Health Benefits of Lemon Juice

     எப்பொழுதுமே, ஒரு கப் நீரில் எலுமிச்சை சாறு கலந்து பருகுவது மிகவும் சுவையாகவும் இனிமையாகவும் இருக்கும். மேலும், சிலர் காபி அல்லது தேநீருக்கு பதிலாக எலுமிச்சை நீரில் தங்களது நாளை இனிமையாக தொடங்குகிறார்கள். ஏனெனில், இது உடல் ஆரோக்கியத்தை ஊக்குவிக்கவும் மற்றும் குணப்படுத்தவும் உதவுவதால் இதை உலகின் அமுதமாகவும் கருதுகின்றனர். 

   மேலும், இந்த பானம் கொழுப்பை உருக்கவும், முகப்பருவை நீக்கவும், உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்றவும் உதவும். அதனால், நங்கள் இந்த கட்டுரையில் எலுமிச்சை நீர் அருந்துவதால் நமக்கு கிடைக்கும் நன்மைகளை பற்றி விரிவாக பதிவிட்டுளோம்.

எலும்மிச்சை சாறு பருகுவதால் கிடைக்கும் பொதுவான பயன்கள்

  • நீரேற்றத்திற்கான சிறந்த பானம் நீர், நீருடன் எலுமிச்சையைச் சேர்ப்பது தண்ணீரின் சுவையை மேம்படுத்துகிறது. இதனால், நீங்கள் அதிகமான நீரை அருந்தி உங்கள் உடலை எப்பொழுதும் நீரேற்றமாக வைத்திருக்க முடியும்.
  • எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்களில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது. இந்த முதன்மை ஆன்டி ஆக்ஸிஜனேற்றிகள் உடலில் உள்ள DNA மற்றும் செல்களை பிரீ-ரேடிக்கல்ஸ்-ஆல் சேதப்படுத்தாமல் பாதுகாக்க உதவுகிறது.
  • இதில் உள்ள வைட்டமின் சி இரத்த அழுத்தத்தை குறைத்து உங்கள் இருதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கும்.
  • எலுமிச்சையில் காணப்படும் வைட்டமின் சி தோல் சுருக்கம், வறண்ட சருமம் மற்றும் சூரியனில் இருந்து வரும் கதிர்களால் சருமத்தில் ஏற்படும் சேதத்தை குறைக்க உதவும்.
  • மலச்சிக்கலைத் தடுக்க சிலர் தினமும் காலை மலமிளக்கியாக எலுமிச்சை நீரைக் குடிப்பார்கள். நீங்கள் எழுந்ததும் சூடான எலுமிச்சை நீரைக் குடிப்பது உங்கள் செரிமான அமைப்பை எளிமையா நகர்த்த உதவும்.
  • எலுமிச்சையின் புளிப்பு சுவை உடலின் “அக்னியை” தூண்ட உதவுகிறது என்று ஆயுர்வேத மருத்துவம் கூறுகிறது. மேலும், இவை உடலில் உள்ள அக்னி செரிமான அமைப்பைத் தொடங்கி உணவை எளிதில் ஜீரணிக்க அனுமதிக்கிறது மற்றும் நச்சுகள் உருவாகுவதைத் தடுக்க உதவுகிறது.
  • உணவுக்குப் பிறகு ஒரு கிளாஸ் எலுமிச்சை நீரை குடிப்பதன் மூலம், பூண்டு, வெங்காயம் அல்லது மீன் போன்ற வலுவான மணம் கொண்ட உணவுகளை சாப்பிடுவதால் மற்றும் பாக்டீரியாவால் ஏற்படும் துர்நாற்றத்தைத் தவிர்க்கலாம்.
  • எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலம் சிறுநீரக கற்கள் உருவாகுவதை தடுக்கவோ அல்லது அவற்றை வெளியேற்றவோ உதவக்கூடும்.

எலுமிச்சை மற்றும் தேன் இரண்டும் கலந்து சாப்பிட்டால்?

    எலுமிச்சை மற்றும் தேன் இரண்டும் கலந்து சாப்பிட்டால், அவை நமக்கு பல ஆரோக்கிய நன்மைகளை வழங்கும். அவற்றை பற்றி கீழே காண்போம்.

தேன், எலுமிச்சை சாறு கலந்து குடிப்பது உடல் எடையை குறைக்க உதவும்.

    பொதுவாக, போதுமான அளவு நீர் அருந்துவது உங்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து உங்கள் உடல் எடையை குறைக்கக்கூடும். இதனால், நீருடன் தேன், எலுமிச்சை சாறு கலந்து குடித்து உடலை நீரேற்றம் செய்வது ஆரோக்கியமான உடல் எடையை பராமரிக்க உதவும். இது எவ்வாறு சாத்தியம் என்பதை பற்றி கீழே காண்போம்.

   உணவுக்கு முன், தேன் எலுமிச்சை நீரைக் குடிப்பது உங்கள் வயிறை எளிமையாக நிரப்ப உதவும். இது நீங்கள் அதிகமான உணவு உட்கொள்வதை தவிர்த்து உடலில் அதிகமான கலோரிகள் சேருவதை குறைக்க வழிவகுக்கும்.

   சர்க்கரை சோடாக்கள் மற்றும் பிற இனிப்பு பானங்களுக்கு பதிலாக இந்த தேன், எலுமிச்சை சாறு கலந்த நீரை பருகுவது உடலில் அதிகமான கலோரிகள் மற்றும் சர்க்கரை சேருவதை குறைக்க வழிவகுக்கும்.

   உதாரணமாக, ஒரு 253-கிராம் சோடாவில் 110 கலோரிகளும், 30 கிராம் சர்க்கரையும் உள்ளன. மறுபுறம், ஒரு தேக்கரண்டி தேனுடன் தயாரிக்கப்பட்ட தேன் எலுமிச்சை நீரில் 253-கிராம் பரிமாறும்போது சுமார் 25 கலோரிகளும் 6 கிராம் சர்க்கரையும் உள்ளன.

   இதனால், நீங்கள் முன்பு குடிக்கும் இனிப்பு பானங்களை விட இதில் குறைவான சர்க்கரை மற்றும் குறைவான கலோரிகளை உட்கொள்வதால் உங்கள் எடை ஆரோக்கியமான முறையில் கணிசமாக குறைந்து வரும்.

உடல் ஆரோக்கிய பலன்கள்

   தேனின் இனிமையான நோய் தீர்க்கும் குணங்கள் மற்றும் எலுமிச்சையில் அதிக அளவு வைட்டமின் சி இருப்பதால், காலநிலை மாற்றத்தால் வரும் நோய்களை தவிர்க்க தேன் கலந்த எலுமிச்சை நீரைக் குடிப்பது நன்மை பயக்கும்.

   உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் வைட்டமின் சி ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக, வைட்டமின் சி உங்கள் உடலில் தொற்றுநோயை எதிர்த்துப் போராட உதவும் வெள்ளை இரத்த அணுக்களின் உற்பத்தியைத் தூண்ட உதவுகிறது. 

   வைட்டமின் சி மற்றும் தேன் சுவாச நோய்த்தொற்று மற்றும் குழந்தைகளின் இருமலின் தீவிரத்தையும் குறைக்கிறது. மேலும், சில  ஆய்வுகளில்  வைட்டமின் சி ஜலதோஷத்தின் வீரியத்தையும் குறைக்கிறது எனவும் கூறப்பட்டுள்ளது.

   கூடுதலாக, ஒரு கப் தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலந்த  வெதுவெதுப்பான நீரை பருகுவது தொண்டை புண் நோய்க்கு ஒரு இனிமையான தீர்வு. மேலும், நீங்கள் நோய்வாய்ப்பட்டிருக்கும்போது குடிக்கவும் இனிமையானது.

     உங்கள் செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருக்க உடலின் நீரேற்றம் சீராக இருப்பது அவசியம். ஏனென்றால், உடலின் நீரிழப்பு மலச்சிக்கலை ஏற்படுத்தும். குறிப்பாக குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் வயதானவர்களுக்கு இது ஒரு பொதுவான பிரச்சினை. 

   இதனால், தேன் கலந்த எலுமிச்சை நீரைக் குடித்து உங்கள் உடலில் நீரேற்றம் செய்வதன் மூலம் மலச்சிக்கலைக் குறைக்க உதவலாம். குறிப்பாக, வெற்று நீரைக் குடிக்க விரும்பாத குழந்தைகளுக்கு இந்த சுவையான பானத்தை கொடுத்து நீரேற்றம் செய்வதற்கு உதவியாக இருக்கும்.

   உங்கள் செரிமான அமைப்பை ஆரோக்கியமாகவும், சமநிலையுடனும் வைத்திருக்க உதவும் பாக்டீரியாவிற்கு இந்த தேன் கலந்த எலுமிச்சை சாறு மிகுந்த நன்மை பயக்கும்.

    தேன் எலுமிச்சை சாறு கலந்த நீரை குடிப்பதால், உங்கள் உடல் தோல், குடல், சிறுநீரகங்கள், கல்லீரல் மற்றும் சுவாச மற்றும் நோயெதிர்ப்பு அமைப்புகளைப் பயன்படுத்தி தன்னைத் தானே உடலின் கழிவுகளை மற்றும் நச்சுத்தன்மையை நீக்க உதவுகிறது.

ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது

100 கிராம் எலுமிச்சை ஜூஸ்-ல் உள்ள ஊட்டச்சத்துக்களின் மதிப்பு ( in tamil )


  • Vitamin A 20.0 IU
  • Retinol Activity Equivalent 1.0 mcg
  • Beta Carotene 3.0 mcg
  • Beta Cryptoxanthin 17.0 mcg
  • Lutein+Zeaxanthin 9.0 mcg
  • Vitamin C 46.0 mg
  • Folate 13.0 mcg
  • Food Folate 13.0 mcg
  • Dietary Folate Equivalents 13.0 mcg
  • Choline 5.1 mg

ஊட்டச்சத்து மதிப்புக்களின் அட்டவணை

Calorie InformationAmount per 100 gramsPercent Daily Values
Calories25.0 (105 kJ)1%
Carbohydrate23.7 (99.2 kJ)
Protein1.3 (5.4 kJ)

Leave a Comment

Your e-mail address will not be published. Required fields are marked *