Sothu kathalai medicinal uses in tamil

sothu kathalai medicinal uses in tamil

        பொதுவாக, கற்றாழை தாவர இனங்களில் 300 க்கும் மேற்பட்ட இனங்கள் இதுவரை கண்டறியப்பட்டுள்ளன. இவற்றில் சோற்று கற்றாழை எனப்படும் “பார்படென்சிஸ் (அலோ வேரா)” அதன் குணப்படுத்தும் மற்றும் அழகூட்டும் பண்புகளுக்காக மிகவும் மதிப்புமிக்க மற்றும் பிரபலமான தாவரமாக கருதப்படுகின்றது.

     மேலும், கற்றாழையில் உள்ளே காணப்படும் ஜெல், பண்டைய காலங்களிலிருந்தே ஒரு பிரபலமான மூலிகை மருந்தாகவும் மற்றும் அழகூட்டும் பொருளாகவும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. குறிப்பாக, இவை சரும பிரச்சினைகள் முதல் செரிமான பிரச்சினைகள் வரை அனைத்திற்கும் சிகிச்சையளிக்க உதவுகின்றன. ஆகையால், அதன் சாத்தியமான நன்மைகள் சிலவற்றை பற்றி கீழே பார்ப்போம்.

sothu kathalai medicinal uses
ஆரோக்கியமான சருமம்

கற்றாழை ஜெல்லை, முகத்தில் தடவுவதன் மூலம் பருக்கள், கொப்பளங்கள் நீங்கும். சருமத்தில் வறட்சி நீங்கி மென்மையாகும்.

sothu kathalai medicinal uses
ஆரோக்கியமான கூந்தல்

முடியில் அதிக பிளவுகள் காணப்படும் பொழுதும், வறட்சி தன்மை இருக்கும் பொழுதும் கற்றாழை ஜெல்லை தலை முடியில் தடவி இருபது நிமிடம் அப்படியே வைத்திருந்து பின்னர் குளிக்கலாம்.

sothu kathalai medicinal uses
ஆரோக்கியமான பற்கள்

கற்றாழை ஜெல்லை கொண்டு பற்களை துலக்குவதால் பற்களில் உள்ள கிருமிகள் கொல்லப்பட்டு பற்சொத்தைகள் தடுக்கப்படுகின்றன.

sothu kathalai medicinal uses
ஆரோக்கியமான செரிமானம்

கற்றாழை சாறு அருந்துவதால், செரிமான பாதையில் உள்ள அழுக்குகள் நீக்கப்படுகின்றன. இதனால், செரிமானம் சீரடைந்து மேம்படுகின்றது.

sothu kathalai medicinal uses
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க

தண்ணீரில் வெள்ளரிக்காயை அறிந்து போட்டு சிறிதளவு புதினா இலைகளை தூவி, அதில் ஒரு தேக்கரண்டி கற்றாழை ஜெல்லை சேர்க்கவும். இதை தினமும் அருந்தி வர நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

Leave a Comment

Your e-mail address will not be published. Required fields are marked *