Jeera or Seeragam Water for Weight loss

        சீரகம், இந்தியாவில் பண்டைய காலங்களிலிருந்தே அதிகம் பயன்படுத்தப்படும் மசாலாப் பொருட்களில் ஒன்றாகும். அதுமட்டுமல்லாமல், இதன் வியக்க வைக்கும் மருத்துவ நலன்களுக்காக, பாட்டி வைத்தியத்திலும் அதிகம் பயன்படுத்தப்படும் பொருளாகவும் இது இருக்கிறது.

jeera or seeragam water for weight loss

       ஏனெனில், இது உடலில் உள்ள நச்சுக்களை நீக்குவதற்கும், வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பதற்கும், பசியை அடக்குவதற்கும், செரிமானத்தை மேம்படுத்துவதற்கும், உடலில் உள்ள கொழுப்பை எரிப்பதற்கும், இரத்தத்தை சுத்திகரிப்பதற்கும் உதவுகிறது.

       மேலும், சீரகத்தில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் மற்றும் எடை இழக்க உதவும் பண்புகளும் உள்ளன. ஆகையால், எடை இழப்புக்கு சீரக நீரை உட்கொள்வது ஒரு சிறந்த தீர்வாக இருக்கும். சரி, சீராக நீர் எடை இழப்புக்கு எவ்வாறு உதவுகிறது என்பதை கீழே காண்போம்.

      சீரகத்தில் கலோரிகள் குறைவாக இருக்கும். ஒரு டீஸ்பூன் ஜீராவில் 7 கலோரிகள் மட்டுமே உள்ளன.

       சீரக நீரில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, மாங்கனீசு, தாமிரம் ஆகியவை அதிகம் உள்ளன. இந்த வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உடலில் உள்ள “ஃப்ரீ ரேடிக்கல்” விளைவை நடுநிலையாக்குகின்றன.

       சீரகத்தில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. அழற்சி பண்புகளின் தொடர்ச்சியான நிலை உடல் பருமனுக்கு வழிவகுக்கிறது. ஆகையால், சீரக நீரை வழக்கமாக உட்கொள்வது வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரித்து உடல் பருமனை குறைக்கிறது.

      சீரக நீர் HDL (high-density lipoprotein) அளவை அதிகரிக்கிறது மற்றும் LDL (low density lipoprotein) அளவைக் குறைக்கிறது. இந்த விளைவு தனிநபர்களின் பிஎம்ஐ (body mass index) யைக் குறைக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

      இது செரிமான நொதிகள் மற்றும் பித்த சுரப்புகளின் உற்பத்தியைத் தூண்டுவதால் திறமையான மற்றும் விரைவான செரிமானத்தை எளிதாக்குகிறது. பித்தம் குடலில் உள்ள கொழுப்புகளை ஜீரணிக்க உதவுகிறது. இதன் விளைவாக உடலில் கொழுப்பு சதவீதம் குறைந்து இடுப்பினை சுற்றியுள்ள கொழுப்புகள் குறைகிறது.

       உடலில் நச்சுகள் குவிவதால் மன அழுத்தம், வீக்கம், மலச்சிக்கல் மற்றும் அஜீரணம் அதிகரிக்கும். ஆகையால், சீரக நீரை அருந்துவது, உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவும்.

        சீரகம் இன்சுலின் உணர்திறனை அதிகரித்து இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை நிர்வகிக்கிறது. இவ்வாறு ஒழுங்குபடுத்தப்பட்ட இரத்தத்தின் சர்க்கரை அளவு உடலின் இயல்பான பருமனைத் தக்க வைத்துக் கொள்ளும்.

      சீரகம் உடலின் செல்களைக் சுறுசுறுப்பாக வைத்திருப்பதால், நீங்கள் எப்பொழுதும் சுறுசுறுப்பாக உணர்வீர்கள்.

சீரக நீர் செய்முறை

        சீரக நீரை உட்கொள்வதற்கான பல வழிகள் இருப்பினும், நாங்கள் இங்கே சீரக நீரை தயாரிப்பதற்கான மூன்று எளிய வழிகளை கொடுத்துள்ளோம்.

#1 செய்முறை

      2 லிட்டர் தண்ணீரில் 2 தேக்கரண்டி சீரகத்தை கலந்து, ஜாடியில் ஒரு இரவு முழுவதும் ஊறவையுங்கள். பின்னர், அடுத்த நாள் காலை, சீராக தண்ணீர் குடிக்க தயாராக இருக்கும். இந்த சீரக தண்ணீரைப் குடிப்பதற்கான சிறந்த வழி அதை வெறும் வயிற்றில் குடிப்பதே.

#2 செய்முறை

       ஒரு கப் அளவு தண்ணீரைக் கொதிக்க வைக்கவும். அதில் சில சீரக விதைகளை சேர்த்து இன்னும் சிறிது வேகவைக்கவும். பின்னர், இந்த புத்துணர்ச்சியூட்டும் ஒரு கப் சீரக டீயை பருகிடுங்கள்.

#3 செய்முறை

      சீரக டீயின் சுவை உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால், தேநீர் தயாரானதும், விதைகளை வடிகட்டி, திரவத்தில் சிறிது தேன் சேர்த்து பருகிடுங்கள்!

ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது

                  100 கிராம் சீரகத்தில் உள்ள ஊட்டச்சத்துக்களின் மதிப்பு 

  • Vitamin A 1270 IU
  • Retinol Activity Equivalent 64.0 mcg
  • Beta Carotene 762 mcg
  • Lutein+Zeaxanthin 448 mcg
  • Vitamin C 7.7 mg
  • Vitamin E (Alpha Tocopherol) 3.3 mg
  • Vitamin K 5.4 mcg
  • Niacin 4.6 mg
  • Folate 10.0 mcg
  • Food Folate 10.0 mcg
  • Dietary Folate Equivalents 10.0 mcg
  • Choline 24.7 mg

ஊட்டச்சத்து மதிப்புக்களின் அட்டவணை

Calorie InformationAmount per 100 gramsPercent Daily Values
Calories375 (1570 kJ)19%
Carbohydrate129 (540 kJ)
Fat186 (779 kJ)
Protein59.9 (251 kJ)
Alcohol0.0 (0.0 kJ)

CarbohydratesAmount per 100 gramsPercent Daily Values
Total Carbohydrate44.2 g15%
Dietary Fiber10.5 g42%
Sugars2.3 g

Fats & Fatty AcidsAmount per 100 gramsPercent Daily Values
Total Fat22.3 g34%
Saturated Fat1.5 g8%
Monounsaturated Fat14.0 g
Polyunsaturated Fat3.3 g
Total Omega-3 fatty acids176 mg
Total Omega-6 fatty acids3103 mg

Protein & Amino AcidsAmount per 100 gramsPercent Daily Values
Protein17.8 g36%

VitaminsAmount per 100 gramsPercent Daily Values
Vitamin A1270 IU25%
Retinol0.0 mcg
Retinol Activity Equivalent64.0 mcg
Alpha Carotene0.0 mcg
Beta Carotene762 mcg
Beta Cryptoxanthin0.0 mcg
Lycopene0.0 mcg
Lutein+Zeaxanthin448 mcg
Vitamin C7.7 mg13%
Vitamin E (Alpha Tocopherol)3.3 mg17%
Vitamin K5.4 mcg7%
Thiamin0.6 mg42%
Riboflavin0.3 mg19%
Niacin4.6 mg23%
Vitamin B60.4 mg22%
Folate10.0 mcg2%
Food Folate10.0 mcg
Folic Acid0.0 mcg
Dietary Folate Equivalents10.0 mcg
Vitamin B120.0 mcg0%
Choline24.7 mg

MineralsAmount per 100 gramsPercent Daily Values
Calcium931 mg93%
Iron66.4 mg369%
Magnesium366 mg92%
Phosphorus499 mg50%
Potassium1788 mg51%
Sodium168 mg7%
Zinc4.8 mg32%
Copper0.9 mg43%
Manganese3.3 mg167%
Selenium5.2 mcg7%

SterolsAmount per 100 gramsPercent Daily Values
Cholesterol0.0 mg0%
Phytosterols68.0 mg

OtherAmount per 100 gramsPercent Daily Values
Alcohol0.0 g
Water8.1 g
Ash7.6 g
Caffeine0.0 mg
Theobromine0.0 mg

Leave a Comment

Your e-mail address will not be published. Required fields are marked *