கொடித்தோடை… – Benefits of Passion Fruit in Tamil

Passion fruit is a amazing popular fruit that is very low on calories but high in nutrients. Learn more about its health benefits of passion fruit in tamil, nutrition facts and uses.

   கொடித்தோடை பழம், இயற்கை உணவுகளை விரும்புவோர் மத்தியில் பிரபலமாகி வரும் ஒரு சத்தான வெப்பமண்டல பழம் ஆகும். இது அளவில் சிறியதாக இருந்தாலும், அதிக அளவு ஆன்டி ஆக்ஸிஜனேற்றிகளின் ஒரு மிகப்பெரிய ஆதாரமாக இருக்கிறது. அதுமட்டுமல்லாமல், இது உங்கள் ஆரோக்கியத்திற்கு பலனளிக்கக்கூடிய பல வைட்டமின்கள் மற்றும் தாவர கலவைகளை அதிக அளவில் கொண்டுள்ளன.

benefits of passion fruit in tamil

   இந்த வெப்பமண்டல பழம் உண்மையில் தாவரவகைகளின் படி, ஒரு வகை பெர்ரி பழ வகையை சார்ந்தது என்று கருதப்படுகிறது. இது சற்று கடினமான வெளிப்புற தோலினை கொண்டிருந்தாலும், உள்ளே விதைகள் நிரப்பப்பட்ட சாறு மையம் உள்ளது. இந்த சாறு மையம் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை வழங்கக்கூடிய ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளது. அவற்றை பற்றி சற்று விரிவாக கீழே காண்போம்.

நோய்த்தொற்றுகளிலுருந்து பாதுகாக்கிறது

      கொடித்தோடை பழம், ஆன்டிஆக்சிடண்டுகள், வைட்டமின் சி, பீட்டா-கரோட்டின் மற்றும் பாலிபினால்கள் ஆகியவற்றால் நிறைந்த ஒரு பழமாகும். குறிப்பாக, இவற்றில் உள்ள பாலிபினால்கள், ஆன்டி ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு விளைவுகளை கொண்டிருக்கும் தாவர கலவைகள் ஆகும். இவை இதய நோய், புற்றுநோய், நோய்த்தொற்றுகள் மற்றும் நீண்டகால நோய்களுக்கு எதிராக நம்மை பாதுகாக்கிறது. (1)

கண்களுக்கு நல்லது

    வைட்டமின் சி மற்றும் பீட்டா கரோட்டின், உங்கள் உணவில் இருந்து பெற வேண்டிய மிக முக்கியமான ஆன்டிஆக்சிடண்ட்ஸ் ஆகும். ஏனெனில், வைட்டமின் சி என்பது ஒரு ஆரோக்கியமான நோயெதிர்ப்பு அமைப்புக்கு  உதவக்கூடிய ஊட்டச்சத்துக்கள் ஆகும். பீட்டா கரோட்டின் என்பது, உங்கள் உடலில் வைட்டமின் ஏ வாக மாற்றப்படுகின்ற ஓரு தாவர கலவை  ஆகும். இவ்விரண்டு ஊட்டச்சத்துகளும் கண் பார்வை திறனுக்கு அவசியமான ஒன்றாகும். இவ்விரண்டு ஊட்டச்சத்துகளையும் அதிக அளவில் கொண்டுள்ள மிகச் சிறந்த பழம் கொடித்தொடை ஆகும்.

புற்றுநோயை தடுக்கிறது

    பொதுவாக, தாவர உணவு வகைகளிலிருந்து பெறப்படும்  பீட்டா கரோட்டின்களைக் கொண்ட உணவுகள் சில புற்றுநோய்களின் ஆபத்தை குறைப்பதுடன்  பெருமளவில் தொடர்புபடுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக இவற்றில்  உள்ள தாவர கலவைகள், புரோஸ்டேட், பெருங்குடல், வயிறு மற்றும் மார்பக புற்றுநோய் அபாயத்தை குறைப்பதாக ஆய்வுகளில் கூறப்பட்டுள்ளது.

உணவு மண்டலத்திற்கு நல்லது

   ஒரு 18-கிராம் கொடித்தொடை பழம் சுமார் 2 கிராம் நார்ச்சத்துகளை கொண்டிருக்கிறது, அவற்றில் பெரும்பாலானவை எளிதாக கரையக்கூடிய நார்சத்துக்கள் ஆகும்.

    பொதுவாக, நார்ச்சத்துகள் ஆரோக்கியமாக இருப்பதற்கும் மலச்சிக்கலைத் தடுக்கவும் உதவும் ஒரு முக்கிய காரணியாகும். ஆனால், பெரும்பாலான மக்கள் இந்த நார்ச்சத்தை போதுமான அளவு எடுத்துக்கொள்வதில்லை.

   மேலும், கரையக்கூடிய இந்த வகை நார்ச்சத்துக்கள் உங்கள் உணவின் செரிமானத்தை இயல்பாக மாற்றுவது மட்டுமல்லாமல், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவையும் கட்டுக்குள் வைக்க உதவுகிறது.

  இந்த வகையான நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகள் இதய நோய், நீரிழிவு மற்றும் உடல் பருமன் உள்ளிட்ட நோய்களின் ஆபத்தை குறைப்பதுடன்  தொடர்புடையதாக இருக்கிறது என்று பல ஆய்வு முடிவுகளில் கட்டப்பட்டுள்ளன. (1)

மூச்சுத் திணறலை குறைக்கிறது

    கொடித்தோடை பழங்கள் மிக உயர்ந்த ஆன்டி  ஆக்ஸிஜனேற்ற உள்ளடக்கத்தை கொண்டுள்ளதால், இவை உடலுக்கு  சக்தி வாய்ந்த அழற்சி எதிர்ப்பு பண்புகளை  கொடுக்கிறது. 

  மேலும், ஆஸ்துமா, இருமல், மூச்சுத் திணறல்   மற்றும் கீல்வாதம் கொண்டவர்களுக்கு இது பயனளிக்கும் என்ற அறிகுறிகளை  ஒரு நான்கு வாரங்களில் நடத்தப்பட்ட ஆராய்ச்சின் முடிவில் கண்டறியப்பட்டன. ஆனால், இது பற்றி அறிந்துகொள்ள இன்னும் ஆழமான ஆராய்ச்சிகள் தேவைப்படுகிறது.

ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது

  கொடித்தோடை பழம் அதிகமான ஊட்டச்சத்து ஆதாரங்களை கொண்டுள்ளது. குறிப்பாக நார்ச்சத்து, வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஏ போன்றவை இவற்றில் அதிக அளவில் உள்ளன. சுமார் 18 கிராம் ஒரு ஒற்றை ஊதா கொடித்தோடை பழம் கீழ்வரும் ஊட்டச்சத்து அளவுகளை கொண்டுள்ளது.

  • கலோரிகள்: 17.
  • நார்ச்சத்து: 2 கிராம்.
  • வைட்டமின் சி:  9%.
  • வைட்டமின் ஏ:  8%.
  • இரும்பு: 2%.
  • பொட்டாசியம்:  2%.

வைட்டமின்கள் மற்றும் தாதுப்பொருட்கள் அட்டவணை

  கொடித்தோடை பழம் மிகவும் சத்தானது மற்றும் பல வகையான வைட்டமின்கள் மற்றும் தாதுப்பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது.

Calorie InformationAmount per 100 gramsPercent Daily Values
Calories97.0 (406 kJ)5%
Carbohydrate83.8 (351 kJ)
Fat5.9 (24.7 kJ)
Protein7.4 (31.0 kJ)
Alcohol0.0 (0.0 kJ)

Passion fruit is a round shape fruit, purple fruit with edible pulp and seeds. In this article, we look at the health benefits of passion fruit in tamil and nutritional value.

Leave a Comment

Your e-mail address will not be published. Required fields are marked *