செவ்வாழை -Health benefits of Red banana in tamil

செவ்வாழையின் மருத்துவ பயன்கள்

     உலகெங்கிலும் 1,000 க்கும் மேற்பட்ட பல்வேறு வகையான வாழை பழ வகைகள் பரவலாக காணப்படுகின்றன. இவற்றில் தென்கிழக்கு ஆசியாவில் விளைவிக்கப்படும் சிவப்பு தோலுடன் காணப்படும் செவ்வாழைப்பழம் மிகவும் பிரபலமானவையாகும். இந்த வாழைப்பழங்கள் மிகவும் மென்மையாகவும், இனிமையான சுவையாகவும் இருக்கும். 

     இந்த சுவைமிக்க செவ்வாழைப்பழங்கள் உடலுக்கு தேவையான பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளது. மேலும், இவை உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி, இதய ஆரோக்கியம் மற்றும் செரிமானத்திற்கு மிக சிறந்த அளவில் பயனளிக்கும் ஒரு மிக சிறந்த பழம் ஆகும்.

லப் டப் சத்தத்தை குறைக்கும் செவ்வாழை!

    செவ்வாழை நமது இதயத்தின் பாதுகாப்பை எவ்வாறு உறுதி செய்கிறது என்பதை பற்றி பின்வருமாறு காண்போம் .

    இரத்த அழுத்தத்தை சீராக்குவதில் பொட்டாசியம் மிக சிறந்த முறையில் பங்களிக்கும் அவசியமான ஒரு கனிமமாகும். இந்த கனிமங்கள் செவ்வாழைப்பழங்களில் அதிக அளவில் நிறைந்துள்ளது. அதனால், ஒரு சிறிய பழத்தை உண்டால் கூட உங்களது இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும் என்று சில ஆராய்ச்சி கட்டுரைகளில் காட்டப்பட்டுள்ளது.

   இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவும் மற்றொரு மிக முக்கியமான கனிமம் மெக்னீசியம். ஒரு நாளைக்கு 100 மி.கி அளவு மெக்னீசியம் உட்கொள்வதன் மூலம் உயர் இரத்த அழுத்தம் ஏற்படும் அபாயத்தை 5% சதவீதம் வரை குறைக்கலாம்.

    இதனால், மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் ஆகிய இரண்டையும் அதிக அளவு கொண்ட இந்த பழத்தை உட்கொள்வதன் மூலம் இரத்த அழுத்தத்தைக் குறைத்து இதய நோய் ஏற்படும் அபாயத்தை குறைக்கிறது.

செவ்வாழை கண்களின் பாதுகாப்பை எவ்வாறு உறுதிசெய்கிறது?

     செவ்வாழைப்பழங்களில் கரோட்டினாய்டுகள் அதிக அளவில் உள்ளன. இந்த கரோட்டினாய்டுகள் தான் இந்த பழங்களுக்கு அவற்றின் சிவப்பு நிற தோலை கொடுக்கும் நிறமிகள் ஆகும். இந்த கரோட்டினாய்டுகளில் காணப்படும் லுடீன் மற்றும் பீட்டா கரோட்டின் நமது கண் ஆரோக்கியத்தை காக்கும் மிக சிறந்த காரணிகள் ஆகும்.

    குறிப்பாக, வயது அதிகரிப்பால் கண்களில் ஏற்படும் மாகுலர் சிதைவு, குணப்படுத்த முடியாத கண் நோய் மற்றும் குருட்டுத்தன்மைக்கு இந்த கரோட்டினாய்டுகளின் பற்றாக்குறையே ஒரு முக்கிய காரணம் ஆகும். 

   உண்மையில், லுடீன் மற்றும் பீட்டா கரோட்டின் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதால், வயது தொடர்பான தாமதமான மாகுலர் சிதைவுக்கான உங்கள் ஆபத்தை 26% குறைக்க முடியும் என்று ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.

       மேலும், இந்த வகை கரோட்டினாய்டுகள் மற்ற வாழை பழ வகைகளை விட இந்த சிவப்பு வாழைப்பழங்களில் அதிக அளவில் காணப்படுகிறது. இதனால், சிவப்பு வாழைப்பழங்களை உண்பது, கண்களுக்கு ஏற்படும் அபாயத்தை பெருமளவில் குறைக்கலாம்.

வருமுன் காக்குமா? இந்த செவ்வாழை !

     செவ்வாழைப்பழங்களில் வைட்டமின் சி மற்றும் பி6 அதிக அளவில் நிறைந்துள்ளன. உடலின் ஒரு ஆரோக்கியமான நோயெதிர்ப்பு அமைப்புக்கு இந்த ஊட்டச்சத்துக்கள் மிக மிக அவசியம் ஆகும்.

      உடலில் ஏற்படும் ஒரு சிறிய அளவு வைட்டமின் சி குறைபாடு கூட தொற்றுநோய்க்கான ஆபத்தை அதிகரிக்கும் என்று சில ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன. அதன்படி, வைட்டமின் சி உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தின் செல்களை வலுப்படுத்துவதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

    மேலும், வைட்டமின் பி6 குறைபாடு உங்கள் உடலின் வெள்ளை இரத்த அணுக்கள் மற்றும் நோயெதிர்ப்பு ஆன்டிபாடிகளின் உற்பத்தியைக் குறைக்கலாம். இவை இரண்டும் தான் தொற்றுநோயை எதிர்த்து போராடும் மிக முக்கிய காரணிகளாகும்.

     ஒரு சிறிய செவ்வாழைப்பழம் ஒரு நாளைக்கு நமது உடலுக்கு தேவையான 9% சதவீத வைட்டமின் சி மற்றும் 28% சதவீத பி6 ஊட்டச்சத்துக்களை நமது உடலுக்கு வழங்குகிறது. இதனால், இந்த செவ்வாழைப்பழங்களை உட்கொள்ளல், உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து உங்களை பாதுகாப்பாக உணர வைக்க உதவுகிறது.

மலச்சிக்கலா? செவ்வாழை உண்ணுங்கள்!

   ஒரு சிறிய செவ்வாழைப்பழம் 3 கிராம் அளவு வரை நார்சத்துக்களை நமது உடலுக்கு வழங்குகிறது. இதில் உள்ள நார்ச்சத்துக்கள் ப்ரீபயாடிக்குகள் என்றழைக்கப்படும் உங்கள் குடலுக்கு நன்மை பயக்கும் பாக்டீரியாவுக்கு உணவளிக்கும் ஒரு வகை ஃபைபர் ஆகும். 

    இவை மஞ்சள் வாழைப்பழங்களைப் போலவே, செவ்வாழைப்பழங்களிலும் அதிக அளவில் காணப்படுவதால், உங்கள் செரிமான அமைப்புக்கு நன்மை செய்து மலச்சிக்கலை நீக்குகிறது.

செவ்வாழை உண்பதால் குடலுக்கு கிடைக்கும் நன்மைகள்

 • இயல்பான குடல் இயக்கங்களை ஊக்குவிக்கிறது.
 • குடலில் வீக்கத்தைக் அல்லது தொற்றை குறைக்கும்.
 • குடலுக்கு நன்மை தரும் பாக்டீரியாவின் வளர்ச்சியைத் தூண்டுகிறது.
 • அழற்சி குடல் நோய் அபாயத்தைக் குறைக்கலாம்.

ஆண்மை குறைபாடு சீரடையும்

      தினசரி ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டுவந்தால், நரம்புகள் பலம்பெற்று ஆண்மை குறைபாடு சீரடையும் எனவும் கூறப்படுகிறது. மேலும், திருமணமான புது தம்பதியர் தினசரி ஆளுக்கு ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு அரைஸ்பூன் தேன் அருந்தினால், வீரைவிலே கருத்தரிக்கும் என்கின்றனர்.

ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது

100 கிராம் செவ்வாழையில் உள்ள ஊட்டச்சத்துக்களின் மதிப்பு ( in tamil )


 • Vitamin A 64.0 IU
 • Retinol Activity Equivalent 3.0 mcg
 • Alpha Carotene 25.0 mcg
 • Beta Carotene 26.0 mcg
 • Lutein+Zeaxanthin 22.0 mcg
 • Vitamin C 8.7 mg
 • Folate 20.0 mcg
 • Food Folate 20.0 mcg
 • Dietary Folate Equivalents 20.0 mcg
 • Choline 9.8 mg

ஊட்டச்சத்து மதிப்புக்களின் அட்டவணை

Calorie InformationAmount per 100 gramsPercent Daily Values
Calories89.0 (373 kJ)4%
Carbohydrate82.6 (346 kJ)
Fat2.8 (11.7 kJ)
Protein3.7 (15.5 kJ)

CarbohydratesAmount per 100 gramsPercent Daily Values
Total Carbohydrate22.8 g8%
Dietary Fiber2.6 g10%
Starch5.4 g
Sugars12.2 g
Sucrose2390 mg
Glucose4979 mg
Fructose4850 mg
Maltose10.0 mg

Fats & Fatty AcidsAmount per 100 gramsPercent Daily Values
Total Fat0.3 g1%
Saturated Fat0.1 g1%
Polyunsaturated Fat0.1 g
Total Omega-3 fatty acids27.0 mg
Total Omega-6 fatty acids46.0 mg

Protein & Amino AcidsAmount per 100 gramsPercent Daily Values
Protein1.1 g2%
Tryptophan9.0 mg
Threonine28.0 mg
Isoleucine28.0 mg
Leucine68.0 mg
Lysine50.0 mg
Methionine8.0 mg
Cystine9.0 mg
Phenylalanine49.0 mg
Tyrosine9.0 mg
Valine47.0 mg
Arginine49.0 mg
Histidine77.0 mg
Alanine40.0 mg
Aspartic acid124 mg
Glutamic acid152 mg
Glycine38.0 mg
Proline28.0 mg
Serine40.0 mg

VitaminsAmount per 100 gramsPercent Daily Values
Vitamin A64.0 IU1%
Retinol Activity Equivalent3.0 mcg
Alpha Carotene25.0 mcg
Beta Carotene26.0 mcg
Lutein+Zeaxanthin22.0 mcg
Vitamin C8.7 mg15%
Vitamin E (Alpha Tocopherol)0.1 mg1%
Vitamin K0.5 mcg1%
Riboflavin0.1 mg4%
Niacin0.7 mg3%
Vitamin B60.4 mg18%
Folate20.0 mcg5%
Food Folate20.0 mcg
Dietary Folate Equivalents20.0 mcg
Pantothenic Acid0.3 mg3%
Choline9.8 mg
Betaine0.1 mg

MineralsAmount per 100 gramsPercent Daily Values
Calcium5.0 mg1%
Iron0.3 mg1%
Magnesium27.0 mg7%
Phosphorus22.0 mg2%
Potassium358 mg10%
Sodium1.0 mg0%
Zinc0.2 mg1%
Copper0.1 mg4%
Manganese0.3 mg13%
Selenium1.0 mcg1%
Fluoride2.2 mcg

SterolsAmount per 100 gramsPercent Daily Values
Phytosterols16.0 mg

OtherAmount per 100 gramsPercent Daily Values
Water74.9 g
Ash0.8 g

Leave a Comment

Your e-mail address will not be published. Required fields are marked *