black grapes health benefits in tamil

    திராட்சை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பயிரிடப்பட்டு வருகின்ற மிகச் சிறந்த பழமாகும். அதிலும், கருப்பு திராட்சை மிகவும் பிரபலமானது. ஏனெனில், அவற்றின் நிறம் மற்றும் இனிப்பு சுவை ஆகியவை நுகர்வோர் மத்தியில் ஒரு விதமான தித்திப்பை ஏற்படுத்துகின்றன.

   மேலும், இந்த சிறிய பழங்கள் நம்பமுடியாத சக்திவாய்ந்த ஆன்டி ஆக்ஸிஜனேற்ற சேர்மங்களால் நிரம்பியுள்ளன. குறிப்பாக, இந்த பழங்கள் நீரிழிவு நோய்க்கு சிகிச்சையளிப்பதில் இருந்து புற்றுநோயைத் தடுப்பது வரை பலவிதமான உடல் ஆரோக்கியத்தை ஊக்குவிக்கிறது. ஆகையால், அவற்றை உண்பதால் நமக்கு கிடைக்கும் நன்மைகளைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

நீரிழிவு நோயை நிர்வகிக்க உதவுகிறது.

       திராட்சையில் உள்ள ரெஸ்வெராட்ரோல், இன்சுலின் உருவாக்கும் செல்கள், மற்றும் குளுக்கோஸ் அளவைக் கட்டுப்படுத்தும் ஹார்மோன்களின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. ஆகையால், இது உங்கள் உடலின் குளுக்கோஸைப் பயன்படுத்துவதற்கான திறனை மேம்படுத்தி இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் குறைக்கும் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது

    கருப்பு திராட்சையில் ஃபிளாவனாய்டுகள், பினோலிக் அமிலங்கள் மற்றும் ரெஸ்வெராட்ரோல் ஆகியவை அதிக அளவில் காணப்படுகின்றன. இந்த கலவைகள் உயர் இரத்த அழுத்தம் மற்றும் வீக்கத்தினால் (inflammation) ஏற்படும் பாதிப்புகளிலிருந்து சிகிச்சையளிக்க உதவுகின்றன. மேலும், இந்த சேர்மங்கள் பிளேட்லெட் எதிர்ப்பு விளைவுகளையும் கொண்டுள்ளதால், பக்கவாதம் மற்றும் மாரடைப்பால் ஏற்படும் மரணத்தை தடுக்க உதவுகிறது.

புற்றுநோயைத் அபாயத்தை குறைகிறது

     திராட்சைகளில் உள்ள நன்மை பயக்கும் கலவைகள் பல்வேறு வகையான புற்றுநோய்களைத் தடுக்க உதவுவதாக கண்டறியப்பட்டுள்ளதால், புற்றுநோயைத் தடுப்பதில் திராட்சைகளின் விளைவுகளை பற்றி பரவலாக ஆராயப்பட்டு வருகிறது. 

     குறிப்பாக, இவற்றில் உள்ள ரெஸ்வெராட்ரோல் கலவை புற்றுநோயை தடுப்பதற்கான சாத்தியக்கூறுகளை கொண்டுள்ளன. இந்த கலவை கருப்பு திராட்சையின் தோலில்  அதிக அளவில் உள்ளது. இவை எதிர்வினை ஆக்ஸிஜன் இனங்களை நடுநிலையாக்குவதால், புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை குறைக்க உதவுகிறது என  கண்டறிப்பட்டுள்ளது.

மூளை செயல்பாட்டை மேம்படுத்துகிறது.

       கருப்பு திராட்சைகளில் உள்ள ரெஸ்வெராட்ரோலுக்கு, மூளையின் செயல் திறனையும் மேம்படுத்துவதில் சிறந்த பங்கு உண்டு. ஏனெனில், ரெஸ்வெராட்ரோல் உட்கொள்வது மனநிலை செயலிழப்பை மேம்படுத்துவதோடு வயது தொடர்பான நினைவக இழப்பையும் தடுக்க உதவுகிறது என சில எலிகள் மீது நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன.

பார்வை திறனை ஊக்குவிக்கும்

     மத்தியதரைக் கடல் பகுதியில் வாழும் மக்கள் மற்ற பகுதியில் வாழும் வயதான மக்களைக் காட்டிலும் குறைவான கண்புரை விகிதங்களைக் கொண்டிருப்பதாக ஆய்வுகள் காட்டுகின்றன. ஏனனில், இந்த பகுதியில் வாழும் மக்களின் அன்றாட உணவுகளில் திராட்சை மற்றும் ஒயின் ஆகியவற்றை சேர்த்துக்கொள்வதே இதற்க்கு முக்கிய காரணமாகும். மேலும், ஒரு ஆய்வில், திராட்சையில் உள்ள ஆன்டி ஆக்ஸிஜனேற்றிகள் லுடீனை விட சிறந்த பார்வை-பாதுகாப்பு விளைவுகளைக் கொண்டிருப்பதாகவும் கண்டறியப்பட்டது.

எலும்புகளை வலுவூட்டுகிறது.

      திராட்சையில் உள்ள ரெஸ்வெராட்ரோல் எலும்புகளில் உள்ள தாதுக்களின் அடர்த்தியை மேம்படுத்த உதவுகிறது என எலிகளில் மீது நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. ஆனால், இவை மனிதர்கள் மீது எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை அறிய இன்னும் அதிகமான ஆய்வு முடிவுகள் தேவை.

மூட்டு வலியை நீக்குகிறது

     கருப்பு திராட்சையில் வீக்கத்தை குறைக்க உதவும் முக்கியமான கலவைகளான ஃபிளாவன்கள், அந்தோசயினின்கள், ஃபிளாவனோல்கள் மற்றும் ஸ்டில்பென்கள் ஆகியவற்றை கொண்டுள்ளன. இவை உடலில் ஏற்படும் வீக்கத்தை குறைப்பது மற்றும் மூட்டுவலிக்கு சிகிச்சையளிப்பதில் நன்றாக வேலை செய்கிறது. மேலும், இவற்றில் உள்ள ஃபிளாவனோல்கள் நரம்புகளை பலப்படுத்தி நரம்பு மண்டலத்தை பராமரிக்கிறது மற்றும் மூல நோய் அறிகுறிகளையும் நீக்குகின்றன.

நன்றாக தூங்க உதவுகிறது

      திராட்சை, மெலடோனின் (தூக்க ஹார்மோன்) சுரக்க உதவும் பண்புகளை கொண்டுள்ளதால், தூங்குவதற்கு முன்பு கருப்பு திராட்சை சாப்பிடுவது தூக்கத்தின் தரத்தை மேம்படுத்தக்கூடும். (1)

நீண்ட ஆயுளை ஊக்குவிக்கும்

     திராச்சை சிறிய பழங்கள் என்றாலும், அவற்றின் நன்மைகள் மகத்தானவை. குறிப்பாக, இவற்றில் உள்ள ஆன்டி ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் ரெஸ்வெராட்ரோல் மனித ஆரோக்கியத்திற்கு சிறந்த முறையில் பங்களித்து வருகிறது. மேலும், கருப்பு திராட்சையில் உள்ள இந்த கலவை சர்டூயின்ஸ் எனப்படும் புரதங்களின் குடும்பத்தைத் தூண்டுகிறது. இந்த Sirtuins நீண்ட ஆயுளுடன் நன்கு தொடர்பு படுத்தப்பட்டு வரும் பொருளாகும்.

ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது

100 கிராம் உள்ள ஊட்டச்சத்துக்களின் மதிப்பு


  • Vitamin A 100 IU
  • Retinol Activity Equivalent 5.0 mcg
  • Alpha Carotene 1.0 mcg
  • Beta Carotene 59.0 mcg
  • Lutein+Zeaxanthin 72.0 mcg
  • Vitamin C 4.0 mg
  • Vitamin K 14.6 mcg
  • Folate 4.0 mcg
  • Food Folate 4.0 mcg
  • Dietary Folate Equivalents 4.0 mcg
  • Choline 5.6 mg

ஊட்டச்சத்து மதிப்புக்களின் அட்டவணை

Calorie InformationAmount per 100 gramsPercent Daily Values
Calories67.0 (281 kJ)3%
Carbohydrate61.9 (259 kJ)
Fat2.9 (12.1 kJ)
Protein2.1 (8.8 kJ)

CarbohydratesAmount per 100 gramsPercent Daily Values
Total Carbohydrate17.1 g6%
Dietary Fiber0.9 g4%
Sugars16.2 g

Fats & Fatty AcidsAmount per 100 gramsPercent Daily Values
Total Fat0.4 g1%
Saturated Fat0.1 g1%
Polyunsaturated Fat0.1 g
Total Omega-3 fatty acids24.0 mg
Total Omega-6 fatty acids79.0 mg

Protein & Amino AcidsAmount per 100 gramsPercent Daily Values
Protein0.6 g1%
Tryptophan3.0 mg
Threonine17.0 mg
Isoleucine5.0 mg
Leucine13.0 mg
Lysine14.0 mg
Methionine21.0 mg
Cystine10.0 mg
Phenylalanine13.0 mg
Tyrosine11.0 mg
Valine17.0 mg
Arginine46.0 mg
Histidine23.0 mg
Alanine26.0 mg
Aspartic acid77.0 mg
Glutamic acid131 mg
Glycine19.0 mg
Proline21.0 mg
Serine30.0 mg

VitaminsAmount per 100 gramsPercent Daily Values
Vitamin A100 IU2%
Retinol Activity Equivalent5.0 mcg
Alpha Carotene1.0 mcg
Beta Carotene59.0 mcg
Lutein+Zeaxanthin72.0 mcg
Vitamin C4.0 mg7%
Vitamin E (Alpha Tocopherol)0.2 mg1%
Vitamin K14.6 mcg18%
Thiamin0.1 mg6%
Riboflavin0.1 mg3%
Niacin0.3 mg1%
Vitamin B60.1 mg6%
Folate4.0 mcg1%
Food Folate4.0 mcg
Dietary Folate Equivalents4.0 mcg
Choline5.6 mg

MineralsAmount per 100 gramsPercent Daily Values
Calcium14.0 mg1%
Iron0.3 mg2%
Magnesium5.0 mg1%
Phosphorus10.0 mg1%
Potassium191 mg5%
Sodium2.0 mg0%
Manganese0.7 mg36%
Selenium0.1 mcg0%

SterolsAmount per 100 gramsPercent Daily Values

OtherAmount per 100 gramsPercent Daily Values
Water81.3 g
Ash0.6 g

Leave a Comment

Your e-mail address will not be published. Required fields are marked *