Health benefits of red banana during pregnancy in tamil

    பெண்களின் கர்ப்பகாலம் என்பது ஒரு தாய்க்கு ஒரு உற்சாகமான காலம் ஆகும். அதே சமயம், குழந்தைக்கு வயிற்றில் வளர தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் கிடைப்பதை உறுதிசெய்ய ஆரோக்கியமாக சாப்பிட வேண்டிய நேரமும் இதுவாகும். 

red banana benefits during pregnancy

    குழந்தைகள் வளர தேவையான ஊட்டச்சத்துக்கள் அனைத்தையும் வழங்கக்கூடிய இயற்கை உணவுகளில் ஒன்று வாழைப்பழங்கள் ஆகும். இந்த பழம் குழந்தையின் வளர்ச்சிக்குத் எவ்வாறு தேவையான தாதுக்கள் மற்றும் வைட்டமின்களை வழங்குகின்றன என்பதை சற்று கீழே விரிவாக காண்போம்.

ஹீமோகுளோபினை அதிகரிக்கிறது!

     உடலில் ஏற்படும் இரும்புச்சத்து குறைபாடே ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருப்பதற்கு மிகவும் பொதுவான காரணம் ஆகும். பொதுவாக, பெரும்பாலான கர்ப்பிணி பெண்களுக்கு ஹீமோகுளோபின் அளவு மிகவும் குறைவாக இருப்பதால் அவர்கள் இரத்த சோகையால் பாதிக்கப்படுகின்றனர். 

    தினமும், வாழைப்பழம் சாப்பிடுவதால், உடலில் உள்ள இரத்த சிவப்பு ரத்த அணுக்களை அதிகரித்து ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவுகிறது. இதனால், இது கர்ப்ப காலத்தில் ஏற்படும் பல்வேறு வகையான சிக்கல்களைத் தடுக்க உதவுகிறது.

கர்ப்ப காலத்தில் ஏற்படும் குமட்டல் மற்றும் வாந்தியை நீக்குகிறது

     கர்ப்பிணிப் பெண்களுக்கு காலை நேரத்தில் குமட்டல் மற்றும் வாந்தி போன்ற உடல் உபாதைகள் ஏற்படுவது பொதுவானது ஆகும். இந்த கர்ப்பகால நேரத்தில் வாழைப்பழத்தை உட்கொள்வது குமட்டல் மற்றும் வாந்தி போன்ற உடல் உபாதைகளை கணிசமாக குறைக்க உதவுகிறது.

செவ்வாழை ஃபோலிக் அமிலத்தின் சிறந்த ஆதாரம்

    கருப்பையில் உள்ள குழந்தையின் மூளை மற்றும் முதுகெலும்புகளின் வளர்ச்சிக்கு வாழைப்பழங்கள் மிக மிக அவசியம் ஆகும். மேலும், உடலில் ஏற்படும் ஃபோலிக் அமிலக் குறைபாட்டைத் தடுக்கவும் வாழைப்பழங்கள் உதவுகின்றன. இதனால், குழந்தை முன்கூட்டியே பிறக்கும் அபாயத்தை தவிர்க்கவும் மற்றும் பிறப்பு குறைபாடுகளின் அபாயத்தையும் குறைக்கவும் உதவுகிறது.

ஆற்றலை அதிகரிக்க உதவுகிறது

     குளுக்கோஸ், பிரக்டோஸ் மற்றும் சுக்ரோஸ் போன்ற சர்க்கரைகள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் உள்ளடக்கம் அதிக அளவில் வாழைப்பழங்களில் இருப்பதால், அவை உடலால் விரைவாக வளர்சிதை மாற்றத்திற்கு உட்பட்டு ஒரு உடனடி ஆற்றலை உடலுக்கு அளித்து ஆற்றலை அதிகரிக்க உதவுகிறது.

குழந்தையின் நரம்பு மண்டலத்தின் வளர்ச்சிக்கு உதவுகிறது.

    வாழைப்பழங்கள் நீரில் எளிமையாக கரையக்கூடிய வைட்டமின் பி6 அதிக அளவில் கொண்டுள்ளது. இவை குழந்தையின் நரம்பு மண்டலத்தின் வளர்ச்சிக்கு மிகவும் தேவையான ஊட்டச்சத்தாகும். 

  இதனால், கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் வழக்கமாக வாழைப்பழத்தை எடுத்துக்கொள்வது குழந்தையின் மூளை மற்றும் நரம்பு மையத்தின் வளர்ச்சிக்கு மிகவும் நன்மை பயக்கும்.

செரிமான அமைப்புக்கு நன்மை பயக்கும்

   பொதுவாக, வாழை பழங்கள் ஏராளமான நார் மற்றும் பொட்டாசியம் போன்ற அத்தியாவசிய கனிமத்தை வழங்கும் ஒரு மிக சிறந்த இயற்கை உணவாகும். இதில் உள்ள பெக்டின், ஃபைபர் மற்றும் பொட்டாசியம் ஆகியவை உங்கள் செரிமான செயல்முறையை சீராக்கி செரிமான அமைப்புக்கு நன்மை பயக்கும்.

   மேலும், வாழைப்பழங்களை சாப்பிடுவதன் மூலம் “மென்மையான குடல் இயக்கம்” ஊக்குவிக்கப்பட்டு குடலின் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.

எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது

     கால்சியத்தின் மிக சிறந்த ஆதாரம் வாழைப்பழங்கள் ஆகும். இவற்றில் உள்ள கால்சியம் குழந்தை மற்றும் தாயின் வலுவான எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவுகின்றன. மேலும், உடலில் ஏற்படும்  தசைச் சுருக்கத்தைக் கட்டுப்படுத்தவும் இவை உதவுகின்றன.

குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

    அதிக அளவில் ஆன்டி ஆக்ஸிஜனேற்றிகளை கொண்ட பழங்களில் வாழைப்பழமும் ஒன்று. இவை உடலில் உள்ள DNA-வில் மற்றும் செல்களில் ஏற்படும் தீவிர சேதத்தை குறைத்து செல்களுக்கு பாதுகாப்பை வழங்குகின்றன. மேலும், இவை கருவில் உள்ள குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

பசியின்மையை போக்கும்

    பசியின்மைக்கு ஆளாகும் கர்ப்பிணி பெண்கள் வாழைப்பழத்தை உண்டுவந்தால், இவற்றில் உள்ள தாதுக்கள் அவர்களின் உண்ணும் ஆர்வத்தை அதிகரித்து பசியின்மையை குறைக்க உதவுகிறது.

ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது

100 கிராம் செவ்வாழைப்பழத்தில் உள்ள ஊட்டச்சத்துக்களின் மதிப்பு ( in tamil )


  • Vitamin A 64.0 IU
  • Retinol Activity Equivalent 3.0 mcg
  • Alpha Carotene 25.0 mcg
  • Beta Carotene 26.0 mcg
  • Lutein+Zeaxanthin 22.0 mcg
  • Vitamin C 8.7 mg
  • Folate 20.0 mcg
  • Food Folate 20.0 mcg
  • Dietary Folate Equivalents 20.0 mcg
  • Choline 9.8 mg

ஊட்டச்சத்து மதிப்புக்களின் அட்டவணை

Calorie InformationAmount per 100 gramsPercent Daily Values
Calories89.0 (373 kJ)4%
Carbohydrate82.6 (346 kJ)
Fat2.8 (11.7 kJ)
Protein3.7 (15.5 kJ)

Leave a Comment

Your e-mail address will not be published. Required fields are marked *