க்ரீன் டீ பயன்கள் – Green Tea Uses in Tamil

            “க்ரீன் டீ” உலகின் மிகவும் பிரபலமான தேநீர் பானமாகும். பொதுவாக, இவை “கேமல்லியா சினென்சிஸ்” என்ற ஒரு வகை தாவரத்தின் இலைகளிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இதன் இலைகளிலிருந்து தயாரிக்கப்படும் தூளை கொண்டு, ஒரு டீ-யை தயாரித்து அதை சூடாகவோ, அல்லது குளிராகவோ குடித்து இதன் அளப்பரிய நன்மைகளை அனுபவிக்க முடியும்.

green tea benefits in tamil

க்ரீன் டீ பயன்கள்

      க்ரீன் டீ அதன் அதிக அளவு ஆன்டி ஆக்ஸிஜனேற்ற உள்ளடக்கதின் காரணமாகவே பிரபலமடைந்து வருகிறது. ஏனெனில், இதன் சக்திவாய்ந்த ஆன்டி ஆக்ஸிஜனேற்றீகள் பல நன்மைகளை நமது உடலுக்கு வழங்கி வருகிறது. அவற்றை பற்றி கீழே சற்று விரிவாக காண்போம்.

green tea uses in tamil

க்ரீன் டீ "உடல் பருமனை" குறைக்கிறது

       “க்ரீன் டீ” அருந்துவதால் கிடைக்கும் மிகவும் பிரபலமான நன்மைகளுள் ஒன்று தான் “உடல் எடையை குறைக்க உதவும்” என்பது. ஆகையால், இது எவ்வாறு உடல் எடையை குறைக்க உங்களுக்கு உதவுகிறது என்பது பற்றி இங்கே தொகுக்கப்பட்டுள்ளது.

          க்ரீன் டீயில், “கேடசின்ஸ்” மற்றும் “காஃபின்” எனப்படும் ஒரு வகை ஆன்டி-ஆக்ஸிஜனேற்றிகள் உள்ளன. இவை, உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பிணை எரிக்க உதவுகின்றன. 

       க்ரீன் டீ, “தியானைன்” எனப்படும் ஒரு வகை அமினோ அமிலத்தை கொண்டுள்ளது. இந்த அமிலம், மன அழுத்தத்தை குறைத்து மூளைக்கு அமைதியை அளிக்கிறது. இந்த விளைவு, மன அழுத்தத்தினால் பருமனான உடல் எடையை குறைக்க உதவுகின்றது.

     க்ரீன் டீ,  Zero  கலோரி மற்றும் Zero கொழுப்பினை கொண்ட ஒரு தேநீர் பானமாகும். ஆகையால், இவற்றை அருந்துவது, உடலில் எவ்வித கலோரிகளையோ அல்லது கொழுப்பினையோ உடலில் சேர்க்காது. 

க்ரீன் டீ-யின் கலோரி அட்டவணை
Calorie InformationAmount per 100 gramsPercent Daily Values
Calories1.5 (6.3 kJ)0%
Carbohydrate1.5 (6.3 kJ)
Fat0.0 (0.0 kJ)
Protein0.0 (0.0 kJ)
green tea uses

சரும பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் "க்ரீன் டீ"

      க்ரீன் டீயில் உள்ள “பாலிபினால்கள்“, சரும பிரச்சினைகளுக்கு ஒரு மிகச் சிறந்த தீர்வு ஆகும். ஏனெனில், இவை சருமத்தில் உள்ள தொற்று மற்றும் பாக்டீரியா சவ்வுகளை நீக்கி, முகப்பரு மற்றும் பருக்களுக்கு தீர்வளிக்கிறது.

சருமத்தை நீரேற்றம் செய்வதில், க்ரீன் டீயை விட வேறு எதுவும் சிறப்பாக செயல்பட வாய்ப்பில்லை. ஏனெனில், இவை சருமத்தை சிறப்பாக நீரேற்றம் செய்து, வயதாகும் அறிகுறிகளை திறம்பட குறைக்கின்றது.

     மேலும், இவை கொலாஜன் அளவை மேம்படுத்தி சருமத்தை இளமையாகவும் மிருதுவாகவும் வைத்திருக்கும்.

குறுந்செய்தி !
க்ரீன் டீ பைகளை எடுத்து வெதுவெதுப்பான தண்ணீரில் ஊறவைத்து கண்களில் சுமார் 15 நிமிடங்கள் வைத்திருந்தால், சோர்வான கண்கள் மற்றும் கருவளையங்களுக்கு தீர்வளிக்கும்.
green tea uses

"க்ரீன் டீ" முடி உதிர்தலை கட்டுப்படுத்தும்

         க்ரீன் டீயில் உள்ள “கேடசின்கள்“, முடி உதிர்தலுக்கு காரணமான டைஹைட்ரோடெஸ்டோஸ்டிரோன் (டி.டி.எச்)-யை குறைத்து முடி உதிர்தலை கட்டுப்படுத்த உதவுகிறது.

        க்ரீன் டீயில் காணப்படும் “பாலிபினால்கள்“, முடியின் வேர்களுக்கு ஊட்டமளித்து முடி மீண்டும் வளர வழிவகுக்கிறது. மேலும், இவை பொடுகு மற்றும் உச்சந்தலையில் ஏற்படும் வறட்சியை நீக்கவும் உதவுகிறது.

green tea uses

"க்ரீன் டீயும்" அதன் புற்றுநோய் தடுப்பும்

         “ஆக்ஸிஜனேற்ற சேதம்” புற்றுநோயின் வளர்ச்சிக்கு பங்களிக்கிறது என்பதும், “ஆன்டி ஆக்ஸிஜனேற்றிகள்” கொண்ட உணவுகள் ஒரு பாதுகாப்பு விளைவை ஏற்படுத்தும் என்பதும் அனைவரும் அறிந்ததே. க்ரீன் டீ சக்திவாய்ந்த ஆன்டி ஆக்ஸிஜனேற்றிகளின் ஒரு மிகச் சிறந்த ஆதாரமாகும். எனவே, க்ரீன் டீ புற்றுநோய்களின் அபாயத்தை பெருமளவில் குறைக்க வழிவகுக்கிறது.

       சில ஆய்வுகளில் பின்வரும் வகை புற்றுநோய்களுக்கு க்ரீன் டீ நேர்மறையான தாக்கங்களை ஏற்படுத்துகின்றன என காட்டுகின்றன.

புரோஸ்டேட் புற்றுநோய்
தோல் புற்றுநோய்
வயிறு புற்றுநோய்
நுரையீரல் புற்றுநோய்
உணவுக்குழாய் புற்றுநோய்
பெருங்குடல் புற்றுநோய்
கருப்பை புற்றுநோய்
சிறுநீர்ப்பை புற்றுநோய்
மார்பக புற்றுநோய்
குறுந்செய்தி !
க்ரீன் டீயில் உள்ள "பாலிபினால்கள்", புற்றுநோய்களின் உயிரணுக்களைக் கொல்லவும், அவை வளரவிடாமல் தடுக்கவும் உதவுவதாக ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.

தீங்குகள்:

       பொதுவாக, க்ரீன் டீயை உங்கள் வழக்கமான அன்றாட உணவில் 3–6 கப் (0.7–1.2 லிட்டர்) வரை மட்டுமே சேர்க்க படுவதை உறுதி செய்துகொள்ளுங்கள். ஏனெனில், கிரீன் டீ அருந்துவதால் உடலுக்கு அதிகமான நன்மைகளை வழங்கி இருந்தபோதிலும், இவற்றை அதிகமாக அருந்துவதால் உடலுக்கு சில தீமைகளையும் விளைவிக்கின்றன. அவை பின்வருமாறு..

  • அதிகப்படியான காஃபின் உட்கொள்வது பதட்ட உணர்வுகளை அதிகரிக்கும், தூக்கத்தில் குறுக்கிட்டு வயிற்று வலி மற்றும் சிலருக்கு தலைவலியை ஏற்படுத்தலாம்.
  • உண்மையில், கேடசின்களை அதிக அளவில் உட்கொள்வது இரும்புச்சத்து குறைபாட்டை அதிகரித்து இரத்த சோகைக்கு வழிவகுக்கும்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *