Pimples Remove Tips

       முகத்தில் பருக்கலா? கவலை வேண்டாம். இங்கே, கொடுக்கப்பட்டுள்ள அழகு கலை குறிப்புகள் உங்கள் முகத்தில் உள்ள பருக்களை அறவே அகற்றி உங்கள் சருமத்தை பொலிவுற செய்யும்.

தேங்காய் எண்ணெய்

தேவையான பொருள்கள்:
  • தேங்காய் எண்ணெய்
செய்முறை:
  • தேங்காய் எண்ணெய்யை சூடு செய்து பாதிக்கப்பட்ட இடங்களில் தேய்த்து சில நிமிடங்கள் வட்ட வடிவில் மசாஜ் செய்ய வேண்டும்.
எவ்வாறு இது வேலை செய்கிறது?

வறண்ட சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் மிகவும் நல்லது. மேலும், இதில் நோய் எதிர்ப்பு பண்புகள் பருக்களை தடுக்கும். குறிப்பாக, இளமைப்பருவத்தில் ஏற்படும் பருக்களுக்கு தேங்காய் எண்ணெய் ஒரு நல்ல தீர்வு.

பூண்டு

தேவையான பொருள்கள்:
  • 2 அல்லது 3 பூண்டு
  • தண்ணீர்
செய்முறை:
  • பூண்டில் சிறிது தண்ணீர் விட்டு பேஸ்ட் போல் அரைத்து கொள்ள வேண்டும்.
  • பின்னர், அதனை பாதிக்கப்பட்ட இடங்களில் பயன்படுத்தவும்.
எவ்வாறு இது வேலை செய்கிறது?

பூண்டு, பண்டைய காலங்களிருந்தே பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு மருத்துவ குணங்கள் நிறைந்த உணவு பொருளாகும். இவற்றை நீங்கள் பருக்கள் மீது தடவுவதால், அவற்றை நீக்கவும் மற்றும் உருவாவதை தடுக்கவும் உதவுகிறது.

தேன்

தேவையான பொருள்கள்:
  • தேன்
செய்முறை:
  • தேனை பருக்கள் உள்ள இடங்களில் தடவ வேண்டும்.
  • பின்னர், 30 நிமிடம் கழித்து தண்ணீரை கொண்டு முகத்தை கழுவ வேண்டும்.
எவ்வாறு இது வேலை செய்கிறது?

தேனில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி எளிதில் முகப்பருக்களை விரட்டியடிக்க உதவுகிறது. ஆகையால், தேன் பருக்களை விரட்டும் ஒரு அற்புத மருந்து ஆகும்.

கற்றாழை

தேவையான பொருள்கள்:
  • கற்றாழை இலை
செய்முறை:
  • கற்றாழை இலையிலிருந்து அதன் ஜெல்லை எடுத்து பாதிக்கப்பட்ட இடங்களில் பயன்படுத்த வேண்டும்.
எவ்வாறு இது வேலை செய்கிறது?

கற்றாழை இலையில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியானது பருக்களை தடுக்கிறது. ஆகையால், பருக்களினால் ஏற்படும் பிரச்சனைகளுக்கு கற்றாழை இலை மிக முக்கிய மருந்தாக பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், பருக்களினால் ஏற்படும் வீக்கங்களையும் குறைக்கிறது.

ஐஸ்கட்டி

தேவையான பொருள்கள்:
  • ஐஸ்கட்டி
  • துணி
செய்முறை:
  • ஐஸ்கட்டியை பருக்கள் உள்ள இடங்களில் வைத்து சிறிது நேரம் தேய்க்க வேண்டும்.
எவ்வாறு இது வேலை செய்கிறது?

ஐஸ்கட்டியை கொண்டு பயன்படுத்துவதால், பருக்கள் மற்றும் பருக்களினால் ஏற்படும் வீக்கங்களை குறைகிறது. மேலும், மென்மையான சருமம் கிடைக்கவும் வழிவகை செய்கிறது.

பேக்கிங் சோடா

தேவையான பொருள்கள்:
  • 1 தேக்கரண்டி பேக்கிங் சோடா
  • தண்ணீர்
செய்முறை:
  • பேக்கிங் சோடாவில் சிறிதளவு தண்ணீரை கலந்து பருக்கள் மீது தடவ வேண்டும்.
  • பின்னர், சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரை கொண்டு சருமத்தை கழுவுங்கள்.
எவ்வாறு இது வேலை செய்கிறது?

இதனை சருமத்தில் பயன்படுத்துவதால் முகப்பருக்களை அகற்ற உதவுகிறது.

Leave a Comment

Your e-mail address will not be published. Required fields are marked *