Health benefits of banana in tamil

    வாழைப்பழங்கள் இனிமையான சுவை மற்றும் எளிதாக சாப்பிட கூடிய இயற்கை உணவாகும். அதுமட்டுமல்லாமல் அவை பல அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்களால் நிறைந்தவை. 

    பெரும்பாலான மக்கள் வாழைப்பழங்களை பழுத்தவுடன் மட்டுமே சாப்பிடுவார்கள். ஆனால் இவற்றை பழுக்க வைக்காமல் சாப்பிட்டாலும் பாதுகாப்பானவையே.  இந்த பழுக்க வைக்காத மற்றும் நன்கு பழுத்த பழத்தின் சில ஆரோக்கிய நலன்களை இங்கே பட்டியலிட்டுளோம்.

இதயத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும்

    பொட்டாசியம் என்பது இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி இதய ஆரோக்கியத்திற்கு உதவக்கூடிய ஒரு அத்தியாவசியமான  கனிமமாகும். மேலும், அதிகமான பொட்டாசியத்தை எடுத்துக்கொள்வதால்   27% சதவீதம் வரை இதய நோய் ஏற்படும் ஆபத்தை குறைக்க உதவுகிறது. 

   ஒரு நடுத்தர அளவிலான வாழைப்பழத்தில் ஒருநாளைக்கு தேவையான 9% சதவீத பொட்டாசியத்தை கொண்டுள்ளதால், இவற்றை உண்பது இதய ஆரோக்கியத்தை சிறந்த அளவில் பராமரிக்க உதவும். மேலும், வாழைப்பழங்களில் போதுமான அளவு மெக்னீசியமும்  உள்ளது. இவையும் ஒரு சிறந்த இதய ஆரோக்கியத்தை ஊக்குவிக்க கூடிய கனிமமாகும்.

சிறுநீரக ஆரோக்கியத்திற்கு உதவும்

   ஒரு ஆரோக்கியமான சிறுநீரக செயல்பாட்டிற்கு பொட்டாசியம் மிக மிக அவசியமான கனிமமாகும். பொட்டாசியத்தின் ஒரு நல்ல உணவு ஆதாரமாக வாழை பழங்கள் இருப்பதால், சிறுநீரகங்களின் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது. மேலும், வாரத்திற்கு 2-3 முறை வாழைப்பழம் சாப்பிடுபவர்களுக்கு சிறுநீரக நோய் வருவதற்கான வாய்ப்பு 50% சதவீதம் வரை குறைவு என்றும் சில ஆய்வு முடிவுகளும்  தெரிவிக்கின்றன.

எடையை இழக்க உதவும்

    வாழை பழங்களில் உள்ள பல பண்புக்கூறுகள் எவ்வாறு எடையை இழக்க உதவக்கூடும் என்பதை இங்கே காண்போம். 

  • முதலில், வாழைப்பழங்களில் ஒப்பீட்டளவில் குறைந்த கலோரிகள் கொண்ட உணவாகும்.
  • காய்கறிகள் மற்றும் வாழைப்பழங்கள் போன்ற உணவுகளில் உள்ள நார்சத்துக்களை சாப்பிடுவது உடல் எடை மற்றும் எடை இழப்புடன் அதிக அளவில் தொடர்புபடுத்தப்பட்டுள்ளன.
  • சற்று பழுக்காத வாழைப்பழங்களில் எதிர்க்கும் ஸ்டார்ச் எனப்படும் ஒரு வகை நார்சத்து உள்ளது. அவை உங்கள் வயிறை விரைவில் நிரப்பி உங்கள் பசியைக் பெருமளவில் குறைக்கிறது. இதனால், நீங்கள் அதிகம் உண்பதை தவிர்த்து உங்கள் எடையை இழப்பீர்கள்.

சீரான குடல் இயக்கத்திற்கு உதவும்

    நார்சத்து என்பது ஒரு நன்கு மேம்பட்ட செரிமானம் உட்பட பல ஆரோக்கிய நன்மைகளுடன் தொடர்புடைய மிக முக்கிய ஊட்டச்சத்தாகும். ஒரு சிறிய அளவிலான வாழைப்பழத்தில் சுமார் 3 கிராம் வரை நார்ச்சத்துகள் உள்ளன. இதனால், வாழைப்பழம் என்பது நார்சத்தின் சிறந்த மூலமாக கருதப்படுகிறது. 

  குறிப்பாக, வாழைப்பழங்களில் இரண்டு வகையான நார்ச்சத்துக்கள் உள்ளன. அவை குடலில் உள்ள நன்மை பயக்கும் பாக்ட்ரியாக்களுக்கு உணவாகவும் மற்றும் குடலின் செரிமானத்திற்கும் உதவுகிறது. 

பெருங்குடல் புற்றுநோயை எதிர்க்கும்

   பழங்கள் மற்றும் காய்கறிகள் ஆன்டி ஆக்ஸிஜனேற்றத்தின் சிறந்த ஆதாரங்கள் ஆகும். இதற்கு வாழைப்பழங்களும் விதிவிலக்கல்ல. வாழைப்பழங்கள் டோபமைன் மற்றும் கேடசின்கள் உள்ளிட்ட பல சக்திவாய்ந்த ஆன்டி ஆக்ஸிஜனேற்றங்களை உள்ளடக்கியது. இந்த ஆன்டி ஆக்ஸிஜனேற்றிகள், புற்றுநோய்கள் ஏற்படும் அபாயத்தை குறைக்க உதவுகிறது. குறிப்பாக, பெருங்குடல் புற்றுநோயிலிருந்து பாதுகாக்க உதவும் என்று சில சோதனை-குழாய் முடிவுகளை கொண்டு முன்மொழியப்படுகிறது.

இரத்ததில் உள்ள சர்க்கரை அளவை மிதப்படுத்தும்

     வாழைப்பழத்தில் பெக்டின் என்ற ஒரு வகை நார்ச்சத்துகள் நிறைந்துள்ளது. இவைதான் வாழைப்பழ சதைக்கு அதன் பஞ்சுபோன்ற கட்டமைப்பு வடிவத்தை கொடுப்பவை.   இந்த பெக்டின்கள் மற்றும் இதில் உள்ள மாவுச்சத்துகள் இரண்டும் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை மிதப்படுத்தலாம். மேலும், இவை உங்கள் வயிற்றை முழுமையாக நிறைத்து பசியையும் குறைக்கும். இருப்பினும், நீரிழிவு நோயாளிகளுக்கு இது பொருந்தாது. அவர்கள் நன்கு பழுத்த வாழைப்பழங்களை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது

100 கிராம் வாழைப்பழத்தில் உள்ள ஊட்டச்சத்துக்களின் மதிப்பு ( in tamil )


  • Vitamin A 64.0 IU
  • Retinol Activity Equivalent 3.0 mcg
  • Alpha Carotene 25.0 mcg
  • Beta Carotene 26.0 mcg
  • Lutein+Zeaxanthin 22.0 mcg
  • Vitamin C 8.7 mg
  • Folate 20.0 mcg
  • Food Folate 20.0 mcg
  • Dietary Folate Equivalents 20.0 mcg
  • Choline 9.8 mg

ஊட்டச்சத்து மதிப்புக்களின் அட்டவணை

Calorie InformationAmount per 100 gramsPercent Daily Values
Calories89.0 (373 kJ)4%
Carbohydrate82.6 (346 kJ)
Fat2.8 (11.7 kJ)
Protein3.7 (15.5 kJ)

CarbohydratesAmount per 100 gramsPercent Daily Values
Total Carbohydrate22.8 g8%
Dietary Fiber2.6 g10%
Starch5.4 g
Sugars12.2 g
Sucrose2390 mg
Glucose4979 mg
Fructose4850 mg
Maltose10.0 mg

Fats & Fatty AcidsAmount per 100 gramsPercent Daily Values
Total Fat0.3 g1%
Saturated Fat0.1 g1%
Polyunsaturated Fat0.1 g
Total Omega-3 fatty acids27.0 mg
Total Omega-6 fatty acids46.0 mg

Protein & Amino AcidsAmount per 100 gramsPercent Daily Values
Protein1.1 g2%
Tryptophan9.0 mg
Threonine28.0 mg
Isoleucine28.0 mg
Leucine68.0 mg
Lysine50.0 mg
Methionine8.0 mg
Cystine9.0 mg
Phenylalanine49.0 mg
Tyrosine9.0 mg
Valine47.0 mg
Arginine49.0 mg
Histidine77.0 mg
Alanine40.0 mg
Aspartic acid124 mg
Glutamic acid152 mg
Glycine38.0 mg
Proline28.0 mg
Serine40.0 mg

VitaminsAmount per 100 gramsPercent Daily Values
Vitamin A64.0 IU1%
Retinol Activity Equivalent3.0 mcg
Alpha Carotene25.0 mcg
Beta Carotene26.0 mcg
Lutein+Zeaxanthin22.0 mcg
Vitamin C8.7 mg15%
Vitamin E (Alpha Tocopherol)0.1 mg1%
Vitamin K0.5 mcg1%
Riboflavin0.1 mg4%
Niacin0.7 mg3%
Vitamin B60.4 mg18%
Folate20.0 mcg5%
Food Folate20.0 mcg
Dietary Folate Equivalents20.0 mcg
Pantothenic Acid0.3 mg3%
Choline9.8 mg
Betaine0.1 mg

MineralsAmount per 100 gramsPercent Daily Values
Calcium5.0 mg1%
Iron0.3 mg1%
Magnesium27.0 mg7%
Phosphorus22.0 mg2%
Potassium358 mg10%
Sodium1.0 mg0%
Zinc0.2 mg1%
Copper0.1 mg4%
Manganese0.3 mg13%
Selenium1.0 mcg1%
Fluoride2.2 mcg

SterolsAmount per 100 gramsPercent Daily Values
Phytosterols16.0 mg

OtherAmount per 100 gramsPercent Daily Values
Water74.9 g
Ash0.8 g

Leave a Comment

Your e-mail address will not be published. Required fields are marked *