆனால், இவற்றை ஒரு நாளைக்கு இரண்டு முறைக்கு மேல் செய்ய கூடாது. ஏனெனில், அவ்வாறு செய்வது உங்கள் முகத்தில் இயற்கையாக இருக்கும் எண்ணெய்-யும் சேர்த்து அகற்றி விடக்கூடும்.

எண்ணெய் இல்ல உணவை எடுத்துகொள்ளுகள்

    காய்கறிகள், பழங்கள் மற்றும் புரதங்கள் நிறைந்த உணவை உண்ணுங்கள். வறுத்த மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் வெள்ளை சர்க்கரை கலந்த பானங்கள் ஆகியவற்றை தவிருங்கள். மேலும், முகப்பருவுக்கு சிகிச்சையளிப்பதற்கும், உங்கள் சருமத்தின் சமநிலையை சமன் செய்வதற்கும் எலுமிச்சை மற்றும் கிவி பழத்தை கொண்டு செய்யப்படும் face scrub -யை பயன்படுத்தவும்.

உடற்பயிற்சி அல்லது நடைப்பயிற்சி செய்வது

     தினமும் உடற்பயிற்சி செய்வது அல்லது நடைப்பயிற்சி செய்வது இரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்து தோலில் உள்ள செல்களை வளர்க்க உதவுகிறது. மேலும், இது சருமத்தில் உள்ள அடைபட்ட துளைகளை நீக்கி நச்சுகளை அகற்ற உதவுகிறது.

தினமும் 5-6 கிளாஸ் தண்ணீர் குடிப்பது

     தினமும் 5-6 கிளாஸ் தண்ணீர் குடிப்பதால் உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்றவும் உதவுகிறது. மேலும், இவை சருமத்தில் நீரேற்றி எண்ணெய் பிசுபிசுவை நீக்கி மென்மையாக மாற்றுகிறது.

Leave a Comment

Your e-mail address will not be published. Required fields are marked *