இயற்கை வயாகரா, தர்பூசணி ஜூஸ்

watermelon fruit benefits in tamil மக்கள் பலரும் வெப்பமான காலங்களில் தர்பூசணியை புத்துணர்ச்சியூட்டும் விதமாக உண்டு மகிழ்கின்றனர். இது சாப்பிடுவதற்கு மிகவும் சுவாரசியமாக மற்றும் உடலில் உள்ள நீரின் அளவை சுலபமாக அதிகரிக்க உதவுகிறது.
benefits of watermelon fruit in tamil

தர்பூசணி

      இந்த புத்துணர்ச்சியூட்டும் பழம் பல ஆரோக்கியமான வைட்டமின்கள் மற்றும் கனிமங்களை உள்ளடக்கியது மற்றும் நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இங்கே, நங்கள்  தர்பூசணியின் சில ஈர்க்கக்கூடிய சுகாதார நலன்கள் பட்டியலிட்டுளோம். 

தர்பூசணி: ஒரு இயற்கை வயக்ரா?

    2008 ஆம் ஆண்டில், டெக்சாஸ் ஏ & எம் ஆராய்ச்சியில்  தர்பூசணியில் காணப்படும் லிகோபீன், சிட்ருல்லைன் உங்கள் உடலில் உள்ள இரத்த நாளங்களை மென்மையாக மாற்றவும், மற்றும் ஆணின் விறைப்புத்தன்மையில் உள்ள குறைபாட்டை குறைக்கவும் உதவுகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது.

 கூடுதலாக, இது உங்கள் ஆணுறுப்பின் இரத்த ஓட்டத்தை சீராக விநியோகிக்க உதவுகிறது மற்றும் உங்கள் பாலியல் இயக்கத்தை சீரமைப்பதற்கான இயற்கையான மேம்பாட்டை வழங்குகிறது. அதனால்தான் தர்பூசணி "இயற்கையின் வயக்ரா" என்று குறிப்பிடப்படுகிறது.

இளமையான தோற்றத்தை தருகிறது​

   நமது தோலின் பழைய மற்றும் சோர்வான தோற்றத்திற்கு உடலில் உள்ள ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் மற்றும் பிரீ ராடிகல்ஸ்க்கு முக்கிய பங்கு உள்ளது. இந்த தீங்கு விளைவிக்கும் பொருளின் வீரியத்தை குறைக்கும் வைட்டமின் ஏ, சி மற்றும் லிகோபீன் போன்ற ஆக்ஸிஜனேற்ற எதிர்ப்பொருட்கள் இந்த சுவையான பழங்களில் அதிகளவு நிரம்பியுள்ளன மற்றும் 92 சதவீதம் நீர் நிறைத்துள்ளதால் நமது தோலின் இளமையான தோற்றத்தை தக்கவைக்க உதவுகிறது.

முடி உதிர்வதை தடுக்கிறது​

   தர்பூசணி அதிகளவு வைட்டமின் சி மற்றும் ஹீம் அல்லாத இரும்பு பொருள்கள் நிறைந்த பழங்களில் ஒன்றாகும். தாவர வகைகளில் மட்டுமே காணப்படும் இந்த ஹீம் அல்லாத இரும்பு பொருள்கள் ரத்த சிவப்பணுக்களில் போதுமான இரும்பின் அளவை உறுதிசெய்கிறது மற்றும் மயிர்க்கால்களில் ஆக்ஸிஜன் வழங்குவதை துரிதப்படுத்தி ஆரோக்கியமான முடியின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.

நீரிழப்பினனை தடுக்கிறது

   வைட்டமின் ஏ, பி 6, மற்றும் சி, மற்றும் லிகோபீன் ஆகியவற்றின் உயர்ந்த உள்ளடக்கத்துடன் தர்பூசணிகள் நிரம்பியுள்ளன. இது 92% தண்ணீரும், கலோரிகளில் குறைவாகவும் உள்ள உணவு பொருளாகும், இந்த பழத்தில் நீர் சமநிலையை கட்டுப்படுத்த தேவையான பொட்டாசியம் உள்ளதால் நீரிழப்பு அபாயம் மற்றும் சோர்வாக உள்ளவர்களுக்கு இது ஒரு சிறந்த பழம் ஆகும்.

​எடை இழப்புக்கு தர்பூசணி நல்லதா?​

 கோடைகாலங்களில் தர்பூசணி ஒரு சுவையான மற்றும் புத்துணர்ச்சிக்கனா பரிசு ஆகும். இதில் 92 சதவிகிதம் தண்ணீர், மற்றும் 8 சதவிகிதம் சிறந்த ஊட்டச்சத்து பொருள்களும் நிறைந்திருக்கிறது.

மேலும், கலோரிகளின் அளவும் மிகவும் குறைவாகா உள்ளது, மற்றும் உடலில் உள்ள கொழுப்பினை எரிக்கும் திறன் கொண்ட அர்ஜினைன் அமினோ அமிலம் உருவாக உதவும் சிட்ருல்லைன் காணப்படுவதால் எடை இழக்க விரும்பும் மக்களுக்கு இது ஒரு சிறந்த பழம்.

உங்கள் இதயத்திற்கு தர்பூசணி நல்லதா?​

    தர்பூசணியை உணவில் கணிசமாக எடுத்துக்கொள்வதன் மூலம் நமது ரத்த அழுத்தத்தை இயற்கையாகவே இயல்பாக்கி ரத்த ஓட்டத்தை சீராக மாற்றுகிறது என்று பல ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்குகின்றன.மேலும் இது பொட்டாசியம், மெக்னீசியம், மற்றும் வைட்டமின் சி ஆகியவற்றை போதுமானளவு கொண்டுள்ளது.

இதனால், இது இரத்த நாளங்களின் நெகிழ்ச்சி அதிகரிக்கவும் , உயர் இரத்த அழுத்ததை குறைக்கவும், மேலும் தமனிகளின் கடினத்தை குறைக்கவும் மற்றும் இரத்த நாளங்களை நெகிழ்ச்சி அடைய பெரிதளவில் உதவுகிறது.

நோய் எதிர்ப்பு அமைப்பு அதிகரிக்கிறது​

  தர்பூசணி அதன் நோயெதிர்ப்பு அமைப்பு காரணமாக அது ஒரு இயற்கையாகவே நமது உடலை குணப்படுத்தும் பழமாக கருதப்படுகிறது. இது நோய் மற்றும் ஒட்டுமொத்த செரிமான பிரச்சினைகளிலிருந்து நம்மை பாதுகாக்கிறது.

இதனால், நம் நோயெதிர்ப்பு முறையின் செயல்பாட்டை அதிகரித்து, இதய நோய்க்கு எதிராகவும் மற்றும் உடலின் வீக்கத்தை குறைக்கவும் உதவுகிறது.

கண் பார்வை திறன் அதிகரிக்கிறது​

  தர்பூசணியை வழக்கமாக நுகர்வது நமது கண் பார்வைகளை மேம்படுத்த உதவும். இந்த சுவையான பழம் வைட்டமின் ஏ, சி, ஜியாக்சாந்தின் மற்றும் லுடீன் போன்ற உயர்ந்த ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளது. இந்த ஊட்டச்சத்துக்கள் கண்ணுக்கு சீரழிவு ஏற்படுத்தும் சில கண் நோய்களோடு தொடர்புடைய ஆபத்துக்களை குறைக்க உதவுகிறது மற்றும் நம் கண்கள் ஆ ரோக்கியமாக வைத்திருக்கவும் உதவுகிறது.

புற்றுநோய் ஆபத்தை குறைக்கிறது​

     தர்பூசணியில் லிகோபீன் என்ற ஆக்ஸிஜனேற்றத்தின் அளவு மிகவும் அதிகமாக இருப்பது, சில குறிப்பிட்ட புற்றுநோய்களின் தடுப்புக்கு உதவுகிறது. பல ஆராய்ச்சியாளர்கள் தக்காளி, மற்றும் தர்பூசணியை அதிகமா உணவுகளில் சேர்த்துக்கொண்டவர்களின் நுரையீரல், வயிறு, குறிப்பாக புரோஸ்டேட் ஆகியவற்றில் புற்றுநோய்க்கு குறைவான அபாயத்தைக் கொண்டுள்ளனர் என்று தெரிவிக்கின்றனர். (1)

சிறுநீரகத்திற்கு தர்பூசணயின் நன்மைகள்​

      இந்த பழச்சாறு பழம் பொட்டாசியம், ஆக்ஸிஜனேற்ற, மற்றும் 92% நீர் நிறைந்திருக்கிறது, இது சிறுநீரகத்தில் நச்சுத்தன்மையை நீக்குவதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும், அது இரத்தத்தில் யூரிக் அமிலத்தின் செறிவினை குறைக்க உதவும். இதனால், சிறுநீரக பாதிப்பு மற்றும் சிறுநீரக கற்கள் உற்பத்திக்கு வாய்ப்புகள் குறைகிறது.

ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது

100 கிராம் தர்பூசணியில் உள்ள ஊட்டச்சத்துக்களின் மதிப்பு


 • Vitamin A 569 IU
 • Retinol Activity Equivalent 28.0 mcg
 • Beta Carotene 303 mcg
 • Beta Cryptoxanthin 78.0 mcg
 • Lycopene 4532 mcg
 • Lutein+Zeaxanthin 8.0 mcg
 • Vitamin C 8.1 mg
 • Folate 3.0 mcg
 • Food Folate 3.0 mcg
 • Dietary Folate Equivalents 3.0 mcg
 • Choline 4.1 mg

ஊட்டச்சத்து மதிப்புக்களின் அட்டவணை

Calorie InformationAmount per 100 gramsPercent Daily Values
Calories30.0 (126 kJ)2%
Carbohydrate26.7 (112 kJ)
Fat1.3 (5.4 kJ)
Protein2.0 (8.4 kJ)
Alcohol0.0 (0.0 kJ)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *