பேரிக்காய் மருத்துவ பயன்கள்

pear fruit benefits in tamil

பேரிக்காய்

Pear fruit benefits பேரிக்காய் ஆரோக்கியம் நிறைந்த ஆண்டு முழுவதும் கிடைக்கும் பழம் ஆகும். ஆனால், இது ஜூன் முதல் பிப்ரவரி வரை உள்ள காலகட்டங்களில் அதிகமாக விளையக்கூடியது. இது மஞ்சள் பழுப்பு நிறத்தில் காணப்படும். இந்த ஊட்டச்சத்து மிகுந்த பழம் பல நோய்களில் இருந்து நம்மை விலக்கி வைப்பதில் பெரும் பங்கு வகிக்கும்.
pear fruit benefits

இதயத்தை பாதுகாக்கின்றது

      பேரிக்காய், உங்கள் உடல் இதய ஆரோக்கியத்தை பராமரிக்கும் ஒரு அற்புதமான பழம் ஆகும். ஏனெனில், இது ஹைப்பர்டென்ஷன்க்கு வழிவகுக்கும் உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவும் சக்திவாய்ந்த ஆன்டி ஆக்ஸிஜனேற்றங்களை அதிக அளவில் கொண்டிருக்கிறது. மேலும், இவை உடல் நலனில் பல நேர்மறையான விளைவுகளையும் ஏற்படுத்த உதவுகிறது.

pear fruit benefits

புற்றுநோயிலிருந்து பாதுகாக்கிறது

      இவற்றில் உள்ள அதிக அளவு செம்பு மற்றும் வைட்டமின் சி, புற்றுநோய்க்கு வழிவகுக்கும் மற்றும் நமது உயிரணுக்களுக்கு தீங்கு விளைவிக்கும் பிரீ ரேடிக்கல்ஸ்-இன் சேதத்திலிருந்து பாதுகாக்க உதவுகிறது

pear fruit benefits

குரல் தண்டுக்கு மிகவும் நல்லது ​

      பேரிக்காய் உங்கள் குரல் தண்டை குணப்படுத்தும் பல பண்புகளை கொண்டுள்ளதால் இது உங்கள் குரல் தண்டுக்கு மிகவும் நல்லது. இதை தேனுடன் சேர்த்து உண்டால், நிச்சயமாக உங்கள் குரல்வளையின் மீது நேர்மறையான சுகாதார விளைவுகளை ஏற்படுத்தும். மேலும், இந்த பழம் தொண்டைக்கு ஊட்டமளித்து தொண்டை பிரச்சினைகளிலிருந்து நம்மை பாதுகாக்கிறது.

pear fruit benefits

சுவாச பிரச்னையை தீர்க்கிறது

      பேரிக்காய், மூச்சுத்திணறல் மற்றும் குறிப்பாக கோடைகாலத்தில் குழந்தைகளுக்கு ஏற்படும் சுவாச பிரச்னையிலிருந்து தீர்ப்பதற்காக இவை நன்கு அறியப்பட்டவை. அதனால், இவற்றை சாறாக பிழிந்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.

pear fruit benefits

கொலஸ்ட்ரால் அளவை குறைக்கின்றது

      பேரிக்காயில் அதிக அளவு பேக்டின் (pectin) உள்ளது, இவை உடல் நலனுக்கு தீங்கு விளைவிக்கும் கெட்ட கொலஸ்டிரால் அளவைக் குறைக்க பெரிதும் உதவுகிறது.(1)

pear fruit benefits

பெருங்குடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கின்றது

      இதில் அதிக அளவு நார்ச்சத்து இருப்பதால் இதனை உண்பது உங்கள் பெருங்குடல் ஆரோக்கியத்திற்கு மிகச் சிறந்தது. மேலும், இது கர்ப்பகாலத்தில் குழந்தைகளுக்கு ஏற்படும் நரம்பு குழாய் குறைபாடுகளை தடுக்க உதவும் ஃபோலேட் (folate) அதிக அளவினை கொண்டிருக்கிறது.

pear fruit benefits

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றது

       ஆரோக்கியமான நோயெதிர்ப்பு மண்டலங்களை உருவாக்குவதற்கு பெரிதும் உதவுகின்ற சக்தி வாய்ந்த ஆக்ஸிஜனேற்ற எதிர்ப்பொருட்களை (antioxidants) பேரிக்காய் அதிக அளவில் கொண்டுள்ளது. ஆகையால், நீங்கள் நோய்களிலிருந்து விடுபட விரும்பினால், இதனை சாறாக பிழிந்து தினமும் குடித்து வந்தால் நல்ல பலனை எதிர்ப்பார்க்கலாம்.

pear fruit benefits

வலுவான எழும்புகளை கட்டமைக்கின்றது

       அதிக அளவு போரோன்களை (boron) கொண்டுள்ளதால், இவை எலும்புகளுக்கு தேவையான கால்சியத்தை நன்றாக உறிஞ்சி எலும்புரைகளை தடுக்கஉதவுகிறது. மேலும், உங்கள் உடலுக்கு உடனடி சக்தியை அளிக்கும் குளுகோஸை (glucose) அதிக அளவு கொண்டிருக்கிறது.

pear fruit benefits

காய்ச்சலுக்கு நிவாரணம் தருகின்றது

       பேரிக்காய், காய்ச்சல் சிகிச்சையின் போது சிறப்பாக செயல்படும் சில குளிர்விக்கும் பண்புகளை கொண்டுள்ளது. ஆகையால், நீங்கள் காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், பேரிக்காய் உண்பது உங்களுக்கு சிறந்த ஒரு நிவாரணத்தை தரும்.

ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது

100 கிராம் பேரிக்காயில் உள்ள ஊட்டச்சத்துக்களின் மதிப்பு


 • Vitamin A 23.0 IU
 • Retinol Activity Equivalent 1.0 mcg
 • Beta Carotene 13.0 mcg
 • Beta Cryptoxanthin 2.0 mcg
 • Lutein+Zeaxanthin 45.0 mcg
 • Vitamin C 4.2 mg
 • Vitamin K 4.5 mcg
 • Folate 7.0 mcg
 • Food Folate 7.0 mcg
 • Dietary Folate Equivalents 7.0 mcg
 • Choline 5.1 mg

ஊட்டச்சத்து மதிப்புக்களின் அட்டவணை

Calorie InformationAmount per 100 gramsPercent Daily Values
Calories58.0 (243 kJ)3%
Carbohydrate55.7 (233 kJ)
Fat1.0 (4.2 kJ)
Protein1.3 (5.4 kJ)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *