முக பொலிவிற்கு.. – Face brightness tips in tamil at home

face tips in tamil language

      இங்கே நாங்கள் முகத்தை அழகாக்கும் மற்றும் சருமத்தை ஒளிர செய்யும் சில அழகு குறிப்பு செய்முறைகளை பற்றி பதிவிட்டுளோம். இவற்றை நீங்கள் எளிமையாக வீட்டில் இருந்த படியே தயாரித்து உங்கள் முகத்தில் தடவி சுமார் 20 நிமிடங்கள் வைத்திருந்தாலே போதும் நீங்கள் ஒரு சிறந்த பலனை எதிர்ப்பார்க்கலாம்.

வைட்டமின் ஏ-வை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளவும்.

    நீங்கள், உங்களது முகத்தை பளபளப்பாக மாற்ற, விலையுயர்ந்த கிரீம்கள் மற்றும் முகத்தை வெளுக்க செய்யும் பொருட்களில் பணம் செலவழிக்க விரும்பவில்லை என்றால் நீங்கள் வைட்டமின் ஏ அதிகம் உள்ள உணவு பொருட்களை உண்பதன் மூலம் உங்களது தோலை அழகாக மற்றும் பளபளப்பாக மாற்றலாம். பால், முட்டை, கேரட் மற்றும் தர்பூசணி ஆகியவை வைட்டமின் ஏ அதிகமாக உள்ள உணவு பொருள்களாகும்.

முகத்தை பளபளப்பாக்கும் தக்காளி

     நன்கு கனிந்த தக்காளியை விதையுடன் சேர்த்து நன்றாக அரைத்து முகத்தில் தடவி 30 நிமிடங்கள் வரை வைத்த பிறகு கழுவ வேண்டும். தினமும் இவ்வாறு செய்துவந்தால் சூரியனால் சருமத்தில் காணப்படும் எண்ணெய் பசை, கருமை நிறம் மறைந்து முகம் மிகவும் பொழிவு பெரும்.

அடிக்கடி முகத்தை சுத்தம் செய்தல்

    வெளியில் இருந்து வீட்டிற்குள் வந்தவுடன் முகத்தை சுத்தம் செய்தல் என்பது தேவையற்ற அழுக்கு மற்றும் எண்ணெய் ஆகியவற்றை அகற்ற உதவுகிறது. மேலும், அடிக்கடி முகத்தை கழுவி ஈரப்பதமாக்குவது ஒரு அழகான மற்றும் இயற்கை பளபளப்பை அளிக்கும்.

பப்பாளி நொதிகள்

  பப்பாளி, இயற்கையிலே தோலை சீரமைக்க மற்றும் தோலின் செல்களை புதுப்பிக்கும் இயற்கை நொதிகளை கொண்டுள்ளது. இதனால், இது பெரும்பாலான மக்களால் தோலை ஒளிர செய்ய பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனவே பழத்தை சாப்பிடுவதோடு மட்டுமல்லாமல், பப்பாளி சார்ந்த பொருள்களின் கலவையும் பயன்படுத்தி உங்கள் சோர்வு மிகுந்த முகத்தை அழகாக மற்றும் பிரகாசமாக மாற்றிக்கொள்ளலாம்.

பால்

    பால் உண்மையில் தோலினை இயற்கையாக சிறந்த முறையில் வெண்மையாக்கும் காரணிகளில் ஒன்றாகும். இது தோலின் நிறத்தை மென்மையாக்க உடலின் உள்ளேயும் வெளியேயும் வேலை செய்கிறது. இதனால், நீங்கள் அழகான  மற்றும் ஆரோக்கியமான சருமத்தை பெற தூங்குவதற்கு முன் குளிர்ந்த பாலை குடிக்கவும்.

பாலுடன் தேன் கலந்த கலவை

   தேன் சருமத்திற்கு மற்றும் முகம் வெளுப்புக்கு சிறந்த ஆதாரமாக கருதப்படுகிறது. தூய்மையான பாலுடன் தேன் கலந்த கலவை, ஒளிரும் சருமத்திற்கு ஒரு சிறந்த முகம் பேக் ஆகும். தேன் நுண்ணுயிர் எதிர்ப்பு பொருள்களை கொண்டுள்ளதால் முகப்பரு மற்றும் பருக்களை நீக்குகிறது.

   பால் மற்றும் தேன் கலந்த கலவையை முகத்தை நீரினால் சுத்தம் செய்துவிட்டு வட்ட இயக்கத்தில் 2 நிமிடங்களுக்கு மசாஜ் செய்த பிறகு, ஒரு பதினைந்து நிமிடங்கள் வைத்தால், ஒரு ஒளிரும் சருமத்தை பெறலாம்.

உருளைக்கிழங்கு சாறு

   உருளைக்கிழங்கு சாறு வயதான பிறகும் ஒரு ஒளிரும் சருமத்தை தரக்கூடிய இயற்கையாக அதிகம் பயன்படுத்தப்பட்டு வரும் பொருளாகும். இவை, முகத்தில் உள்ள அதிகமான எண்ணெய் மற்றும் கறைகளை நீக்குவதற்கான ஒரு சிறந்த இயற்கை தீர்வு ஆகும்.

இயற்கையானா ப்ளீச்சிங் முறை

    ஒரு இயற்கையானா ப்ளீச்சிங் முறை என்று வரும் போது எலுமிச்சை பழத்தை விட வேறு எந்த சிறந்த தீர்வும் இல்லை. உங்கள் முகத்தில் ஒரு எலுமிச்சை சாற்றை நேரடியாக தேய்த்து 30 நிமிடங்களுக்கு ஊறவைக்கவும். பிறகு, மிதமான சுடு நீரை பயன்படுத்தி முகத்தை நன்கு கழுவவும். சிறந்த முடிவுகளுக்காக தினசரி இதை மீண்டும் மீண்டும் செய்யவும்.

ஆரஞ்சு தோல் கலவை

    உலர்ந்த ஆரஞ்சு தோலை நன்கு தூளாக்கி தயிர்-யுடன் கலந்து ஒரு கலவையை தயாரிக்கவும். பிறகு, நீரினால் முகத்தை சுத்தம் செய்து இந்த கலவையை முகத்தில் தடவி சுமார் 20 நிமிடங்களுக்கு அதை விட்டு விடுங்கள். ஒரு நல்ல முடிவை பெற குறைந்தது வாரத்திற்கு மூன்று முறையாவது இதை செயல்படுத்தவும்.

தயிர்

    தயிர் லாக்டிக் அமிலத்தைக் கொண்டுள்ளதால், இது ஒரு இயற்கை வெளுக்கும் முகவர் ஆகும். இதனை, பாதிக்கப்பட்ட பகுதியில் நேரடியாக தேய்த்த பிறகு சுமார் 20 நிமிடங்கள் காத்திருந்து குளிர்ந்த தண்ணீரில் துடைக்கவும். இது உண்மையில் ஒரு மிகவும் விரும்பத்தக்க முடிவுகளை உருவாக்குகிறது.

Leave a Comment

Your e-mail address will not be published. Required fields are marked *