Benefits of Heartfulness, Vipassana, and Alpha Meditation – Tamil

தியானம்...

Meditation-Tamil

       தியானம் என்பது பல சிந்தனை ஓட்டங்களிலிருந்து விடுபட்டு, உங்களைப் பற்றியும் உங்கள் சுற்றுப்புறங்களை பற்றியும் விழிப்புணர்வை அதிகரிக்க செய்யும் ஒரு செயலாற்ற செயல்முறையாகும். எளிமையாக கூறவேண்டும் என்றால், அமைதியாக இருந்து எல்லாவற்றையும் கவனிக்கும் ஒரு செயல்முறையாகும். 

      இவற்றில் கவனிப்பது அல்லது விழிப்புணர்வுடன் இருப்பது தான் முக்கியம் என்பதால், இவற்றை நீங்கள் அமர்ந்து கொண்டோ, படுத்து கொண்டோ, அல்லது நடந்து கொண்டோ செய்யலாம்.

     தியானத்தை எந்த நிலையிலும் செய்யக்கூடியதாக இருந்தாலும், புதியதாக பழகுவோர் சில குறிப்புகளை பின்பற்றுவதால் விரைவிலே ஆழ்ந்த தியான அனுபவத்தினை அடையலாம்.  நாங்கள் இங்கே சில குறிப்புகளை கொடுத்துள்ளோம், அவை உங்களுக்கு உதவக்கூடும்.

தியானத் தயார் நிலைக்கு முன் சில குறிப்புகள்

  • தியானம் என்பது மனதையும் உடலையும் இளைப்பாற்றும் செயல்முறை ஆகும். எனவே, நீங்கள் தியானம் செய்ய முற்றிலும் உங்களுக்கு வசதியான நேரத்தை தேர்தெடுத்து கொள்ளவும்.
  • நல்ல அமைதியான இடத்தைத் தேர்ந்தெடுத்து கொள்வது சிறந்தது.
  • அமைதியாக அமர்ந்து முதுகுத் தண்டை நேராக வைத்து, கண்கள் மூடியபடி கை விரல்களை சின் முத்திரையில் வைத்து பத்மாசனத்தில் அமர்வது கூடுதல் சிறப்பு.
  • உணவு உண்டு, மூன்று மணி நேரத்திற்குப் பின்னர் தியானம் செய்வது நலம்.
  • இயல்பான மூச்சினை விட்டு அது உள்ளே செல்வதையும், வெளியே செல்வதையும் கவனிக்கலாம்.
  • தியானம் செய்யும் பொழுது ஒரு மெல்லிய புன்முறுவல் முகத்தில் இருக்கட்டும்.
  • தியானத்தை முடிக்கும் முன் கண்களை மிகவும் மெதுவாக திறந்து தியானத்தால் கிடைத்த அமைதியை அனுபவியுங்கள்.

தியானம் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்

       தியானம் மன அழுத்தத்தைத் தூண்டும் காரணிகளை குறைத்து மன அழுத்தத்திலிருந்து முழுமையாக விடுபட உதவுகிறது.

      தியானம் கவலை, பயம் மற்றும் தீய நடத்தைகள் போன்ற கவலை தரும் மனநல பிரச்சினைகளை குறைக்க தீர்வாக இருக்கிறது.

     சில வகையான தியானங்கள் மனச்சோர்வை மேம்படுத்துவதோடு மட்டும்மல்லாமல் வாழ்க்கையின் பார்வையை நேர்மறையாக மற்ற உதவுகிறது.

     தியானங்கள் உங்களை நீங்களே அறிந்து கொள்ள உதவும் மற்றும் உங்களைப் பற்றிய வலுவான புரிதலை வளர்த்துக் கொள்ள உதவக்கூடும். மேலும், உங்கள் வாழ்க்கையில்  பல நேர்மறையான மாற்றங்களைச் செய்வதற்கான தொடக்க புள்ளியாக இது இருக்கலாம்.

    தியானம் என்பது கவனிப்பது அல்லது விழிப்புணர்வுடன் இருப்பது ஆகும். எனவே, இது உங்கள் கவனிக்கும் திறன் மற்றும் சமூகத்தை பற்றிய தெளிவான விழிப்புணர்வையும் அதிகரிக்க உதவுகிறது.

   வழக்கமாக, தியானம் செய்வதன் மூலம் நீங்கள் பெறக்கூடிய மேம்பட்ட கவனம் உங்களது மூளையின் நினைவு திறன் மற்றும் மன தெளிவை அதிகரிக்கும். இதனால், வயது மூப்பினால் ஏற்படும் நினைவக இழப்பு தொடர்பான குறைபாட்டை போக்க உதவுகிறது.

    தியானம், நேர்மறையான உணர்வுகளை வளர்ப்பதற்கான ஒரு நடைமுறையாகும். இவை முதலில் உங்களிடம் தொடங்கி பிறகு மற்றவர்களிடமும் ஒரு அன்பான கருணை மற்றும் இரக்கமுள்ள நடத்தையை அதிகரிக்க உதவும்.

   தியானம் மன ஒழுக்கம், மன உறுதியை உருவாக்குகிறது மற்றும் தீய பழக்க வழக்கங்களுக்கான தூண்டுதல்களைத் தவிர்க்க உதவும். இது போதைப்பொருளிலிருந்து மீளவும், உடல் எடையை குறைக்கவும் மற்றும் பிற தீய பழக்க வழக்கங்களிலிருந்து திரும்பி நல்வாழ்க்கை வாழவும் உதவுகிறது.

    தூக்கத்தில் குறுக்கிடக்கூடிய எண்ணங்களை கட்டுப்படுத்தி நன்றாக தூங்க தியான நுட்பங்கள் உங்களுக்கு உதவும். மேலும், இவை தூங்குவதற்கு எடுக்கும் நேரத்தை குறைத்து தூக்கத்தின் தரத்தை அதிகரிக்கும்.

    தியானம் நமது உடலின் மருத்துவ பராமரிப்பு அல்லது உடல் சிகிச்சைக்கு ஒரு துணைப் பொருளாகப் பயன்படுத்தும்போது இது நாள்பட்ட பல்வேறுவிதமான நோய்களுக்கும் சிகிச்சையளிக்க உதவும்.

    தினமும், தவறாமல் தியானிக்கும் நபர்களின் இரத்த அழுத்தம் குறைகிறது. இதனால், இது இதயம் மற்றும் தமனிகளில் ஏற்படும் அழுத்தத்தை குறைத்து, இதய நோய்களைத் தடுக்க உதவும்.

Leave a Comment

Your e-mail address will not be published. Required fields are marked *