கேரட் – Health Benefits of Carrot Juice in Tamil

    உலகம் முழுவதும் உண்ணப்பட்டு வரும் மிகவும் பிரபலமான வேர் காய்கறிகளில் ஒன்று கேரட் ஆகும். இவற்றை, பச்சையாகவோ, சமைத்தோ அல்லது சாறாக பிழிந்தோ போன்ற பல வழிகளில் உண்ண முடியும். பொதுவாக கேரட் மஞ்சள், ஊதா, சிவப்பு மற்றும் வெள்ளை போன்ற பல வண்ணங்களில் கூட வருகிறது. 

  மிகவும் சுவாரஸ்யமாக, கேரட் ஜீயாக்சாண்டின், லுடீன், காமா-கரோட்டின், வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி, வைட்டமின் கே, தாதுக்கள் மற்றும் நார்ச்சத்து போன்ற பல ஊட்டச்சத்துக்களை தன்னுள் அடக்கியுள்ளது.

நோய்த்தடுப்பு அமைப்பை ஊக்குவிக்கிறது

கேரட் பழச்சாறு, அதன் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் அனைத்தையும் கொண்டு செறிவூட்டப்பட்ட ஒரு மிக சிறந்த பழச்சாறு ஆகும். இவற்றை, நீங்கள் ஒரு நாளைக்கு ஒரு கிளாஸ் மட்டுமே உட்கொண்டால், அது உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை ஊக்குவித்து, நோய்கள், சேதங்கள், வைரஸ்கள், பாக்டீரியா மற்றும் அழற்சிக்கு எதிராக உங்கள் உடலை பாதுகாக்க உதவுகிறது.

கொழுப்பு மற்றும் இரத்த சர்க்கரை பராமரிப்பு

கேரட் சாறில் பொட்டாசியம் அதிக அளவில் இருப்பதால், கொழுப்பின் அளவையும் மற்றும் இரத்த சர்க்கரை அளவையும் ஒரு ஆரோக்கியமான முறையில் பராமரிக்க உதவும். மேலும், கேரட்டில் சர்க்கரை மற்றும் கலோரிகள் குறைவாக இருப்பதால், இது நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும் மற்றும் நீரிழிவு நோய் வராமல் தடுக்க உதவும்.

கல்லிரலை சுத்தப்படுத்துகிறது ​

கேரட் ஜூஸ், தீங்கு விளைவிக்கும் நச்சுக்களிலிருந்தும் உங்கள் கல்லீரலை சுத்தம் செய்ய உதவும். இதில் இருக்கும் அதிக அளவு வைட்டமின் ஏ, உடலில் இருக்கும் நச்சுகளை வெளியேற்றுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும், இது கல்லீரலில் பித்தப்பை மற்றும் கொழுப்பு வைப்புக்களை குறைக்கிறது. கூடுதலாக, கேரட்டில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்து கழிவு மற்றும் பெருங்குடலை சுத்தப்படுத்த உதவுகிறது.

ஒளிரும் தோல் அமைப்பு

கேரட்டில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் பொட்டாசியம் போன்ற தாதுக்கள் அதிக அளவில் உள்ளன. அவை உங்கள் தோலின் செல்கள் உடைக்க படுவதை தடுக்க உதவுகின்றன. இதன் காரணமாக, கேரட் ஜூஸ் உங்கள் சருமத்தை இளமையாகவும் மற்றும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவும்.

​எலும்புகளை வலுப்படுத்த உதவும் ​

கேரட்டில் அதிக அளவு வைட்டமின் கே, நமது உடலுக்கு தேவையான புரதங்களை உருவாக்க உதவுகிறது. இதன் விளைவாக, இது நமது உடலின் கால்சியத்தின் செயலாக்கத்தை அதிகரித்து, உடைந்த எலும்புகளையும் வேகமாக குணப்படுத்துகிறது மற்றும் உங்கள் எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது.

வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது

கேரட்டில் உள்ள பாஸ்பரஸ், உங்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும் மற்றும் உங்கள் உடலுக்கு நாள் முழுவதும் போதுமான ஆற்றலைக் கொடுக்கக்கூடிய ஒரு ஊட்டச்சத்து ஆகும். மேலும், இதில் உள்ள பாஸ்பரஸ், கடினமான பயிற்சிக்குப் பிறகு உண்டாகும் எந்தவொரு வலி அல்லது வீக்கத்தையும் அகற்றவும் உதவுகிறது.

கேரட் ஜூஸில் உள்ள வைட்டமின் பி காம்ப்ளக்ஸ், உங்கள் உடலில் உள்ள கொழுப்பு, குளுக்கோஸ் மற்றும் புரத அளவை பராமரித்து, உடலில் தசையை உருவாக்கவும், வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும், மற்றும் எடையை குறைக்கவும் உதவுகிறது.

வாய்வழி சுகாதார பராமரிப்பு ​

கேரட், உங்கள் பற்கள் மற்றும் ஈறுகளில் உள்ள பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராட மற்றும் வாய்வழி ஆரோக்கியத்திற்கு பங்களிக்கும் ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளன. கேரட்டில் உள்ள சில தாதுக்கள், பாக்டீரியா எதிர்ப்பு, பற்களில் உண்டாகும் துவாரங்கள் மற்றும் பல் சிதைவைத் தடுக்க உதவுகின்றன. மேலும், இவை பற்களில் இருந்து கறைகளை நீக்க உதவும்.

புற்றுநோயை தடுக்கும் ​

உங்கள் உணவை நீங்கள் சாப்பிட்டு ஜீரணித்த பிறகு, உங்கள் உடலில் இருக்கும் சில தேவையற்ற கழிவுகள், உங்கள் உடலில் உள்ள உயிரணுக்களுக்கு பெரும் சேதத்தை உருவாக்கி புற்று நோயை ஏற்படுத்தும் ஃப்ரீ ரேடிகல்ஸ்-யை உருவாக்குகிறது. கேரட்டில் உள்ள நோய் தீர்க்கும் பண்புகள், புற்று நோய் ஏற்படுத்தும் செல்களுடன் எதிர்த்து போராடி புற்று நோய் அபாயத்தை குறைக்கிறது. (1)

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது

உங்கள் இதய ஆரோக்கியம் என்பது, போதுமான தூக்கம், உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருப்பது, உங்கள் மன அழுத்தத்தை குறைத்தல் மற்றும் ஆரோக்கியமான உணவை உட்கொள்வது உள்ளிட்ட பல காரணிகளைப் பொறுத்தது. இதற்கு, கேரட் பெரிய அளவில் உதவக்கூடும்.

ஏனெனில், அவை நார்ச்சத்து மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்தவை, அவை உங்கள் சீரான இரத்த ஓட்டத்திற்கு உதவுவதன் மூலமும், உங்கள் தமனி சுவர்களில் உள்ள தடைகளை அகற்றுவதன் மூலமும் உங்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகின்றன.

கண்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது

கேரட் உங்கள் கண்களின் ஆரோக்கியத்திற்கு உதவும் திறனுக்காக மிகவும் பிரபலமானது. இது பெரும்பாலும் லுடீன், பீட்டா கரோட்டின் மற்றும் ஜியாக்சாந்தின் போன்ற கண்களுக்கு அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்களை கொண்டிருக்கும். இதனால், இது கண் சிதைவு மற்றும் குருட்டுத்தன்மை போன்ற கண் நோய்களைத் தடுக்க உதவுகிறது.

மேலும், ஜாக்சன்டின் மற்றும் லுதின் போன்ற ஊட்டச்சத்துக்கள், வயதான காலத்தில் ஏற்படும் பார்வை இழப்புக்கு எதிராக போராடுவதில் மிகவும் முக்கியமானது. (1)

ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது

100 கிராம் கேரட் ஜூஸ்-இல் உள்ள ஊட்டச்சத்துக்களின் மதிப்பு

 • Vitamin A 19124 IU
 • Retinol Activity Equivalent 956 mcg
 • Alpha Carotene 4343 mcg
 • Beta Carotene 9304 mcg
 • Lycopene 2.0 mcg
 • Lutein+Zeaxanthin 333 mcg
 • Vitamin C 8.5 mg
 • Vitamin E (Alpha Tocopherol) 1.2 mg
 • Vitamin K 15.5 mcg
 • Folate 4.0 mcg
 • Food Folate 4.0 mcg
 • Dietary Folate Equivalents 4.0 mcg
 • Choline 9.9 mg

ஊட்டச்சத்து மதிப்புக்களின் அட்டவணை

Calorie InformationAmount per 100 gramsPercent Daily Values
Calories40.0 (167 kJ)2%
Carbohydrate36.1 (151 kJ)
Fat1.3 (5.4 kJ)
Protein2.6 (10.9 kJ)

CarbohydratesAmount per 100 gramsPercent Daily Values
Total Carbohydrate9.3 g3%
Dietary Fiber0.8 g3%
Sugars3.9 g

Fats & Fatty AcidsAmount per 100 gramsPercent Daily Values
Total Fat0.2 g0%
Polyunsaturated Fat0.1 g
Total Omega-3 fatty acids9.0 mg
Total Omega-6 fatty acids61.0 mg

Protein & Amino AcidsAmount per 100 gramsPercent Daily Values
Protein0.9 g2%

VitaminsAmount per 100 gramsPercent Daily Values
Vitamin A19124 IU382%
Retinol Activity Equivalent956 mcg
Alpha Carotene4343 mcg
Beta Carotene9304 mcg
Lycopene2.0 mcg
Lutein+Zeaxanthin333 mcg
Vitamin C8.5 mg14%
Vitamin E (Alpha Tocopherol)1.2 mg6%
Vitamin K15.5 mcg19%
Thiamin0.1 mg6%
Riboflavin0.1 mg3%
Niacin0.4 mg2%
Vitamin B60.2 mg11%
Folate4.0 mcg1%
Food Folate4.0 mcg
Dietary Folate Equivalents4.0 mcg
Pantothenic Acid0.2 mg2%
Choline9.9 mg

MineralsAmount per 100 gramsPercent Daily Values
Calcium24.0 mg2%
Iron0.5 mg3%
Magnesium14.0 mg3%
Phosphorus42.0 mg4%
Potassium292 mg8%
Sodium29.0 mg1%
Zinc0.2 mg1%
Manganese0.1 mg6%
Selenium0.6 mcg1%

OtherAmount per 100 gramsPercent Daily Values
Water88.9 g
Ash0.7 g

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *