Body, hand and stomach weight loss tips in tamil in one week

weight reduce tips in tamil

உடல் எடை குறைந்திட குறிப்புகள்

     இன்றைய வாழ்கை மற்றும் உணவு முறையில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக இன்றைய தலைமுறையினர் பெரும்பாலானோருக்கு உடல் பருமனாக மாறிக்கொண்டே வருகிறது. இதிலிருந்து விடுபட நாம் ஆரோக்கியமான உணவு முறை மற்றும் உடற்பயிற்சினை மேற்கொள்ள முயற்சி எடுக்கவேண்டும். இங்கே நங்கள் சில எளிமையான வழிமுறைகளை கொடுத்துள்ளோம்.

தண்ணீர் நிறைய அருந்தவும்

உடலில் போதுமான அளவு குடிநீர் குடிப்பதால் கொழுப்பின் அளவு கணிசமாக குறைகிறது. நீங்கள் போதுமான தண்ணீர் குடிக்கவில்லை என்றால், உங்கள் சிறுநீரகம் அதன் முடிக்கப்படாத வேலையை உங்கள் கல்லீரலுக்கு அனுப்பக்கூடும். உங்கள் கல்லீரலின் செயல்பாடுகளில் ஒன்று உங்கள் உடலின் ஆற்றலுக்காக உடலில் சேமித்து வைக்கப்பட்ட கொழுப்பினை எரித்து கரைப்பது ஆகும். கல்லீரல் சிறுநீரகத்தின் வேலையையும் செய்ய வேண்டியிருந்தால் அது முழுமையாக வேலை செய்ய முடியாது.

சுறுசுறுப்புடன் இருக்கவும்

உங்கள் தினசரி வாழ்க்கையில் உடற்பயிற்சியினை அங்கமாக சேர்க்கும் ஒரு சிறிய செயல்பாடு, நீங்கள் கற்பனை செய்வதைவிட விரைவாக உங்கள் எடையை இழக்கத் தொடங்கும். உங்கள் தினசரிப் உடற் பயிற்சியில் படிப்படியாக சில கூடுதல் உடற்பயிற்சிகளைச்சேர்க்கும் வழிகளைப் பெற முயற்சிக்கவும். இந்த நடவடிக்கைகள் செய்வதன் மூலம் நீங்கள் கூடுதலான கலோரிகளை எரித்து அதிக எடையை இழக்கின்ரீர்கள்.

உணவுக்கு முன் தண்ணீர் அல்லது காய்கறி சாறு அருந்தவும் ​

உங்கள் உணவிற்கு முன்பாக ஒரு கிளாஸ் தண்ணீர் அல்லது காய்கறி சாறு குடிப்பது உங்கள் பசியை குறைக்கும். இது நீங்கள் அதிகமாக உணவு உண்பதை கட்டுப்படுத்தும் சிறந்த வழிகளில் ஒன்றாகும். இதனால், உங்கள் எடை குறைகிறது.


அதிகாலையில் உடற்பயிற்சி செய்யவும்

காலையில் எழுந்தவுடன், குறைந்தபட்சம் 30 நிமிடங்கள் உடற் பயிற்சி செய்ய முயற்சி எடுக்கவும். ஏனென்றால், அதிகாலையில் உடற் பயிற்சி செய்யும்போது மூன்று மடங்கு அதிகமாக கொழுப்பை எரிக்க உதவுகிறது என்று சமீபத்திய ஆய்வுகள் காட்டுகின்றன.

​உணவை நீண்ட நேரம் மெல்லவும் ​

நீங்கள் குறைந்தது 8-12 முறை மென்று மெதுவாக உண்ணவும். உணவினை வேகமாக உண்ணும்பொழுது, உங்கள் உடல் தேவையான அளவு உணவினை உண்ணுவிட்டோம் என்பதை உணர இன்னும் சில நிமிடங்கள் பிடிக்கிறது. அந்த நிமிடத்தில் இன்னும் அதிகமான தேவையற்ற உணவினை உன்ன நேரிடும். அது உங்கள் எடையை அதிகரித்துவிடும்.

கனமான எடையை தூக்கவும்

கனமான எடையை தூக்கும்போது, நீங்கள் அதிக கலோரிகளை எரித்து அதன் மூலம் அதிக ஆற்றலை பெறுவீர்கள். அதிக எடைக்கொண்ட பொருளை தூக்குவதன் மூலம் உங்கள் உடலின் வளர்சிதை மாற்றம் அதிக கொழுப்பினை எரிக்க உதவுகிறது. இதன் மூலம் உங்கள் எடை விரைவாக குறைகிறது.


4 மணிநேரத்திற்கு மேல் உடகார்வதை தவிர்க்கவும் ​

மிசோரி பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் கூற்றுப்படி, கீழே உட்கார்ந்து அல்லது 4 மணி நேரத்திற்கும் மேலாக செயலற்ற நிலையில் இருப்பதால் வளர்சிதை மாற்றத்தை குறைத்து, கொழுப்பைச் சேமிப்பது எளிதாகிறது. இதைத் தடுக்க, ஒவ்வொரு இரண்டு மணிநேரத்திற்கும் குறைந்தபட்சம் 10 நிமிடங்கள் வரை எழுந்து நிற்கவும்அல்லது நடக்கவும்.

நன்கு உறங்கவும் ​

மிக நீண்ட அல்லது மிகவும் குறுகிய நேர உறக்கம் வேண்டாம். ஏனெனில் கியூபெக்கில் உள்ள லாவால் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வின் படி, சாதாரணமாக 7 முதல் 8 மணிநேரம் தூங்கினவர்களைவிட 8 மணி நேரத்திற்கும் மேலாக மற்றும் 6 மணி நேரத்திற்குள் தூங்கினவர்களின் எடை அதிகரித்தை கண்டறிந்தனர்.

அதிகமாக நட

நீங்கள் உடற்பயிற்சி நிலையத்திற்கு செல்ல நேரம் இல்லை என்றால், ஒரு பேடோமீட்டர் வாங்கிக்கொண்டு ஒவ்வொரு நாளும் 10 ,000 அடிகள் நடந்து 100 அல்லது அதற்கு மேற்பட்ட கலோரிகள் எரிக்க முயற்சி செய்யுங்கள். இந்த சிறிய முயற்சி மூலம் ஒரு ஆண்டுக்குள் 10 பவுண்டுகள் அல்லது அதற்கு மேலாக குறைக்க முடியும்.

கலோரிகள் நிறைந்த நீர் ஆதாரங்களை தவிர்க்கவும்

சோடா, இனிப்பு பானங்கள் போன்ற இனிப்பான ஐஸ் தேநீர் மற்றும் மதுபானம் போன்றவற்றை நீக்குவது சிறந்தது. ஏனென்றால், இத்தகைய பானங்கள்உங்களுக்கு தேவையற்ற கலோரிகளை நாள்முழுவதும் சேர்க்கும். மேலும் அதிக கொழுப்பினை கொண்ட பாலை தவிர்த்து குறைந்த கொழுப்பினை கொண்ட பால் பொருள்களை நுகரவும்.

க்ரீன் டீ குடிக்கவும்

க்ரீன் டீ 3-5 கப் குடிக்கும் போது 35- 43% கொழுப்பு எரிக்கலாம் என்று சமீபத்திய ஆய்வுகள் காட்டுகின்றன. நீங்கள் உங்கள் வீட்டிலேயே க்ரீன் டீ தயாரித்து குடிக்கவும். இவற்றை, தயாரிக்க சிலமணித்துளிகளே எடுத்து கொள்ளும்.

காபி அருந்தவும்

நன்கு தரமான காபி ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் கொண்டுள்ளது. இவை நமக்கு பல ஆரோக்கியத்தில் நேர்மறையான விளைவுகளை தருகிறது. மேலும், காபியில் உள்ள காஃபின் வளர்சிதைமாற்றத்தை அதிகரித்து கொழுப்புகளை எரிக்கிறது என்று ஆய்வுகள் காட்டுகின்றன.

அவிழ்த்த முட்டை சாப்பிடுங்கள்

அவிழ்த்த முட்டையை சாப்பிடுவது என்பது எடை இழக்க உதவுவது உட்பட அனைத்து விதமான உடல் ஆரோக்கிய நன்மைகளையும் பெற முடியும். காலையில் அரைத்த உணவு வகைகளுக்கு பதிலாக அவிழ்த்த முட்டையுடன் குறைவான கலோரிகள் கொண்ட உணவை சாப்பிட்டால் அடுத்த 36 மணிநேரத்திற்குள் கணிசமான உடல் கொழுப்புகளை குறைக்க முடியும் என்று ஆய்வுகள் காட்டுகின்றன. (1)

சர்க்கரை உடல் எடையை அதிகரிக்கும்

வெள்ளை சர்க்கரையை எடுத்துக்கொள்வது என்பது உடல் பருமனை அதிகரிப்பதோடு, நீரிழிவு மற்றும் இதய நோய் உள்ளிட்ட நோய்களின் ஆபத்தை அதிகரிக்கிறது என ஆய்வுகள் காட்டுகின்றன. அதனால், நீங்கள் எடை இழக்க விரும்பினால், நீங்கள் வழக்கமாக எடுத்துக்கொள்ளும் சர்க்கரையின் அளவை குறைத்துக்கொள்ளுங்கள்.(1)

சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரெட் உணவை தவிர்க்கவும்

வெள்ளை ரொட்டி மற்றும் பாஸ்தா போன்ற நாகரீக உணவுகள் என கருதப்படுபவை, நன்கு சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட் சர்க்கரையை கொண்டவை. இவை, மேலும் அவற்றின் ஊட்டச்சத்து பகுதிகள் பெரும்பாலும் அகற்றப்பட்டவை என்பதால், இவை பசியை நன்கு தூண்டி நம்மை அதிகம் உண்ண வைத்து உடல் பருமனை அதிகரிக்க கூடும்.

சாப்பிடுவதற்கு, சிறிய தட்டுகளை பயன்படுத்துங்கள்

சாப்பிடுவதற்கு சிறிய தட்டுகளை பயன்படுத்துவதால், சிலர் தானாகவே குறைந்த கலோரிகளை சாப்பிடுவதற்கு அவர்கள் மனதளவில் உந்தப்படுகிறார்கள் என சில ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

கலோரிகளின் அளவை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்

உடல் பருமன் கொண்டவர்கள், வெறுமனே சாப்பிடுவது மட்டும் போதாது, அவர்கள் உண்ணும் உணவின் கலோரிகளின் அளவை பற்றி விழிப்புணர்வுடன் இருப்பது உடல் பருமனை இழக்க உதவும் சிறந்த ஒரு செயல் ஆகும்.

அருகில் ஆரோக்கியமான உணவை வைத்துக்கொள்ளுங்கள்

நீங்கள் அதிகப்படியான பசி எடுக்கும்போது, ஆரோக்கியமற்ற உணவு வகைகளை சாப்பிட தூண்டும். இதைத்தடுக்க, உங்களுக்கு அருகில் செயற்கையாக தயாரிக்கப்பட்ட ஸ்நாக்ஸ் உணவு வகைகளை தவிர்த்து சிறிய பழங்கள், கொட்டைகள், கேரட், தயிர் மற்றும் வேகவைத்த முட்டை ஆகியவற்றை வைத்து கொண்டு உண்ணுங்கள்.

காரமான உணவுகளை சாப்பிடுங்கள்

மிளகாய் காஸ்பைசின் என்ற காரமான கலவையை கொண்டுள்ளது. இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும் மற்றும் சிறிய அளவிலான கொழுப்பை குறைக்கவும் முடியும்.

ஏரோபிக் உடற்பயிற்சி

ஏரோபிக் உடற்பயிற்சி (Aerobic Exercise) செய்வது என்பது உடலில் உள்ள கலோரிகளை எரிக்கவும் மற்றும் உங்கள் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான ஒரு சிறந்த வழியாகும். மேலும், இது தொடை கொழுப்பு, மற்றும் உங்கள் உறுப்புகளை சுற்றி வளரும் தேவையற்ற கொழுப்புகளை குறைக்க உதவும்.

நார்சத்துக்களை அதிகமாக எடுத்துக்கொள்ளுங்கள்

அதிகமான நார்ச்சத்துயை உணவில் சேர்த்து கொள்வது பெரும்பாலும் எடை இழப்பு பரிந்துரைக்கப்படுகிறது. இவற்றை உண்ணுவதால், உங்கள் பசியை கட்டுப்படுத்தி உங்கள் எடையை கட்டுப்படுத்த உதவுகிறது.

காய்கறிகள் மற்றும் பழங்கள் சாப்பிடுங்கள்

காய்கறிகள் மற்றும் பழங்கள் எடையை இழக்க பல பயனுள்ள பண்புகளை கொண்டுள்ளன. இவை குறைந்த அளவு கலோரிகளையும், அதிகமான நார்சத்துக்களையும் கொண்டுள்ளதால், உடல் எடையை குறைக்க உதவுவது மட்டும் அல்லாமல் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் பெரிதளவில் உதவுகிறது.

புரத உணவுகளை உண்ணுங்கள்

புரதம் என்பது எடையை இழப்பதற்கு ஒரு மிக முக்கியமான ஊட்டச்சத்து ஆகும். உயர் அளவு புரோட்டீன் உணவை சாப்பிடுவது என்பது, வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து, எடையை இழக்க எளிதான மற்றும் மிகவும் பயனுள்ள வழிகளில் ஒன்றாகும்.

எடை குறைக்க உதவும் உணவுகள்

  • அவிழ்த்த முட்டை
  • அவிழ்த்த உருளை கிழங்கு
  • சூரை மீன்
  • வெண்ணெய் பழம்
  • ஆப்பிள்
  • கிவி பழம்
  • செம்பூற்று பழம்
  • எலும்மிச்சை
  • ஆரஞ்சு
  • வாழைப்பழம்

Leave a Comment

Your e-mail address will not be published. Required fields are marked *