சிறந்த உணவு வகைகள் – Healthy food list

       உலகளவில் இறப்புகளில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு இதய நோய் தொடர்பானதாகும். சில குறிப்பிட்ட வகை உணவுகள் இதய ஆரோக்கியத்தில் உணவு முக்கிய பங்கு வகிக்கிறது. அவை உண்மையில், இரத்த அழுத்தம், ட்ரைகிளிசரைடுகள், கொழுப்பின் அளவு மற்றும் அழற்சியை குறைத்து இதயத்தின் ஆபத்து காரணிகளை குறைக்கிறது. இங்கே, நாங்கள் இதய ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவும் உணவுகளை பற்றி பட்டியலிட்டுளோம்.

கீரை வகை உணவுகள்

கீரை போன்ற உணவு வகை காய்கறிகள், வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிஜனேற்றிகளின் ஆரோக்கிய பலன்களுக்காக நன்கு அறியப்பட்டவை. குறிப்பாக, அவை வைட்டமின் கே இன் சிறந்த மூலமாகும்.

இது உங்கள் தமனிகளைப் பாதுகாக்கவும், சரியான இரத்த உறைதலை ஊக்குவிக்கவும், இரத்த அழுத்தம், மற்றும் தமனி விறைப்பைக் குறைக்கவும் உதவுகின்றன. மேலும், இவை இரத்த நாளங்களில் உயிரணுக்களின் செயல்பாட்டை மேம்படுத்தி இதய ஆரோக்கியத்தை உறுதி செய்கின்றன.

வெண்ணை பழம்

வெண்ணெய் பழம் இதய ஆரோக்கியத்தை கொண்ட கொழுப்புகளின் சிறந்த மூலமாகும். அவற்றில் ஊட்டச்சத்து மிகுந்த நல்ல கொழுப்புகள் இதய நோய்க்கான ஆபத்தை குறைக்கிறது. வெண்ணெய் பழம், இதயத்திற்கு தீங்கு விளைவிக்கும் "மோசமான" எல்.டி.எல் வகை கொழுக்களை குறைத்து இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

கடல் மீன்கள்

கொழுப்பு நிறைந்த கடல் மீன்கள் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்களை அதிகளவில் கொண்டவை. இந்த வகை கொழுப்பு அமிலங்கள் இரத்த அழுத்தம், ட்ரைகிளிசரைடுகள் மற்றும் கொழுப்பு உள்ளிட்ட இதய நோய் ஆபத்து காரணிகளைக் குறைக்க உதவும்.


அக்ரூட் பருப்புகள்

அக்ரூட் வகை பருப்புகள் நார்ச்சத்து மற்றும் மெக்னீசியம், தாமிரம் மற்றும் மாங்கனீசு போன்ற நுண் ஊட்டச்சத்துகளை கொண்ட சிறந்த உணவாகும். எனவே, இவற்றை சாப்பிடுவதால் “கெட்ட” எல்டிஎல் கொழுப்பை 16% வரை குறைக்கலாம். மேலும், ஆன்டி ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தையும் மற்றும் வீக்கத்தையும் குறைத்து இதயத்தை பாதுகாக்கிறது.

பீன்ஸ்

பீன்ஸ் சாப்பிடுவது இரத்த அழுத்தம் மற்றும் வீக்கத்தை குறைப்பதுடன் தொடர்புடையது. இவை இரண்டும் இதய நோய்க்கான ஆபத்து காரணிகள் ஆகும். மேலும், பீன்ஸ் சாப்பிடுவதால் இரத்த ட்ரைகிளிசரைடுகள் மற்றும் “மோசமான” எல்.டி.எல் கொழுப்புகளை குறைத்து இதய நோய்க்கான சில ஆபத்து காரணிகளைக் குறைக்கும் என்றும் பல ஆய்வுகள் கண்டறிந்துள்ளன.

தக்காளி

தக்காளி சக்திவாய்ந்த ஆன்டி ஆக்ஸிஜனேற்ற பண்புகளான லைகோபீன் என்ற இயற்கையான தாவர நிறமி கொண்டுள்ளது. இந்த லைகோபீன் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் தொடர்பான ஆபத்தை குறைக்கும் முக்கிய காரணியாகும்.

மேலும், இவை இதயத்திற்கு நன்மை தரும் எச்.டி.எல் கொழுப்பினனை பராமரிக்கவும், தமனிகளில் இருந்து அதிகப்படியான கொழுப்பு மற்றும் பிளேக்கை அகற்றவும் உதவும். (1)


பாதாம்

பாதாம் நம்பமுடியாத அளவு ஆரோக்கியத்தை தரும் ஊட்டச்சத்துகளை கொண்ட உணவாகும். பாதாம், நன்மை தரும் எச்.டி.எல் கொழுப்புடன் தொடர்புடையது. இதனால், இவை தமனிகளை சீராக வைத்திருக்கவும் மற்றும் ஆரோக்கியமான இதயத்தை கட்டமைக்கவும் உதவுகிறது.

பூண்டு

பூண்டு, பல நூற்றாண்டுகளாக பலவிதமான நோய்களுக்கு சிகிச்சையளிக்க ஒரு இயற்கை தீர்வாக பயன்படுத்தப்படுகிறது. சமீபத்திய ஆராய்ச்சிகள், அதன் சக்திவாய்ந்த மருத்துவ பண்புகளை உறுதிப்படுத்தியுள்ளது. இதில் இருக்கும் அல்லிசின் எனப்படும் ஒரு வகை கலவை இரத்த அழுத்தத்தை குறைக்கவும், வலுவான இதயத்தை கட்டமைக்கவும் மற்றும் பக்கவாதம் அபாயத்தைக் குறைக்கவும் உதவுகிறது. (1)

க்ரீன் டீ

கிறீன் டீ-யில் இருக்கும் பாலிபினால்கள் மற்றும் கேடசின்கள், உயிரணு சேதத்தைத் தடுக்கவும், வீக்கத்தைக் குறைக்கவும் மற்றும் உங்கள் இதயத்தின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும் சிறந்த ஆன்டி ஆக்ஸிஜனேற்றியாக செயல்படலாம் என பல ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

மேலும் இவற்றை தினமும் அருந்துவதால், இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்துக்கொள்ளலாம் எனவும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *