Health Tips for Men

health tips in tamil for men

       ஆரோக்கியமான வாழ்க்கை முறையின் அவசியம் அனைவரும் அறிந்ததே. இருப்பினும், இன்றைய பரபரப்பான வாழ்கை முறையின் காரணமாக, நமது உடல் நலத்தில் பல எதிர்மறை விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கிறது. குறிப்பாக, ஆண்கள் ஆண்மை குறைவு போன்ற எதிர்மறை உடல் குறைபாடுகளை சந்திக்கின்றனர். ஆகையால், இக்கட்டுரையில் ஆண்களின் அடிப்படை உடல் நலன்களை மீட்டெடுக்க சில அணுகுமுறையை கொடுத்துளோம். இவை, நிச்சயமாக உங்களுக்கு உதவலாம்.

உடற்பயிற்சியில் ஈடுபடுங்கள்

         தினசரி 15 நிமிட உடற்பயிற்சி செய்வது, சுயமரியாதை மற்றும் ஆண்மை திறன் ஆகியவற்றை மேம்படுத்துகிறது என்று சில சிறுநீரக ஆய்வு கட்டுரையில் கூறப்பட்டுள்ளது. மேலும், உடற்பயிற்சி என்பது பாலினத்தின் உடல் அம்சங்களை மிகவும் சுவாரஸ்யமாக ஆக்குகிறது என்றும், விறைப்பு தன்மை செயல்பாட்டிற்கு உதவுகின்றது எனவும் கூறப்பட்டுள்ளது. ஆகையால், ஒவ்வொரு நாளும் சில உடற்பயிற்சியில் வழக்கமாக ஈடுபடுவதை உறுதிசெய்யுங்கள்.

மதுவை விலக்குங்கள்

      “மதுவிலக்கு”, பாலின ஊடலை மேம்படுத்துவதற்கும், அதை இன்னும் உற்சாகப்படுத்துவதற்கும் ஒரு மிகச் வழியாகும். நீங்கள், மது பழக்கம் உடையவர் என்றால், ஓரிரு நாட்கள், அல்லது வார இறுதி நாட்கள் அல்லது ஒரு வாரம் முழுவதும் மதுவிலக்கு பயிற்சி செய்யுங்கள். ஏனெனில், “மதுவிலக்கு” இதயத்தை பலப்படுத்தி பாலின ஊடலை துடிப்புடன் வைத்திருக்க உதவுகிறது.

ஊடலுக்கான திட்டத்தை உருவாக்குங்கள்

       நீங்கள் பிஸியான தம்பதிகாள? அப்படியென்றால், சோர்வு அல்லது ‘சரியான நேரத்தைக் கண்டுபிடிக்க இயலாமை’ காரணமாக ஊடலின் அதிர்வெண் குறைய வாய்ப்புகள் உண்டு. இவை உங்கள் இதயத்தை மற்றும் வாழ்க்கையின் உற்சாகத்தை குறைத்துவிடும். ஆகையால், ஊடலுக்கான நேரத்தை ஒதுக்குவது அல்லது வாய்ப்புகளை ஏற்பாடு செய்வது என்பது மிகவும் முக்கியம்.

தளர்வான உள்ளாடைகளை அணியவும்

      ஆண்கள் இறுக்கமான உள்ளாடைகளை அணிவதால், அவர்களின் விந்து அணுக்களின் உற்பத்தியில் 30% வரை குறைவதாக சமீபத்திய ஆய்வு முடிவுகள் உறுதிப்பட கூறுகின்றன. ஏனெனில், இயற்கையாகவே விதைப்பை உடலுக்குள் இல்லாமல் தனியாக இருப்பதற்கு காரணம், அவை எப்பொழுதும் குளிர்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காகவே. ஆனால், ஆண்கள் இறுக்கமான உள்ளாடைகளை அணியும் பொழுது ஆண்களின் விதைப்பை உடலுடன் ஒட்டிக்கொள்வதால் உடலின் வெப்பநிலை விதைப்பைக்கும் பரிமாற்றம் செய்யப்படுகின்றது.

தர்ப்பூசணி சாப்பிடுங்கள்

       தர்பூசணி, “இயற்கையின் வயக்ரா” என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், தர்பூசணியில் உள்ள லிகோபீன், மற்றும் சிட்ருல்லைன் உடலில் உள்ள இரத்த நாளங்களை மென்மையாக மாற்றவும், மற்றும் ஆணின் விறைப்புத்தன்மையில் உள்ள குறைபாட்டை போக்கவும் உதவுகிறது. மேலும், ஆணுறுப்பின் இரத்த ஓட்டத்தை சீராக விநியோகித்து பாலியல் இயக்கங்களை சீரமைக்கிறது.

அத்திப்பழம் சாப்பிடுங்கள்!

       பல நூற்றாண்டுகளாக, அத்திப்பழம் மலட்டுத்தன்மை, மற்றும் குறைந்த விறைப்புத்தன்மை உள்ளிட்ட பாலியல் செயலிழப்பு சிக்கல்களைக் குறைப்பதற்கான ஒரு வழியாக பரிந்துரைக்கப்படுகிறது. ஆகையால்,
2-3 அத்திப்பழங்களை இரவில் பாலில் ஊறவைத்து காலையில் சாப்பிடுங்கள். இவ்வாறு சாப்பிடுவது, ஆண்களின் பாலியல் திறன்களை மேம்படுத்துவதற்கான சிறந்த வழிகளில் ஒன்றாகும்.

ஸ்ட்ராபெர்ரிகளை உண்ணுங்கள்

        ஸ்ட்ராபெர்ரிகளில் உள்ள ஆன்டி ஆக்ஸிஜனேற்றிகள் இதயம் மற்றும் தமனிகளின் செயல்பாடுகளுக்கு ஊட்டமளிக்கிறது. இவை இரண்டும் இரத்தத்தின் சுழற்சியை மேம்படுத்தி ஒரு ஆரோக்கியமான பாலியல் ஊடலுக்கு வழிவகுக்கின்றது. மேலும், ஸ்ட்ராபெர்ரிகளில் உள்ள வைட்டமின் சி ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கையையும் கூட்டுகிறது.

தினசரி ஒரு செவ்வாழை உண்ணுங்கள்

      தினசரி, ஒரு செவ்வாழைப்பழம் உண்டு வந்தால், நரம்புகள் பலம்பெற்று ஆண்மை குறைபாடு சீரடையும். மேலும், திருமணமான புது தம்பதியர் தினசரி ஆளுக்கு ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு அரைஸ்பூன் தேன் அருந்தினால், வீரைவிலே கருத்தரிக்கும் எனவும் கூறப்படுகிறது.

தாம்பத்தியதை வலுவாக்கும் சோற்று கற்றாழை

        சோற்று கற்றாழையின் வேர்களை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி பாலில் வேக வைத்து பின்னர், அதை நன்றாக காய வைக்க வேண்டும். பின்னர், அதை ஒரு டீஸ்பூன் அளவு பாலில் கலந்து தினமும் சாப்பிட்டால் ஆண்மை பிரச்சனை தீர்ந்து தாம்பத்தியம் வலுப்பெறும்.

Leave a Comment

Your e-mail address will not be published. Required fields are marked *