‘கிவி பழம்’ – Kiwi Fruit Benefits in Tamil

உயிரை காக்கும் கிவி...

    கிவி பழம் சுவையுடைய மற்றும் உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய பல நன்மைகளை கொண்டுள்ளன. அவற்றின் பச்சை சதை இனிமையாகவும் சற்று கசப்பாகவும் இருக்கும். இது வைட்டமின் சி, வைட்டமின் கே, வைட்டமின் ஈ, ஃபோலேட் மற்றும் பொட்டாசியம் போன்ற பல ஊட்டச்சத்துக்களால் நிறைந்துள்ளது. 

     மேலும், இப்புவியின் மிகசிறந்த பழங்களில் ஒன்றாக கருதப்படும் இப்பழம் ஏராளமான ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் நார்ச்சத்துகளை கொண்டுள்ளது.

மூச்சு திணறலை குறைக்கும் கிவி

    கிவியில் உள்ள அதிக அளவு வைட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்ஸிஜனேற்றிகள் ஆஸ்துமா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க உதவும் என்று கருதப்படுகிறது.

   கிவி போன்ற ஊட்டச்சத்து மிகுந்த பழங்களை தவறாமல் உட்கொள்பவர்களிடையே நுரையீரல் செயல்பாட்டில் மிகுந்த நன்மை பயக்கும் என்று 2000 ஆம் ஆண்டின் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், இவற்றை உண்பதால், குழந்தைகளுக்கு அடிக்கடி ஏற்படும் மூச்சுத்திணறலையும் குறைக்க உதவுகிறது.

புற்றுநோய் அபாயத்தை குறைக்கிறது

    பொதுவாக, உடலில் ஏற்படும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தால் நமது உடலில் உள்ள டி.என்.ஏ சேதமடையும். இது புற்றுநோய் மற்றும் உடலின் ஆரோக்கியத்திற்கு பல எதிர்மறை பிரச்சனைகளை உருவாக்க வழிவகுக்கும். கிவி அல்லது கிவி சாற்றை வழக்கமாக உட்கொள்வது, ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தின் சாத்தியத்தை குறைத்து, குறிப்பாக பெருங்குடல் புற்றுநோயின் அபாயத்தை குறைக்கும்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது

     வைட்டமின் சி என்பது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோயை தடுக்க உதவும் ஒரு அவசியமான ஊட்டச்சத்து ஆகும். கிவி பழம், ஊட்டச்சத்து மற்றும் அதிகமான அளவு வைட்டமின் சி-யை கொண்டுள்ளதால்,  இவை நோயெதிர்ப்பு செயல்பாட்டை அதிகரித்து காய்ச்சல் போன்ற நோய்களை உருவாக்கும் வாய்ப்பைக் குறைக்கும்.

இரத்த அழுத்தத்தை நிர்வகிக்க உதவும்

    இந்த பழத்தை அடிக்கடி உண்பதால், நீண்ட கால பக்கவாதம் அல்லது மாரடைப்பு போன்ற உயர் இரத்த அழுத்தத்தால் ஏற்படக்கூடிய ஆபத்தை குறைக்கிறது. ஏனெனில், கிவி பழங்கள் நமது நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு கூடுதல் ஊக்கத்தை அளிப்பது மட்டுமல்லாமல், அவை நமது இரத்த அழுத்தத்தையும் சிறப்பான முறையில் கட்டுப்படுத்துவதே இதற்கு கரணம்.

சிறந்த செரிமானத்திற்கு உதவுகிறது

   கிவியில் உள்ள ஆக்டினிடின் எனப்படும் புரோட்டியோலிடிக் நொதிகள் மற்றும் இவற்றில் உள்ள ஏராளமான நார்ச்சத்துகள் குடலில் உள்ள தேவையற்ற பாக்ட்ரியாக்களை நீக்கி மிக சிறந்த முறையில் செரிமானத்தை ஊக்குவிக்கிறது.

பார்வை திறனை அதிகரிக்கிறது

    பார்வை இழப்புக்கு முக்கிய காரணமாக இருப்பது கண்களில் ஏற்படும் மாகுலர் சிதைவு ஆகும். நீங்கள் கிவி பழத்தை அடிக்கடி உண்டு வருவதால், இவற்றில் உள்ள உயர் அளவிலான ஜீயாக்சாண்டின் மற்றும் லுடீன் ஆகியவை கண்களில் ஏற்படும் மாகுலர் சிதைவை படிப்படியாக குறைத்து கண்களின் பார்வை திறனை மேம்பட செய்கிறது.

இரத்த உறைதலைக் குறைக்கிறது

    இவை இரத்த அழுத்தத்தை சிறந்த முறையில் நிர்வகிக்க உதவுவதோடு மட்டுமல்லாமல், இரத்த உறைவைக் குறைக்கவும் உதவுகிறது. மேலும், இவை இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை குறைத்து இதயத்தின் ஆரோக்கியத்தை உறுதி செய்கிறது.

ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது

100 கிராம் கிவியில் உள்ள ஊட்டச்சத்துக்களின் மதிப்பு

 • Vitamin A 87.0 IU
 • Retinol Activity Equivalent 4.0 mcg
 • Beta Carotene 52.0 mcg
 • Lutein+Zeaxanthin 122 mcg
 • Vitamin C 92.7 mg
 • Vitamin E (Alpha Tocopherol) 1.5 mg
 • Vitamin K 40.3 mcg
 • Folate 25.0 mcg
 • Food Folate 25.0 mcg
 • Dietary Folate Equivalents 25.0 mcg
 • Choline 7.8 mg

ஊட்டச்சத்து மதிப்புக்களின் அட்டவணை

Calorie InformationAmount per 100 gramsPercent Daily Values
Calories61.0 (255 kJ)3%
Carbohydrate52.8 (221 kJ)
Fat4.4 (18.4 kJ)
Protein3.8 (15.9 kJ)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *