குழந்தையின்மைக்கு தீர்வு !
Infertility treatment in tamil இன்றைய காலகட்டத்தில் குழந்தை இல்லாதவர்கள் நிறைய வேதனையுடன் காணப்படுகிறார்கள். அவர்களுக்காக நாட்டு மருத்துவத்தில் கொடுக்கப்பட்டுள்ள சிறந்த தீர்வுகளை பற்றி இங்கே பதிவிடப்பட்டுள்ளது.
அம்மன் பச்சரிசி
இந்த செடி ரோட்டு ஓரத்தில் நிறைய காணப்படும். இந்த இலைகளை நன்கு அரைத்து பாலுடன் சேர்த்து காலை மலை இரு வேளை அருந்தி வந்தால் ஆண் பெண் ஆகிய இருபாலார்க்கும் இனப்பெருக்க சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு நிச்சயம் அளிக்கும்.
கல்யாண முருங்கை இலை
“கல்யாண முருங்கை இலை” இதற்கு குழந்தை மரம் என்று இன்னோரு பெயரும் உள்ளது. இந்த கல்யாண முருங்கை இலைகளை 5 மிளகு உடன் சேர்த்து நன்கு அரைத்து பாலுடன் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் கருப்பையில் உள்ள எல்லா அடைப்பு கட்டிகள் மற்றும் நீர் கட்டி முதலியவைகளை கரைத்து பெண்களுக்கு குழந்தை வரத்தை நல்கும்
பீட்ரூட் ஜூஸ்
ஆண்கள் பெண்கள் இருவருமே பீட்ரூட் ஜூஸ் தினமும் அருந்தி வந்தால், இனப்பெருக்க சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சினைகளுக்கும் நிச்சயம் தீர்வு அளிக்கும்.
கழற்சிக்காய்
இது பெண்கள் கர்ப்பப்பை நன்கு வலுப்படுத்த உதவுகின்றது. அதேபோல் கருப்பையில் ஏதாவது அடைப்பு இருந்தாலும் அதனை குணப்படுத்த உதவும் மிக சிறந்த மூலிகை இது.
கழற்சிக்காய் உள்ளே உள்ள பருப்பை நன்றாக பொடி செய்து இரவு சாப்பிட்ட பிறகு பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் நிச்சயம் கருப்பை சம்பந்தப்பட்ட வியாதிகள் அனைத்திற்கும் தீர்வு அளிக்கும்.
உளுத்தம் களி
தினமும், உணவில் உளுத்தம் களி அல்லது அஸ்வகந்தா-வை தினசரி உணவில் சேர்த்து கொள்வதாலும் குழந்தையின்மை குறைபாடு குணப்படுத்தப்படுகிறது.