அவுரிநெல்லி பலன்கள் | Benefits of blueberry fruit in Tamil

Blueberry fruit are considered a superfood, and can help maintain healthy bones, and Here top health benefits of bluberry fruit.

   அவுரிநெல்லிகள் சத்தான மற்றும் அயல்நாடுகளில் பெருமளவில் பிரபலமாக உண்ணக்கூடிய பழம் ஆகும். இது சற்று புளிப்பு கலந்த சுவையுடன் இருக்கும். இதன் புளிப்பு சுவை உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால், அது உடலுக்கு தரும் அற்புதமான நன்மைகளால் உங்கள் எண்ணத்தை மாற்றக்கூடும். 

bluberry benefits in tamil

  அவுரிநெல்லிகள் நமது உடலுக்கு அவசியமான ஊட்டச்சத்துக்கள், வைட்டமின்கள், மற்றும் கனிமங்களை கொண்டிருப்பதால் அவை நமது உடலுக்கு பல நன்மைகளை அளிக்கின்றன. அவற்றில் சில முக்கியமான நன்மைகளை பற்றி நாங்கள் இங்கே பட்டியலிட்டுளோம்.

சிறுநீரகத்திற்கு நல்லது

அவுரிநெல்லிகளில் சிறுநீர் பாதை நோய்த்தொற்றகளை தடுக்க மற்றும் சிகிச்சைக்கு உதவும் பண்புகள் உள்ளன எனவும் மற்றும் சிறுநீர்ப்பை நோய்த்தொற்றுகளுக்கு எதிராக போராட உதவுகிறது எனவும் அண்மையில் நடத்தப்பட்ட பல ஆய்வகளில் கண்டறியப்பட்டுள்ளன. இதனால், இவற்றை சாப்பிடுவது உங்கள் சீறுநீரக பாதுகாப்பை உறுதி செய்யும்.

இதய ஆரோக்கியம்

ப்ளூபெர்ரி உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளின் அளவுகளை குறைக்க உதவுகிறது. உடம்பில் உள்ள அளவுக்கு அதிகமான கொழுப்புகள் தான் இதய நோய்களின் வளர்ச்சியில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது என்பதால், ப்ளூ பெர்ரியை தினசரி உண்பது நமது இதயங்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. மேலும் பல சந்தர்ப்பங்களில், மருத்துவர்கள் இதய நோயாளிகளுக்கு மருந்துகளுடன் சேர்த்து அவுரிநெல்லிகளை உண்பதற்கும் பரிந்துரைக்கின்றனர். (1)

புற்றுநோயை தடுக்க உதவுகிறது

உடலில் ஏற்படும் பிரீ ரேடிக்கல்ஸ் காரணமாக, நம் டி.என்.ஏ. தொடர்ந்து ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை வெளிப்படுத்துகிறது. மேலும், நமது விஷத்தன்மை நிறைந்த உணவு மற்றும் வாழ்க்கை முறையும் இவற்றிக்கு முக்கிய பங்களிக்கிறது. இதன் காரணமாக, புற்றுநோய் உருவாகுவதற்கான வாய்ப்புகளும் அதிகமாகின்றன.

ப்ளூபெர்ரிகள் ஆக்ஸிஜனேற்ற மற்றும் பிற புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளை அதிகமாக கொண்டிருப்பதால், மார்பக, பெருங்குடல், நுரையீரல், ஈஸ்டாகெஸ், தோல் மற்றும் குடல் புற்றுநோயைத் தடுக்கவும் மற்றும் எதிர்த்து போராடவும் உதவுகிறது. (1)

செரிமாண அமைப்பை ஊக்குவிக்கிறது

அவுரிநெல்லிகள் நார்ச்சத்து நிறைந்ததாக இருப்பதால், இது உங்கள் செரிமானம் மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளை தடுக்கிறது. மேலும், பெர்ரிகளில் உள்ள வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் அமிலங்கள் இரைப்பை திரவங்களை தூண்டி உங்கள் செரிமானத்தை மேலும் மேம்படுத்துகின்றன.

மூளையின் செயல் திறனை அதிகரிக்கிறது

பொதுவாக, அவுரிநெல்லிகளின் ஆக்ஸிஜனேற்றிகள் மூளையின் நினைவகத்தை ஒருங்கிணைத்து நரம்பு மண்டல நோய்களை தடுக்கின்றன. இவற்றின் ஊட்டச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உங்கள் மூளை உயிரணுக்களை பாதுகாக்கின்றன.

அதிலும் குறிப்பாக, இந்த பழம் உங்கள் மைய நரம்பு மண்டலத்தை மீட்டெடுக்க உதவுகின்றன. மேலும், அல்சைமர் மற்றும் வயது மூப்பின் காரணமாக ஏற்படும் நினைவக மற்றும் திறன்களின் இழப்பைத் தடுக்க பெரிதும் உதவுகின்றன.

பார்வை திறன் மேம்பட

ப்ளூபெர்ரி, இரவு நேர பார்வை திறனை அதிகரிக்கவும், கண்களின் சோர்வை குறைக்கும் காய்கறிகளில் உள்ள சேர்மங்களின் கலவைகளை போல இவற்றிலும் மிக அதிகமனா செறிவுகளைக் கொண்டிருக்கின்றன என்று ஐரோப்பாவில் நடத்தப்பட்ட பல ஆய்வுகளில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும், இந்த பழம் கண் மாகுலார் சீர்கேஷன், கண்புரை, கிட்ட பார்வை, தூர பார்வை, உலர் கண்கள், மற்றும் விழித்திரை நோய்த்தாக்கம் போன்ற பிரச்சினைகளை தடுக்கவும் பெரிதும் உதவுகின்றன.

ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது

100 கிராம் அவுரிநெல்லியில் உள்ள ஊட்டச்சத்துக்களின் மதிப்பு


  • Vitamin A 54.0 IU
  • Retinol Activity Equivalent 3.0 mcg
  • Beta Carotene 32.0 mcg
  • Lutein+Zeaxanthin 80.0 mcg
  • Vitamin C 9.7 mg
  • Vitamin K 19.3 mcg
  • Folate 6.0 mcg
  • Food Folate 6.0 mcg
  • Dietary Folate Equivalents 6.0 mcg
  • Choline 6.0 mg

ஊட்டச்சத்து மதிப்புக்களின் அட்டவணை

Calorie InformationAmount per 100 gramsPercent Daily Values
Calories57.0 (239 kJ)3%
Carbohydrate51.7 (216 kJ)
Fat2.8 (11.7 kJ)
Protein2.5 (10.5 kJ)

Learn more about health benefits of Blueberry fruit such as effectiveness, possible side effects, interactions, dosage.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *