சருமம் மினுமினுக்க.. – Glowing Skin Tips

         ஒளிரும் சருமத்திற்கான எளிய மற்றும் பயனுள்ள வீட்டு வைத்திய குறிப்புகளை பற்றி இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. இவை நிச்சியமாக, உங்களது முகத்தை பளிச்சென்று வைத்திருக்க உதவுகிறது.

உலர்த்தப்பட்ட ஆரஞ்சு தோல் தூள்

       உலர்த்தப்பட்ட ஆரஞ்சு தோல், வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்களை அதிக அளவில் கொண்டுள்ளது. ஆகையால், இவை உங்கள் சருமத்தை தெளிவாகவும் பிரகாசமாகவும் வைத்திருக்கும்.

தேவையான பொருள்கள்:
 • 1 தேக்கரண்டி உலர்த்தப்பட்ட ஆரஞ்சு தோல் தூள்
 • 2 தேக்கரண்டி தயிர்
செய்முறை:
 • உலர்த்தப்பட்ட ஆரஞ்சு தோல் தூள் மற்றும் தயிரை நன்கு கலந்து பேஸ்ட் போல செய்யவும்.
 • இதை உங்கள் முகத்தில் தடவி கொள்ளவும்.
 • இதை 20 நிமிடங்கள் வரை அப்படியே வைத்திருங்கள்.
 • பின்னர், அதை நீரில் முகத்தை கழுவவும்.

உருளைக்கிழங்கு

       உருளைக்கிழங்கு, ஸ்டார்ச் மற்றும் லேசான ப்ளீச்சிங் பண்புகளைக் கொண்ட உணவு பொருள் ஆகும். அவை நிறமி, கரும் புள்ளிகள் மற்றும் வடுக்களை இயற்கையாகவே மங்க செய்ய உதவுகிறது. மேலும், இவற்றில் முன்கூட்டிய வயதாவதை தடுக்க உதவும் என்சைம்களும் இதில் அடக்கிங்கியுள்ளன.

தேவையான பொருள்கள்:
 • 1 உருளைக்கிழங்கு
 • பருத்தி பந்து
செய்முறை:
 • உருளைக்கிழங்கை நன்றாக நசுக்கி அதன் சாறை பிழிந்து எடுக்கவும்.
 • பின்னர், பருத்தி பந்தை கொண்டு உருளைக்கிழங்கு சாற்றில் நனைத்து பாதிக்கப்பட்ட பகுதியில் பயன்படுத்தவும்.
 • பிறகு, ஒரு இரவு முழுவதும் வரை அப்படியே விட்டு விடுங்கள்.
 • பின்னர், அடுத்த நாள் அதை கழுவ வேண்டும்.

சுருக்கங்களைத் தடுக்க உதவும் வெந்தயம்

       வெந்தய இலைகளில் சருமத்தின் சுருக்கங்களை போக்கக்கூடிய அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. ஆகையால், நீங்கள் வெந்தய இலைகள் மற்றும் அதன் விதைகள் ஆகிய இரண்டையும் பயன்படுத்தி உங்கள் சருமத்திற்கு மெருகேற்றுங்கள்.

தேவையான பொருள்கள்:
 • ஒரு சில புதிய வெந்தய இலைகள் அல்லது 1 தேக்கரண்டி வெந்தயம்
செய்முறை:
 • வெந்தயம் இலைகளை நன்கு அரைத்து பேஸ்ட் போல செய்யவும்.
 • இதை உங்கள் முகம் முழுவதும் பயன்படுத்துங்கள்.
 • நீங்கள் வெந்தயம் விதைகளைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், அதை தண்ணீரில் கொதிக்க வைத்து, அந்த தண்ணீரை பருத்தி துணி கொண்டு முகம் முழுவதும் பயன்படுத்துங்கள்.
 • இதை 30 நிமிடங்கள் அல்லது ஒரு மணி நேரம் வரை அப்படியே விட்டு விடுங்கள்.
 • பின்னர், வெதுவெதுப்பான தண்ணீரை கொண்டு கழுவவும்.

நெய் மசாஜ்

       மாட்டின் தூய்மையான நெய்யை உங்கள் முகத்தில் தடவும்போது, அது கொலாஜன் உற்பத்தியை அதிகரித்து சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்கிறது, மேலும் வயதாகும் செயல்முறையையும் குறைக்கிறது.

தேவையான பொருள்கள்:
 • டீஸ்பூன் தூய்மையான மாட்டின் நெய்
 • ஒரு சில துளி நீர்
செய்முறை:
 • தண்ணீர் மற்றும் நெய்யை நன்கு கலக்கவும்.
 • கலவையை உங்கள் முகத்தில் தடவும்.
 • பின்னர், 10 நிமிடங்கள் வரை வட்ட இயக்கங்களில் மசாஜ் செய்யவும்.
 • உங்கள் சருமம் குறைந்தது அரை மணி நேரமாவது அதை உறிஞ்சட்டும்.
 • நீங்கள் விரும்பினால் அதை ஒரு இரவு முழுவதும் விட்டுவிடலாம்.
 • பின்னர், அதை மெதுவாக கழுவ வேண்டும்.

கடலை மாவு

  கடலை மாவு, ஆண்டிமைக்ரோபியல் பண்புகளைக் கொண்டுள்ள ஒரு அற்புதமான தோல் சுத்திகரிப்பு பொருள் ஆகும். பொதுவாக, இவை கருமையான புள்ளிகள் மற்றும் நிறமி ஆகியவற்றை அகற்ற உதவும்.

தேவையான பொருள்கள்:
 • 2 தேக்கரண்டி கடலை மாவு
 • ½ டீஸ்பூன் எலுமிச்சை சாறு
 • 1 டீஸ்பூன் பால்
செய்முறை:
 • மேற்கொண்ட பொருள்களை நன்றாக கலந்து உங்கள் முகத்தில் தடவவும்.
 • பின்னர், அதை முழுமையாக உலரும் வரை அப்படியே விட்டு விடுங்கள்.
 • பிறகு, வெதுவெதுப்பான தண்ணீரில் முகத்தை கழுவவும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *