உதடுகள் இளஞ்சிவப்பாக மாற குறிப்புகள்

lips beauty tips in tamil

   மென்மையான இளஞ்சிவப்பு உதடுகள் நாம் அனைவரும் விரும்பும் ஒன்று. இங்கே, நங்கள் ரசாயனங்கள் இல்லாத மற்றும் வீட்டிலேயே எளிதாக செய்யக்கூடிய சில பயனுள்ள குறிப்புகளை பற்றி பதிவிட்டுளோம்.

போதுமான தண்ணீர் அருந்தவும்

    நீர் நம் உடலில் சுமார் 50% முதல் 60% வரை இருக்கும். தேவையான சதவீதத்தை பராமரிப்பது இன்றியமையாதது அல்லது விளைவுகள் உங்கள் சருமத்திலும் காண்பிக்கப்படும். ஆகவே, உதடுகளின் இயற்கையான நிறத்தைத் தக்க வைத்துக் கொள்ள நாள் முழுவதும் போதுமான தண்ணீரைக் குடித்து உடலின் நீரேற்றம் அளவைப் பராமரிக்க வேண்டும். 

   மேலும், வெள்ளரி, தர்பூசணி, ஆரஞ்சு, திராட்சைப்பழம் மற்றும் எலுமிச்சை போன்ற அதிக நீர் உள்ளடக்கம் கொண்ட பழங்களை உங்கள் உணவில் சேர்க்கவும்.

பீட்ரூட் சாறு

     உதடுகளின் மீது பீட்ரூட் அல்லது மாதுளம் பழத்தின் சாற்றை தடவி வந்தால் உதடுகள் சிவப்பாக மாறி கவர்ச்சியாக இருக்கும்.

கேராட்

    கேரட்டில் வைட்டமின் எ மற்றும் பீட்டா கரோட்டின் அதிக அளவில் இருப்பதால், இவை பாதிக்கப்பட்ட செல்களை நீக்கி சருமம் பலபளப்பாக மாற உதவும். இதனால், கேரட் சாற்றை உதட்டுக்கு மேலே தடவி 20-30 நிமிடம் நன்கு ஊற வைக்க வேண்டும். இவ்வாறு, தினமும் செய்தல் உதட்டின் கருமை நீங்கும்.

உலர்ந்த திராட்சை

    உலர்ந்த திராட்சை கொண்டு உதட்டின் மீது வைத்து மென்மையாக உருட்டவும். இதை, வாரத்திற்கு மூன்று முறை செய்து வந்தால் உதடுகளின் சுருக்கங்கள் நீங்கும்.

பாதாம் எண்ணெய்

    இரவில், தூங்கும் முன்பு சிறிது பாதாம் எண்ணெய் மற்றும் தேன் கலந்து உதட்டில் தடவி மசாஜ் செய்து அப்படியே இரவு முழுவதும் வைத்திருந்தால், இளஞ்சிவப்பு உதடுகளை பெறலாம்.

ரோஜா இதழ்

     உதடுகள் சிவப்பாக மற்றும் பளபளப்பாக மாற, ரோஜா இதழ்கள் மற்றும் பால் ஆகியவற்றை மிக்சியில் நன்கு அரைத்து அதை உதடுகளின் மீது தடவி 10 நிமிடம் ஊற வைக்கவும். பின்னர், காட்டன் துணியை நீரில் நனைத்து துடைக்கவும். இவ்வாறு, வாரம் இருமுறை செய்துவந்தால், நல்ல பலன் கிடைக்கும்.

வெள்ளை கரு

   முட்டையின் வெள்ளை கரு, பாதம் பவுடர் மற்றும் பால் கலந்த கலவையை உதட்டின் மீது தடவி, அது காய்ந்ததும் வெந்நீரில் கழுவவும். இவ்வாறு செய்வதால், உதடுகள் மிகவும் கவர்ச்சியாக வசீகர தோற்றத்துடன் காணப்படும்.

ஆலிவ் எண்ணெய்

   உலர்ந்த உதடுகளிலிருந்து விடுபட, ஆலிவ் எண்ணெயுடன் கலந்த வாஸ்லைனை ( Vaseline ) தினமும் 3-4 முறை தடவவும்.

ஆரஞ்சு

   வெண்ணெயுடன் ஆரஞ்சு சாற்றை கலந்து, உதடுகளில் தடவி வந்தால், உதடுகளின் வெடிப்புகளை சரிசெய்து மென்மையாக்கும்.

புதினா இலை

  புகை பிடித்து உதடுகள் கருமையாகா இருப்பவர்கள், மாதுளை சாறு அல்லது புதினா இலையை உதட்டின் மேல் தடவி வந்தால் உதடுகள் இளந்சிவப்பாக மாறும்

மோர்

   சிறிதளவு மோர் எடுத்து உதட்டின் மீதுள்ள பருக்களில் தடவி வந்தால், உதட்டின் மீதுள்ள பருக்கள் மறையும். இவற்றை, நாள் ஒன்றுக்கு இரண்டு அல்லது மூன்று முறை செய்யவும்.

Leave a Comment

Your e-mail address will not be published. Required fields are marked *