ஜலதோஷம் நீங்க அகத்தியர் வைத்தியம்

ஜலதோசம் நீங்க அகத்தியர் வைத்தியம்

அகத்தியர் கூற்று

irumal maruthuvam tamil அகத்தியர் தன் எழுதிய ஓலையில், "அக்கினிசேகரத்தையும் வெள்ளை-யையும் சேர்த்தால் இரத்தம் வரும் இதை பூசினால் உடனடியாக குணம் கிடைக்கும்" என்று தெரியப்படுத்தி இருந்தார்

இதன் பொருள்

இங்கே, அக்கினிசேகரம் என்பது மஞ்சளையும், வெள்ளை என்பது வெற்றிலைக்கு வைக்கும் சுண்ணாம்பு -ஐ குறிக்கும். இவ்விரண்டையும் சேர்த்தால் இரத்தமான சிகப்பு வண்ணத்தில் மருந்து கிடைக்கும்.

தேவையான பொருள்கள்
2 ஸ்பூன் மஞ்சள் பொடி
1/4 ஸ்பூன் அளவு சுண்ணாம்பு
தண்ணீர்

செய்முறை

2 ஸ்பூன் மஞ்சள் பொடி 1/4 ஸ்பூன் சுண்ணாம்பு எடுத்து சிறிது தண்ணீர் விட்டு பூசுவதற்கு ஏற்றது போல் கலக்கவேண்டும். பின்னர், இதை மண்டையைச்சுற்றி நெற்றியிலும் மூக்கின் மேலும் இதை பூச வேண்டும். பிறகு குறைந்தது ஓரு மணி நேரமாவது நன்றாக தூங்கி எழுந்தால், ஜலதோசம் மற்றும் சளி பிடித்தற்கான எந்த அறிகுறியும் இருக்காது. மேலும், சுண்ணாம்பு தேய்ப்பதால் நெற்றி புண்ணாகிவிடுமோ என்ற ஐயம் வேண்டாம். ஏனெனில், இதில் மஞ்சள் சேர்வதால் எக்காரணம் கொண்டும் புண்ணாகாது.

Leave a Comment

Your e-mail address will not be published. Required fields are marked *