பளிச் பளிச் முகத்திற்கு – Face Glowing Tips

        பளிச் பளிச் முகத்திற்கு ஒரு பயனுள்ள தீர்வை தேடுகிறீர்கள? அப்படியெனில், இது உங்களுக்கான வலைத்தளம். இங்கே, நாங்கள் ஒளிரும் தோல் மற்றும் முகத்திற்கான சிறந்த வீட்டு வைத்திய முறைகளை பற்றி பதிவிட்டுளோம்.

சந்தனம் மற்றும் மஞ்சள்

  சந்தனம் மற்றும் மஞ்சள் ஆகிய இரண்டும் ஆயுர்வேதத்தில் அவற்றின் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளுக்காக நன்கு அறியப்பட்டவை. ஆகையால், இதை சரும பராமரிப்பிலும் விரிவாகப் பயன்படுத்தப்படுகின்றன. மேலும், இவை முகப்பருவை உண்டாக்கும் பாக்டீரியாக்களைக் அழித்து, சருமத்தை தெளிவு படுத்தி அழகாக்குகிறது.

தேவையான பொருள்கள்:
 • 1 தேக்கரண்டி சந்தன தூள்
 • ½ தேக்கரண்டி மஞ்சள்
 • 2-3 தேக்கரண்டி தேன்
செய்முறை:
 • சந்தன தூள், மஞ்சள், மற்றும் தேன் ஆகிய அனைத்து பொருட்களையும் சேர்த்து பேஸ்ட் போல தயாரிக்கவும்.
 • அதை உங்கள் முகம் முழுவதும் தடவவும்.
 • பின்னர், அது காய்ந்து போகும் வரை அப்படியே விட்டுவிடவும்.
 • இறுதியாக, குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும்.

துளசி இலைகள்

       பொதுவாக, வியாதிகளை எதிர்த்துப் போராடுவதிலிருந்து, உங்கள் சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பது வரை துளசி என அறியப்படும் அதிசய மூலிகை ஆயுர்வேத சிகிச்சையில் ஒரு சிறப்பு இடத்தைப் பிடித்துள்ளது. மேலும், துளசி இலைகள் உங்கள் சரும உள்ள அழுக்குகளை வெளியேற்றி உங்கள் சருமத்தை பிரகாசமாக்கும்.

தேவையான பொருள்கள்:
 • ஒரு சில துளசி இலைகள்
 • 1 தேக்கரண்டி காய்ச்சாத பால்
செய்முறை:
 • துளசி இலைகளை நன்கு அரைத்து பேஸ்ட் போல செய்யவும்.
 • அதனுடன் சிறிது காய்ச்சாத பாலை கலந்தால் பேஸ்ட் போன்ற நிலைத்தன்மையைக் கொடுக்கும்.
 • இந்த ஃபேஸ் பேக்கைப் முகத்தில் தடவி 20 நிமிடங்கள் வரை அப்படியே விட்டுவிடவும்.
 • பிறகு, குளிர்ந்த நீரில் முகத்தை கழுவவும்.

சந்தனம் மற்றும் தயிர்

      பளபளப்பான சருமத்திற்கு ஆயுர்வேத மருத்துவத்தில் சந்தனம் ஒரு பொதுவான மூலப்பொருள் ஆகும். தயிரில் உள்ள பண்புகள் சருமத்தில் பிரகாசமான மற்றும் ஈரப்பதமூட்டும் விளைவைக் கொண்டுள்ளது. ஆகையால், இந்த கலவை சருமத்தை நன்கு சுத்தம் செய்து, கிருமிகளையும் பாக்டீரியாக்களையும் கொன்று, முகத்தை புதியதாகவும் பிரகாசமாகவும் தோற்றமளிக்க உதவுகிறது.

தேவையான பொருள்கள்:
 • 1 டீஸ்பூன் சந்தன தூள்
 • 1/2 டீஸ்பூன் பால்
 • 1/2 டீஸ்பூன் தயிர்
 • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
செய்முறை:
 • மேற்கண்ட அனைத்தையும் கலந்து ஒரு பேஸ்ட் போல செய்யவும்.
 • உங்கள் முகம் மற்றும் கழுத்து முழுவதும் நன்கு தடவும்.
 • இவை வறண்டு உங்கள் தோல் இறுக்கமாக ஆகும் வரை அப்படியே விடவும்.
 • பின்னர், குளிர்ந்த நீரில் முகத்தை கழுவவும்.

கடலை மாவு

       கடலை மாவு ஒரு அற்புதமான தோல் சுத்திகரிப்பு ஆண்டிமைக்ரோபியல் பண்புகளை கொண்டுள்ளது. இவை கருமையான புள்ளிகள் மற்றும் நிறமி ஆகியவற்றை அகற்ற உதவும்.

தேவையான பொருள்கள்:
 • 2 தேக்கரண்டி கடலை மாவு
 • ½ டீஸ்பூன் எலுமிச்சை சாறு
 • 1 டீஸ்பூன் பால்
செய்முறை:
 • அனைத்து பொருட்களையும் நன்றாக கலந்து பேஸ்ட் செய்து கொள்ளவும்.
 • பின்னர், அதை உங்கள் முகத்தில் நன்றாக தடவவும்.
 • பின்னர், அதை முழுமையாக உலர விடுங்கள்.
 • பிறகு வெதுவெதுப்பான நீரை கொண்டு கழுவவும்.

குங்குமப்பூ மற்றும் கற்றாழை

     குங்குமப்பூ உங்கள் சருமத்தை சூரியனிடமிருந்து வரும் கதிரியக்கத்திலிருந்து பாதுகாத்து களங்கமில்லாமல் வைத்திருக்க உதவுகிறது.

தேவையான பொருள்கள்:
 • ஒரு சிட்டிகை குங்குமப்பூ இழைகள்
 • 1 டீஸ்பூன் பால்
 • 1 தேக்கரண்டி கற்றாழை ஜெல்
செய்முறை:
 • பாலில் குங்குமப்பூ இழைகளை கலந்து ஒரு இரவு முழுவதும் ஊற வைக்கவும்.
 • அடுத்த நாள், கற்றாழை ஜெல்லுடன் இதை நன்றாக கலக்கவும்.
 • இதை உங்கள் முகத்தில் தடவி அரை மணி நேரம் வரை வைத்திருக்கவும்.
 • பின்னர், குளிர்ந்த தண்ணீரை கொண்டு முகத்தை கழுவ வேண்டும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *