முகத்தில் பருக்கலா ?- Pimples Removal

    முகத்தில் உள்ள பருவை அகற்ற ஒவ்வொரு முயற்சியும் உடனடியாக எடுக்கப்பட வேண்டும். ஏனெனில், அவற்றிக்கு முறையாக சிகிச்சையளிக்கப்படாவிட்டால், அவை உங்கள் சருமத்தில் நிரந்தர வடுக்களை ஏற்படுத்தலாம். ஆகையால், நாங்கள் இங்கே பருக்களுக்கு தீர்வு அளிக்கக்கூடிய வீட்டு வைத்திய முறைகளை பற்றி பதிவிட்டுளோம். அவை உங்களுக்கு நிச்சயமாக உதவலாம்.

பால்

தேவையான பொருள்கள்:
 • 1 தேக்கரண்டி தேன்
 • 1/2 தேக்கரண்டி காய்ச்சாத பால்
 • பஞ்சு
 • துணி
செய்முறை:
 • மேற்கண்ட பொருள்களை நன்கு கலக்கவும்.
 • பின்னர், அதனை பஞ்சில் நனைத்து முகத்தில் தடவி கொள்ளவும்.
 • பிறகு, 15 முதல் 20 நிமிடங்கள் வரை அப்படியே உலர விட வேண்டும்.
எவ்வாறு இது வேலை செய்கிறது?

இந்த கலவை முகத்தில் உள்ள பாக்டீயாக்களை அழித்து முகத்தை பொலிவுற செய்ய உதவுகிறது.

ஆலிவ் எண்ணெய்

தேவையான பொருள்கள்:
 • ஆலிவ் எண்ணெய்
செய்முறை:
 • ஆலிவ் எண்ணெய்யை சூடுபடுத்தவும்.
 • பின்னர், முகத்தில் தடவி சில நிமிடங்கள் வட்ட வடிவில் மசாஜ் செய்ய வேண்டும்.
எவ்வாறு இது வேலை செய்கிறது?

இவை முகப்பரு மற்றும் முகப்பருக்களால் ஏற்படும் வீக்கங்களை குறைக்கிறது. மேலும், வறண்ட சரும பிரச்சனைகளுக்கும் மருந்தாக இவை பயன்படுகிறது.

கீரின் டீ

தேவையான பொருள்கள்:
 • 2 தேக்கரண்டி கீரின் டீ தேயிலை
 • தண்ணீர்
 • தேன்
செய்முறை:
 • ஒரு குவளையில் கீரின் டீ பையை போட்டு சில நிமிடங்கள் கொதிக்க விட வேண்டும்.
 • பின்னர், அதில் தேனை சேர்த்து அருந்த வேண்டும்.
எவ்வாறு இது வேலை செய்கிறது?

இவ்வாறு கீரின் டீயை தொடர்ந்து அருந்தி வருவதால், உடலுக்கு தேவையான ஹார்மோனை சுரக்க வைக்கிறது. ஆகையால், இவை முகப்பருக்களை நீக்குவது மட்டுமல்லாமல் முகத்தையும் பொலிவுற செய்கிறது.

முல்தானி மெட்டி

தேவையான பொருள்கள்:
 • 2தேக்கரண்டி முல்தானி மெட்டி
 • 1 தேக்கரண்டி ரேஸ் வாட்டர்
 • 4-5 துளி எலுமிச்சை சாறு
செய்முறை:
 • அணைத்து பொருள்களையும் கலந்து பேஸ்ட் செய்யவும்.
 • பின்னர், அதனை முகத்தில் தடவவும்.
 • பிறகு,15 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவ வேண்டும்.
எவ்வாறு இது வேலை செய்கிறது?

முல்தானி மெட்டி நுண்ணுயிர்களை அழித்து புதிய செல்களை உருவாக்க ஊக்கமளிக்கும்.

உப்பு

தேவையான பொருள்கள்:
 • 1தேக்கரண்டி கடல் உப்பு
 • 3 தேக்கரண்டி தண்ணீர்
 • பஞ்சு
செய்முறை:
 • உப்பு நீரை பஞ்சில் நனைத்து பருக்களின் மீது பயன்படுத்த வேண்டும்.
எவ்வாறு இது வேலை செய்கிறது?

உப்பு நீரில் உள்ள மினரல்கள் மற்றும் வைட்டமின்கள், சருமத்தில் உள்ள நுண்ணுயிர்களை அழித்து பருக்களை அகற்ற உதவுகிறது.

ரோஸ் வாட்டர்

தேவையான பொருள்கள்:
 • 2 தேக்கரண்டி சந்தன பொடி
 • 1தேக்கரண்டி ரோஸ்வாட்டர்
செய்முறை:
 • சந்தன தூள் மற்றும் ரோஸ் வாட்டரை கலந்து பேஸ்ட் செய்யவும்.
 • பின்னர், இதை முகத்தில் தடவி கொள்ளவும்.
எவ்வாறு இது வேலை செய்கிறது?

இந்த கலவையில் உள்ள பண்புகள், வறண்ட சருமம் மற்றும் பருக்கள் ஏற்படுத்தும் பாதிப்புகளிலிருந்து விடுபட உதவுகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *