கொய்யா பழம் – Health benefits of Guava Fruit in Tamil

This article is written for benefits of Guava Fruit.

கொய்யா ஏன் மிக சிறந்த பழம்?

    கொய்யா பழங்கள் உண்ணக்கூடிய விதைகளைக் கொண்ட வெளிர் பச்சை அல்லது மஞ்சள் தோலுடன் உருண்டை வடிவத்தில் காணப்படும் சுவை மிகுந்த பழம் ஆகும். இந்த பழங்களில் ஆக்ஸிஜனேற்றிகள், வைட்டமின் சி, பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்துக்கள் அதிக அளவில் உள்ளன. 

    பல  குறிப்பிடத்தக்க ஊட்டச்சத்து உள்ளடக்கம் கொண்ட இந்த பழம் பல ஆரோக்கிய நன்மைகளை அளித்து வருவதால் இப்பொழுது மக்களுயிடையே மிகவும் பிரபலமாகி வருகிறது. மேலும், கொய்யா இலைகள் மூலிகை டீ தயாரிக்கவும் மற்றும் இதன் இலை சாறு பல ஊட்டச்சத்து குறைகளை போக்க ஒரு துணைப் பொருளாகவும் பயன்படுத்தப்படுகின்றன.

கொய்யா நீரழிவு நேயாளிகளுக்கு எவ்வாறு உதவக்கூடும்?

     நீரிழிவு நோயாளிகளுக்கு அல்லது அதன் ஆபத்தில் உள்ளவர்களுக்கு கொய்யா பழம் ஒரு வர பிரசாதம் ஆகும். ஏனெனில், கொய்யா இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை மேம்படுத்த முடியும் என்று பல சான்றுகள் தெரிவிக்கின்றன. 

      பல சோதனை-குழாய் ஆய்வு மற்றும் விலங்குகள் மீது நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகள் கொய்யா இலை சாறு இன்சுலின் அமைப்பை மேம்படுத்தி இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகிறது என தெரிவிக்கின்றது. மேலும், மனிதர்கள் மீது நடத்தப்பட்ட ஒரு சில ஆய்வு முடிவுகளும் பல ஈர்க்கக்கூடிய நேர்மறையான முடிவுகளை காட்டியுள்ளன.

இதயத்தை வலுவாக்கும் கொய்யா!!

     கொய்யா பழத்தை உண்பதால், இதய ஆரோக்கியத்தை எவ்வாறு அதிகரிக்க உதவக்கூடும் என்பதை பற்றி சற்று இங்கே அறிவோம்.

    120 தன்னார்வலர்களை கொண்டு 12 வாரம் நடத்தப்பட்ட ஆய்வில், உணவுக்கு முன் பழுத்த கொய்யா சாப்பிடுவதால் இரத்த அழுத்தம் ஒட்டுமொத்தமாக 8–9 புள்ளிகள் குறைந்து, உடலில் உள்ள மொத்த கொழுப்பில் 9.9% குறைத்து, “நல்ல” எச்.டி.எல் கொழுப்பை 8% அதிகரித்துள்ளது என தெரிவிக்கின்றன. இதன் மூலம் கொய்யா பழத்தை உண்பது உங்களது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.

   இந்த சுவை மிகுந்த பழத்தில் உள்ள அதிக அளவு பொட்டாசியம் மற்றும் கரையக்கூடிய நார்ச்சத்துகள் உங்களது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த சிறந்த முறையில் பங்களிக்கும் என பல ஆய்வாளர்கள் அறிவுறுத்துகின்றனர்.

    கொய்யா இலைகளில் அதிக அளவு ஆன்டி ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் வைட்டமின்கள், பிரீ ரேடிக்கல்ஸ் மூலம் உங்கள் இதயத்தை சேதப்படுத்தாமல் பாதுகாக்க உதவும் என்று பல விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

    கூடுதலாக, கொய்யா இலை சாறு எடுத்துக்கொள்வது, உயர் இரத்த அழுத்தத்தை குறைத்தல், எல்.டி.எல் கொழுப்பின் அளவை குறைத்தல், இதய நோய் மற்றும் பக்கவாதம் போன்ற நோய்களின் அபாயத்தை குறைத்தல் போன்ற பல மதிப்புமிக்க நன்மைகளுக்கு வழிவகுக்கும்.

பெண்கள் கொய்யாவை ஏன் சாப்பிட வேண்டும்?

   பல பெண்கள் டிஸ்மெனோரியா என்று அழைக்கப்படும் “மாதவிடாயின் வலி அறிகுறிகள்”, “வயிற்றுப் பிடிப்பு” போன்ற தீவிரமான வலி உணர்வை அனுபவித்துவருகின்றனர். இவ்வாறான பெண்களுக்கு கொய்யா இலை சாறு அவர்களது மாதவிடாய் பிடிப்பின் வலி தீவிரத்தை குறைக்கும் என்பதற்கு சில ஆய்வு முடிவுகளில் காட்டப்பட்டுள்ளன.

    இந்த வலிமிகுந்த அறிகுறிகளை அனுபவித்த 197 பெண்களை கொண்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், தினமும் 6 மி.கி கொய்யா இலை சாற்றை உட்கொள்வதால் இந்த வலியின் தீவிரம் குறைகிறது என்று கண்டறியப்பட்டது. மேலும், சில வலி நிவாரணி மருந்துகளை விட இது மிகவும் சக்திவாய்ந்ததாகத் தோன்றியது எனவும் ஆய்வில் பங்கேற்ற பெண்கள் தெரிவிக்கின்றனர்.

வயிற்றுப்போக்கின் தீவிரத்தை குறைக்கும்!!!

    நார்ச்சத்துக்களுக்கான சிறந்த மூலம் கொய்யா பழம் ஆகும். ஏனென்றால், தினசரி பரிந்துரைக்கப்பட்ட நார்ச்சத்து உட்கொள்ளலில் 12 சதவீதத்தை ஒரு கொய்யா பழத்தால் மட்டுமே வழங்க முடியும். எனவே, அதிக அளவில் கொய்யா சாப்பிடுவது ஆரோக்கியமான குடல் இயக்கங்களுக்கு உதவுவதோடு மலச்சிக்கலையும் தடுக்கும்.

   கூடுதலாக, கொய்யா இலை சாறு ஒரு ஆண்டிமைக்ரோபியல் என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது உங்கள் குடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரிகளை சமன் செய்து வயிற்றுப்போக்கின் தீவிரத்தையும் கால அளவையும் குறைக்கக்கூடும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

நீங்கள் எடை இழக்க கொய்யா எவ்வாறு உதவக்கூடும்?

   ஒரு பழத்தில் 37 கலோரிகள் மற்றும் தினசரி பரிந்துரைக்கப்பட்ட ஃபைபர் உட்கொள்ளலில் 12% மட்டுமே கொண்டுள்ளதால், இவை ஒரு மிக சிறந்த சிற்றுண்டி வகை உணவாகும். இவற்றை உண்பதால் உங்கள் வயிறு விரைவாகவே நிறைந்து அதிகமாக உண்பதை தவிர்த்து விடுவீர்கள்.

    மேலும், வேறு சில குறைந்த கலோரி உணவுகளை போலல்லாமல், இவை வைட்டமின்கள் மற்றும் தாதுக்களால் நிரம்பியுள்ளன. எனவே, நீங்கள் முக்கியமான ஊட்டச்சத்துக்களையும் இழக்கவில்லை.

உயிர் கொல்லி நோயை கொய்யா எவ்வாறு எதிர்க்கிறது?

   கொய்யா பழம் மற்றும் அதன் இலைச் சாறு சிறந்த ஒரு கேன்சர் எதிர்ப்பு விளைவைக் கொண்டிருப்பதாகக் காட்டப்பட்டுள்ளது. மேலும், கொய்யா சாறு புற்றுநோய் உயிரணுக்களின் வளர்ச்சியைத் தடுக்கவும் முடியும் என்று டெஸ்ட்-டியூப் மற்றும் விலங்குகள் மீது நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன.

   புற்றுநோய்களை ஏற்படுத்தும் முக்கிய காரணங்களில் ஒன்றான உயிரணுக்களை சேதப்படுத்தும் பிரீ ரேடிக்கல்ஸ்-யை தடுக்கும் மிக சிறந்த ஆன்டி-ஆக்ஸிஜனேற்றிகளின் அதிக அளவு இருப்பது இதற்க்கு காரணமாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

    மேலும், ஒரு சோதனை-குழாய் ஆய்வில், சில புற்றுநோய் மருந்துகளை விட புற்றுநோய் உயிரணு வளர்ச்சியை நிறுத்துவதில் கொய்யா இலை எண்ணெய் நான்கு மடங்கு அதிகம் வீரியத்தை கொண்டுள்ளது என்று கண்டறியப்பட்டது.

    இந்த “சோதனை-குழாய்” சோதனைகளின் முடிவுகள் நம்பிக்கைக்குரியவை என்றாலும், கொய்யா இலைச் சாறு மக்களின் புற்றுநோய்க்கு சிகிச்சையளிக்க உதவுமா இல்லையா என்று தெரிந்துகொள்ள இன்னும் அதிக அளவு ஆய்வுகள் தேவை எனவும் ஆய்வு வட்டாரங்களில் கூறப்படுகிறது.

நோய்த்தொற்றுகளை கொய்யா எவ்வாறு விரட்டுகிறது?

     உடலில் வைட்டமின் சி-யின் அளவு குறைந்து போவதே நோய்த்தொற்றுகளுக்கு முக்கிய காரணமாகும். தினமும் கொய்யாவை உண்பது, இந்த ஊட்டச்சத்தை பெற ஒரு மிகசிறந்த எளிமையான வழியாகும். ஏனெனில், வைட்டமின் சி-இன் அளவு அதிகமாக இருக்கும் பழங்களில் கொய்யாவும் ஒன்று.

    உண்மையில், ஒரு கொய்யாவில் உள்ள வைட்டமின் சி-யின் அளவு என்பது தினசரி பரிந்துரைக்கபட்ட அளவைவிட இரண்டு மடங்கு அதிகம். குறிப்பாக, இது ஒரு ஆரஞ்சு சாப்பிடுவதால் நீங்கள் பெறும் அளவை விட இரு மடங்கு அதிகம்.

     வைட்டமின் சி ஊட்டச்சத்து உங்கள் உடலில் இருந்து எளிதில் அதிகமாக வெளியேற்றப்படும் ஒரு ஊட்டச்சத்து ஆகும். அதனால், உங்கள் உணவில் கொய்யாவை சேர்த்து கொள்வதால், மோசமான பாக்டீரியா மற்றும் வைரஸ்களால் ஏற்படும் நோய்த்தொற்றுகளிலிருந்து எளிமையாக தப்பித்து கொள்ளலாம்.

சருமத்திற்கும் பல அதிசியங்களை செய்யும்.

     கொய்யாவில் நிரம்பியிருக்கும் வைட்டமின்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிஜனேற்றிகள் உங்கள் சருமத்திற்கு பல அதிசயங்களைச் செய்யும். குறிப்பாக, அதன் ஆன்டி ஆக்ஸிஜனேற்றங்கள் உங்கள் சருமத்தில் ஏற்படும் சேதத்திலிருந்து பாதுகாக்கக்கூடும். மேலும், சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களை குறைத்து நமது உடலுக்கு வயதாகும் செயல்முறையை மெதுவாக்க உதவும்.

     மேலும் கூடுதலாக, கொய்யா இலைச் சாறு உங்கள் சருமத்தில் நேரடியாகப் பயன்படுத்தும்போது முகப்பருவுக்கு சிகிச்சையளிக்க உதவும். ஒரு சோதனை-குழாய் ஆய்வில், கொய்யா இலைச் சாறு முகப்பருவை உண்டாக்கும் பாக்டீரியாக்களைக் கொல்வதில் பயனுள்ளதாக இருப்பதைக் கண்டறிந்தனர். அதற்கு, அதன் ஆண்டிமைக்ரோபியல் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் தான் மிக முக்கிய காரணமாக இருக்கலாம் என அந்த ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது

100 கிராம் உள்ள ஊட்டச்சத்துக்களின் மதிப்பு ( in tamil )


 • Vitamin A 624 IU
 • Retinol Activity Equivalent 31.0 mcg
 • Beta Carotene 374 mcg
 • Lycopene 5203 mcg
 • Vitamin C 228 mg
 • Vitamin K 2.6 mcg
 • Niacin 1.1 mg
 • Folate 49.0 mcg
 • Food Folate 49.0 mcg
 • Dietary Folate Equivalents 49.0 mcg
 • Choline 7.6 mg

ஊட்டச்சத்து மதிப்புக்களின் அட்டவணை

Calorie InformationAmount per 100 gramsPercent Daily Values
Calories68.0 (285 kJ)3%
Carbohydrate51.5 (216 kJ)
Fat7.9 (33.1 kJ)
Protein8.6 (36.0 kJ)

CarbohydratesAmount per 100 gramsPercent Daily Values
Total Carbohydrate14.3 g5%
Dietary Fiber5.4 g22%
Sugars8.9 g

Fats & Fatty AcidsAmount per 100 gramsPercent Daily Values
Total Fat0.9 g1%
Saturated Fat0.3 g1%
Monounsaturated Fat0.1 g
Polyunsaturated Fat0.4 g
Total Omega-3 fatty acids112 mg
Total Omega-6 fatty acids288 mg

Protein & Amino AcidsAmount per 100 gramsPercent Daily Values
Protein2.5 g5%
Tryptophan22.0 mg
Threonine96.0 mg
Isoleucine93.0 mg
Leucine171 mg
Lysine72.0 mg
Methionine16.0 mg
Phenylalanine6.0 mg
Tyrosine31.0 mg
Valine87.0 mg
Arginine65.0 mg
Histidine22.0 mg
Alanine128 mg
Aspartic acid162 mg
Glutamic acid333 mg
Glycine128 mg
Proline78.0 mg
Serine75.0 mg

VitaminsAmount per 100 gramsPercent Daily Values
Vitamin A624 IU12%
Retinol Activity Equivalent31.0 mcg
Beta Carotene374 mcg
Lycopene5203 mcg
Vitamin C228 mg381%
Vitamin E (Alpha Tocopherol)0.7 mg4%
Vitamin K2.6 mcg3%
Thiamin0.1 mg4%
Niacin1.1 mg5%
Vitamin B60.1 mg6%
Folate49.0 mcg12%
Food Folate49.0 mcg
Dietary Folate Equivalents49.0 mcg
Pantothenic Acid0.5 mg5%
Choline7.6 mg

MineralsAmount per 100 gramsPercent Daily Values
Calcium18.0 mg2%
Iron0.3 mg1%
Magnesium22.0 mg5%
Phosphorus40.0 mg4%
Potassium417 mg12%
Sodium2.0 mg0%
Zinc0.2 mg2%
Copper0.2 mg11%
Manganese0.2 mg8%
Selenium0.6 mcg1%

SterolsAmount per 100 gramsPercent Daily Values

OtherAmount per 100 gramsPercent Daily Values
Water80.8 g
Ash1.4 g

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *