முகப்பருக்களுக்கு தீர்வு! – Pimples Tips

    முகப்பருவைத் தடுக்க ஒரு நபர் செய்யக்கூடிய பல விஷயங்கள் உள்ளன. அவற்றுள் முகத்தை தினமும் இரண்டு முறை கழுவ வேண்டும், கடுமையாக துடைப்பதைத் தவிர்க்கவும், மற்றும் பருக்கள் எடுப்பதைத் தவிர்க்கவும். மேலும், இங்கே கொடுக்கப்பட்டுள்ள நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகளை கொண்ட வீட்டு வைத்திய முறைகளையும் பின்பற்றுங்கள்.

எலுமிச்சை

தேவையான பொருள்கள்:
 • எலுமிச்சை
 • பஞ்சு
செய்முறை:
 • எலுமிச்சை சாறை பிழியவும்
 • பஞ்சில் நனைத்து பாதிக்கப்பட்ட சருமத்தில் பயன்படுத்த வேண்டும்.
எவ்வாறு இது வேலை செய்கிறது?

எலுமிச்சை சாறில் உள்ள நோய் தீர்க்கும் பண்புகள் நுண்ணுயிர்களை அழித்து புதிய செல்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. இதனால், இவை பருக்கள் மற்றும் பருக்களினால் ஏற்படும் வீக்கங்களை தடுக்கிறது.

மஞ்சள்

தேவையான பொருள்கள்:
 • மஞ்சள்
 • தண்ணீர்
செய்முறை:
 • மஞ்சள் தூளை தண்ணீரில் கலந்து பேஸ்ட் தயாரிக்கவும்.
 • பின்னர், பாதிக்கப்பட்ட இடங்களில் பயன்படுத்த வேண்டும்.
 • தொடர்ந்து இதனை செய்யலாம்.
எவ்வாறு இது வேலை செய்கிறது?

மஞ்சள் ஒரு கிருமி நாசினி என்று அனைவரும் அறிந்த ஒன்றே!. ஆகையால், இவை முகப்பரு பிரச்சனைக்கு முக்கிய பங்கு ஆற்றுகிறது. மேலும் சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி சருமத்திற்கு பொலிவை கூட்டுகிறது.

வேப்பிலை

தேவையான பொருள்கள்:
 • சில வேப்பிலை இலைகள்
 • 1 தேக்கரண்டி முல்தானி மொட்டி
 • ரோஸ் வாட்டர்
செய்முறை:
 • அனைத்து பொருள்களையும் சேர்த்து பேஸ்ட் செய்யவும்.
 • பின்னர், அதனை பாதிக்கப்பட்ட இடங்களில் பூசவும்.
 • 20 நிமிடங்கள் வரை அப்படியே வைத்திருக்கவும்.
 • பிறகு, முகத்தை தண்ணீரால் கழுவ வேண்டும்.
எவ்வாறு இது வேலை செய்கிறது?

வேப்பிலை கிருமி நாசினி மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த மருத்துவ பொருள். ஆகையால், இவற்றை பயன்படுத்துவது முகப்பரு போன்ற சரும பாதிப்புகளிலிருந்து விடுபட உதவும்.

இளநீர்

தேவையான பொருள்கள்:
 • இளநீர்
 • பஞ்சு
செய்முறை:
 • இளநீரை பஞ்சில் நனைத்து பருக்களின் மீது தடவ வேண்டும்.
எவ்வாறு இது வேலை செய்கிறது?

இளநீரில் உள்ள தாதுக்கள் மற்றும் அதிக அளவு நீர் உள்ளடக்கம், வறண்ட சருமத்தை தடுக்க உதவுகிறது. மேலும், பருக்கள் மற்றும் பருக்களால் ஏற்படும் பாதிப்புகளையும் குறைக்க உதவுகிறது.

முட்டையின் வெள்ளை கரு

தேவையான பொருள்கள்:
 • 2 முட்டை
 • 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு
 • தண்ணீர்
செய்முறை:
 • முட்டையின் வெள்ளை கருவை தனியே எடுக்கவும்.
 • பின்னர், வெள்ளை கருவை எலுமிச்சை சாறுவுடன் கலந்து முகத்தில் தடவவும்.
 • 30 நிமிடங்கள் கழித்த பிறகு வெதுவெதுப்பான தண்ணீரில் முகத்தை கழுவ வேண்டும்.
எவ்வாறு இது வேலை செய்கிறது?

முட்டையின் வெள்ளை கருவில் என்சைம்கள் காணப்படுகின்றன. இவை சருமத்தில் உள்ள அழுக்குகளையும் மற்றும் மாசுகளையும் நீக்குவதால், முகப்பருக்கள் பிரச்சைகளிலிருந்து வீரைவீலயே விடுபட உதவுகிறது.

இலவங்கப்பட்டை மற்றும் தேன்

தேவையான பொருள்கள்:
 • 1 தேக்கரண்டி இலவங்கப்பட்டை பொடி
 • 1 தேக்கரண்டி தேன்
செய்முறை:
 • இலவங்கப்பட்டை பொடி மற்றும் தேனை கலந்து பேஸ்ட் போல் செய்யவும்.
 • பின்னர், அதனை முகப்பருக்கள் உள்ள இடங்களில் பூச வேண்டும்.
 • இதனை இரவு முழுவதும் அப்படியே விட்டு காலை முகத்தை கழுவ வேண்டும்.
எவ்வாறு இது வேலை செய்கிறது?

பாக்ட்ரியா மற்றும் அவை ஏற்படுத்தும் தொற்றுக்களை அழிக்கக்கூடிய பண்புகளை அதிக அளவில் இந்த கலவை கொண்டிருப்பதால், இவை உங்களை வீரைவிலேயே பருக்கள் பிரச்சனையில் இருந்து விடுபட செய்ய உதவும்.

Leave a Comment

Your e-mail address will not be published. Required fields are marked *