Face Tips in Tamil | அசத்தும் முகம் வெண்மை

face beauty tips in tamil

   பொதுவாக, நிலையான மன அழுத்தம், அழுக்கு, மாசுபாடு, சூரிய வெளிப்பாடு மற்றும் குப்பை உணவு போன்றவற்றால், முகம் அழகு பாதிக்கப்படுகின்றன. இதிலிருந்து விடுபட, முகத்திற்கான இங்கே கொடுக்கப்பட்டுள்ள அழகு குறிப்புகள் நீங்கள் விரும்பும் ஒரு பிரகாசமான, மற்றும் ஒளிரும் நிறத்தை உங்களுக்கு வழங்கப் போகின்றன.

கிவி பழம்

   முகம் பொலிவு பெற, கிவி பழத்தை நன்கு அரைத்து முகத்தில் தடவி 30 நிமிடம் வரை ஊற வைக்கவும். பின்னர், வெதுவெதுப்பான நீரால் கழுவி மாய்ஸ்சுரைசர் எதையேனும் பயன்படுத்தலாம். இதனால், முகம் பொலிவு பெரும்.

வெள்ளை கரு

  முட்டையின் வெள்ளை கருவை தனியே எடுத்து அதை நன்கு அடித்து கலக்கி முகத்தில் தடவி ஒரு 30 நிமிடம் அப்படியே விடவும். பின்னர், வெதுவெதுப்பான நீரால் முகத்தை துடைக்கவும். இந்த செயல்முறை முகத்தை பளிச்சென்று வைத்துக்கொள்ள உதவும்.

பீச் பழம்

   ஒரு பீச் பழத்தை நன்கு அரைத்து அதனுடன் மூன்று டேபிள் ஸ்பூன் தயிரை கலந்து கலவை செய்யவும். பிறகு, அதை முகத்தில் தடவி மெதுவாக மசாஜ் செய்யவும். பின்னர், 20 நிமிடம் ஊறவைத்த பிறகு நீரால் முகத்தை கழுவினால், முகம் அழகு பெரும்.

எலும்பிச்சை சாறு

    நன்கு டேபிள் ஸ்பூன் சந்தன பொடி எடுத்து கொண்டு பாதி எலும்பிச்சை சாறுடன் நன்கு கலந்து முகத்தில் தடவினால், வெயிலினால் முகத்தில் ஏற்பட்ட கருமை நீங்கும்.

பப்பாளி பழம்

  • பப்பாளி பழத்தின் சாறை முகத்தில் தடவி ஒரு அரை மணி நேரம் வைத்த பின் நீரால் கழுவினால் வசீகரமான அழகை பெறலாம்.
  • பப்பாளி சாற்றை எலும்பிச்சை சாற்றுடன் சேர்த்து முகத்தில் தடவி வந்தால், முகத்திற்கு நல்ல நிறம் கிடைக்கும்.

தயிர்

    தயிருடன் கடலை மாவை நன்கு கலந்து முகத்தில் தடவி ஒரு 15 நிமிடம் அப்படியே வைத்து விடவும். பின்னர், நீரினால் கழுவினால், முகத்தில் ஏற்பட்ட சுருக்கம் மறையும்.

மஞ்சள்

   மஞ்சள் மற்றும் தக்காளி சாற்றினை நன்கு கலந்து முகத்தில் தடவி சில நிமிடங்கள் ஊற வைத்தால், அது சருமத்தின் நிறத்தை அதிகரிக்கும்.

தக்காளி சாறு

  தக்காளி சாறு மற்றும் எலும்பிச்சை சாறை நன்கு கலந்து முகத்தில் தடவி ஒரு 5 நிமிடம் கழித்து தண்ணீரை கொண்டு கழுவவும். இவ்வாறு செய்வதால் முகத்தில் உள்ள அழுக்குகள் அகற்றப்படுகின்றன.

கற்றாழை ஜெல்

  கற்றாழை ஜெல்லை முகத்தில் தடவி மசாஜ் செய்து சில நிமிடங்கள் அப்படியே காயவைத்து விடவும். பின்னர், முகத்தை நீரினால் கழுவினால், முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி முகம் பிரகாசமாக தெரியும்.

பாதாம் பருப்பு

   பாதம் பருப்பை காய்ச்சாத பால் கொண்டு நன்கு பசை போல் அரைத்து இரவில் தூங்கும் முன் முகத்தில் தடவி கொள்ளவும். பின்னர், காலையில் முகத்தை கழுவினால் முகம் பளபளப்பான தோற்றத்துடன் காணப்படும்.

உலர்ந்த ரோஜா இதழ்

  • உலர்ந்த ரோஜா இதழ்களுடன் பன்னீர் மற்றும் சந்தனம் கலந்து அரைத்து முகத்தில் தடவி வர முகம் பொலிவு பெரும்.
  • பன்னீர் ரோஜா இதழ்களை அரைத்து 30 நிமிடம் முகத்தில் ஊற வைத்து பின்னர் நீரால் கழுவி வந்தால், முகத்தின் நிறம் மாற்றம் அடைந்து பொலிவு பெரும் .

Leave a Comment

Your e-mail address will not be published. Required fields are marked *