அசத்தும் முக வெண்மைக்கு.. – Skin and Face Whitening Tips (Tamil)

    பொதுவாக, மக்கள் அனைவரும் தோற்றத்தை வைத்தே உங்களை எடை போடுவார்கள். எனவே, இனிமையான தோற்றத்தைப் பெற நம் சருமத்தை அடிக்கடி கவனித்துக் கொள்ள வேண்டும். அதற்காக, இந்த வலைப்பக்கத்தில் முகத்தை பொழிவுடன் வைத்திருக்க சில சிறந்த குறிப்புகளை வழங்கி உள்ளோம்.

காய்ச்சாத பாலை கொண்டு சுத்தம் செய்யவும்

    ஒரு பாத்திரத்தில் சிறிது காய்ச்சாத பாலை எடுத்துக் கொள்ளுங்கள்.பாலில் ஒரு காட்டன் துணியை நனைத்து முகத்தை துடைக்கவும். பின்னர், இதை 5 நிமிடங்கள் விட்டுவிட்டு பின்னர் முகத்தை கழுவவும்.

பயன்கள் :

  • இது உங்கள் சருமத்தில் உள்ள அசுத்தங்களை நீக்கி சுத்தமாகவும் தெளிவாகவும் மாற்றுகிறது.
  • சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்ற உதவுகிறது.
  • உங்கள் முகத்தை சுத்தம் செய்ய பல வழிகள் இருந்தாலும், பாலுடன் சுத்தப்படுத்துவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

கேரட், பால், தேன் கலந்த கலவை

    இரண்டு கேரட்டுகளை நன்றக கழுவி சிறிய துண்டுகளாக வெட்டவும். வெட்டிய கேரட் துண்டுகளை சிறிது தண்ணீர் சேர்த்து மிக்சியில் அரைத்து பேஸ்ட் செய்யுங்கள். பின்னர், ஒரு பாத்திரத்தில் 2-3 ஸ்பூன் கேரட் பேஸ்டை எடுத்துக்கொண்டு அதில் 2 ஸ்பூன் காய்ச்சாத பால் மற்றும் 1 ஸ்பூன் தேன் சேர்க்கவும். 

     பின்னர், இதை நன்றாக கலக்கவும். இந்த கலவையை முகத்தில் தடவி 10-15 நிமிடங்கள் விடவும். 15 நிமிடங்களுக்குப் பிறகு உங்கள் முகத்தை குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

பயன்கள் :

  • கேரட்டில் பீட்டா கரோட்டின் மற்றும் வைட்டமின் சி இருப்பதால் இது சருமத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் மற்றும் உங்கள் சருமத்தை புதியதாக வைத்திருக்க உதவுகிறது.
  • பாலில் உள்ள லாக்டிக் அமிலம் உங்கள் சருமத்தை நீரேற்றமாக வைத்திருக்கிறது மற்றும் வெயிலால் ஏற்படும் நிறமியைக் குறைக்கிறது.
  • தேனில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உங்கள் சருமத்தை நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது மற்றும் உங்கள் சருமத்தை பிரகாசமாக்குகிறது. மேலும், தேன் உங்கள் சருமத்தை இளமையாக வைத்திருக்கும்.
  • இந்த கலவை சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்கி உங்கள் நிறத்தை மேம்படுத்துகிறது.
  • ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இருபாலரும் இந்த கலவையை பயன்படுத்தலாம்.
  • சிறந்த முடிவுகளைப் பெற இதை, வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை பயன்படுத்தவும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *