அதிசய சத்து நிறைந்த பீச்சஸ் – Peaches fruit

 Peach fruit benefitsபீச்சஸ் கோடைகாலத்தில் கிடைக்கும் பிரபலமான மற்றும் நன்கு சுவையான பழங்களுள் ஒன்றாகும். இது பொதுவாக தென் ஆசியா மற்றும் சீனாவில் வெவ்வேறு அளவுகளில் கிடைக்கின்றன.

       நாம் எல்லோருக்கும் பீச்சஸ் பழம் வெகுவாக பிடித்த பழங்களுள் ஒன்றாக இருந்தாலும் இவை நம் உடலுக்கு தரும் நன்மைகளை பற்றி அவ்வளவாக தெரியாது. அவற்றை பற்றி இங்கே சற்று விரிவாக அறிவோம்.

பார்வை திறன்

கண்பார்வை திறனை மேம்படுத்த உதவும் பீட்டா கரோட்டின் அளவை கொண்டிருப்பதில் மற்ற பழங்களை விட பீச்சஸ் பழம் முன்னிலையில் இருப்பதால், இவை உங்கள் பார்வை திறனை மேம்படுத்துகிறது.

செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது​

செரிமான பிரச்னை என்பது கிட்டத்தட்ட அனைவருக்கும் உள்ள மிகவும் பொதுவான பிரச்சினையாக ஆகும். இவற்றிலிருந்து விடுபட பீச்சஸ் பழம் உதவியாக இருக்கும். ஏனெனில், இது ஃபைபர் மற்றும் கார்பன் செறிவை அதிக அளவில் கொண்டுள்ளதால், வயிற்றுப்போக்கு, குடலின் இயக்கங்கள், மலச்சிக்கல் போன்ற வயிற்று பிரச்சினைகளை தீர்க்க பெரிதும் உதவுகின்றன. (1)

ஹைபோகலேமியே லிருந்து பாதுகாப்பு​ ​

உடலில் ஏற்படும் பொட்டாசிய கனிமத்தின் குறைபாடு, ஹைபோகலேமியே (hypokalemia) விற்கு வழிவகுக்கும். இவைதான் ஒழுங்கற்ற இதய துடிப்பு மற்றும் தசைகளை பலவீனமாக்க காரணமாகிறது.

பீச்சஸ் பழம் உயர்ந்த அளவு பொட்டாசியத்தை உள்ளடக்கமாக கொண்டுள்ளதால் , ஹைபோகலேமியே விலுருந்து பாதுகாப்பதுடன், நரம்பு சமிக்ஞை மற்றும் ஆரோக்கியமான வளர்சிதை மாற்ற செயல்பாட்டை பராமரிப்பது போன்ற பல முக்கிய செயல்பாடுகளை ஊக்குவிக்க உடலுக்கு உதவுகிறது.

புற்றுநோய் லிருந்து பாதுகாப்பு​

மனிதர்களுக்குள் அறியப்படும் மிக நீண்டகால உயிர்கொல்லி நோய்களில் புற்றுநோயும் ஒன்றாகும். இவற்றிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள பீச்சஸ் போன்ற சக்திவாய்ந்த ஆன்டி ஆக்ஸிஜனேற்றங்களை கொண்ட ஆரோக்கியமான உணவுகளை உண்டு புற்றுநோயை ஏற்படுத்த காரணமாக இருக்கும் பிரீ ரேடிக்கல்ஸ் லிருந்து பாதிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

​தோல் பாதுகாப்பு​

ஆரோக்கியமான மற்றும் சீரான அளவு உணவு உண்பதன் விளைவாக, ஆரோக்கியமான மற்றும் மின்னக்கூடிய தோல் அமைப்பை பெறுகிறோம். இதனால், ஆரோக்கியம் நிறைந்த இந்த பீச்சஸ் பழம், உடலில் வெளிப்புற மற்றும் உட்புற சரும பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிப்பதில் பயனுள்ளதாக இருக்கும்.

பீச்சஸ் - இல் காணப்படும் வைட்டமின் C, தோல்லில் உள்ள செல்களில் ஏற்படும் அழுத்தத்திலிருந்து பாதுகாக்கப்படுவதையும் மற்றும் தோலில் ஏற்படும் கொலாஜன் இழப்பை தடுத்து ஆரோக்கியமான தோல் அமைப்பை ஏற்படுத்த உதவுகிறது. மேலும், தோலில் உள்ள இறந்த செல்களை அகற்றி மீண்டும் செல் மீளுருவாக்கதை ஊக்குவிக்கும். (1)

இரும்புசத்து நிறைந்த உணவு​ ​

பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளை தவிர்ப்பது, உங்கள் உடலில் சரியான ஊட்டச்சத்துக்களை உண்டாக்குவதை உறுதிப்படுத்துவதற்கான நல்ல வழி. பெண்களின் கர்ப்பகால உணவு பற்றி பேசும் போது குறிப்பாக பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளை தவிர்க்க உறுதிப்படுத்த வேண்டும். மேலும், கர்ப்பிணி பெண்களுக்கு பீச்சஸ் போன்ற இரும்பு, நார்ச்சத்து அதிகம் உள்ள உணவை கொடுப்பதால், கர்ப்பகால பிரச்சனைகளிலிருந்து விடுபட உதவும்.

இரத்தக் குறைபாட்டை தவிர்த்தல்​ ​

நீங்கள் நீண்ட காலமாக இரத்தக் குறைபாடுகளால் பாதிக்கப்பட்டிருந்தால் அல்லது சமீபத்தில் அறுவைசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டிருந்தால், நீங்கள் மீண்டும் சீரான இரத்த ஓட்டத்தை பெற மற்றும் இரத்த செல் மீளுருவாக்கதை பெற இந்த பழம் உதவியாக இருக்கும்.

சிறப்பான மூளையின் இயக்கம்​

தூக்கம் மற்றும் சாப்பிடுவது போல மூளையின் இயக்கமும் ஒரு பொதுவான செயப்பாடுகளாகும். ஒரு ஆரோக்கியமான மூளையின் இயக்கம் இல்லாமல், நமது உறுப்புகள் நரம்பு மண்டலத்தின் மூலம் சரியான செய்திகளைப் பெறுவது கடினம். பீச்சஸ் பழம் மூளை செயல்பாட்டை வியக்கத்தக்க வகையில் மேம்படுத்த உதவுகிறது என பல ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளதால், இவை மூளையின் திறனை சிறப்பான முறையில் மேம்படுத்த உதவுகிறது.

வலுவான நோய் எதிர்ப்பு சக்தி.​

ஆரோக்கியமான நோய் எதிர்ப்பு சக்தி என்பது தொற்று நோய் கிருமிகளுக்கு எதிராக செயல்படும் உடலின் இராணுவம் ஆகும். மேலும், ஆரோக்கியமான நோய் எதிர்ப்பு சக்தி ஒரு ஆரோக்கியமான வளர்சிதை மாற்றத்திற்கு மற்றும் வலிமையான தசை செயல்பாட்டிற்கும் பெரிதும் உதவுகிறது.

இந்த பழத்தில் உள்ள அஸ்கார்பிக் அமிலம் (ascorbic acid) மற்றும் துத்தநாகம் (zinc) ஆகியவை உடலில் வலுவான மற்றும் ஆரோக்கியமான நோயெதிர்ப்பு அமைப்பு முறையை பராமரித்து தொற்று நோய் கிருமிகளுக்கு எதிராக போராட உதவுகிறது.

கொழுப்பு மேலாண்மை​

உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்புகள் உயர் இரத்த அழுத்தம் போன்ற நாள்பட்ட நோய்களுக்கு பெரும்பாலும் காரணமாகிறது. இதனால், நீங்கள் பீச்சஸ் போன்ற எந்த ஒரு கொழுப்புகளும் இல்லாத உணவை உண்டுவந்தால் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பேண முடியும். மேலும், இவை உங்கள் இரத்தத்தில் உள்ள கொழுப்புகளை கையாளுவதிழும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். (1)

ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது

100 கிராம் பீச் பழத்தில் உள்ள ஊட்டச்சத்துக்களின் மதிப்பு


 • Vitamin A 326 IU
 • Retinol Activity Equivalent 16.0 mcg
 • Beta Carotene 162 mcg
 • Beta Cryptoxanthin 67.0 mcg
 • Lutein+Zeaxanthin 91.0 mcg
 • Vitamin C 6.6 mg
 • Vitamin K 2.6 mcg
 • Folate 4.0 mcg
 • Food Folate 4.0 mcg
 • Dietary Folate Equivalents 4.0 mcg
 • Choline 6.1 mg

ஊட்டச்சத்து மதிப்புக்களின் அட்டவணை

Calorie InformationAmount per 100 gramsPercent Daily Values
Calories39.0 (163 kJ)2%
Carbohydrate33.9 (142 kJ)
Fat2.1 (8.8 kJ)
Protein3.1 (13.0 kJ)

Leave a Comment

Your e-mail address will not be published. Required fields are marked *