Stomach Weight loss Tips

stomach weight loss tips in tamil தொப்பை மற்றும் உடல் பருமன் என்பது உங்கள் துணிகளை இறுக்கமாக உணர வைக்கும் ஒரு தொல்லை மிகுந்த விஷயம் மட்டுமல்ல, இது உங்கள் உடலுக்கு மிகுந்த தீங்குகளை விளைவிக்க கூடிய விஷயங்களிலும் ஒன்றாகும். ஏனெனில், இந்த வகையானா உடலில் படிந்துள்ள தேவையற்ற கொழுப்புகள், நீரிழிவு நோய், இதய நோய் மற்றும் பிற உடல் உபாதைகளுக்கு ஒரு முக்கிய ஆபத்து காரணியாக கருதப்படுகிறது.

உடல் பருமன் மற்றும் தொப்பை குறைந்திட குறிப்புகள்

      பொதுவாக, உடல் பருமன் மற்றும் தொப்பையை இழப்பது கடினமான செயல் என்றாலும், உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை குறைக்க நீங்கள் செய்யக்கூடிய பல விஷயங்கள் இருக்கின்றன. இருப்பினும், நாங்கள் இங்கே விஞ்ஞான ஆய்வுகளின் தரவுகளின் படி, தொப்பை கொழுப்பை இழக்க சில பயனுள்ள குறிப்புகளை பற்றி விரிவாக தொகுத்துள்ளோம்.

கரையக்கூடிய நார்ச்சத்து உணவுகளை சாப்பிடுங்கள்

       கரையக்கூடிய நார்ச்சத்துகளை கொண்ட உணவுகளை உண்ணும் பொழுது, இவை தண்ணீரை உறிஞ்சி உணவை மென்மையாக்க உதவும் ஒரு வித ஜெல்லை உருவாக்குகிறது. இவ்விளைவு, நீங்கள் இயல்பாகவே குறைவாக சாப்பிட தூண்டுவது மட்டுமல்லாமல், உணவில் இருந்து உறிஞ்சும் கலோரிகளின் எண்ணிக்கையையும் குறைக்கின்றது. எனவே, ஒவ்வொரு நாளும் அதிக நார்ச்சத்துள்ள உணவுகளை உட்கொள்ள முயற்சி செய்யுங்கள்.(1)

ட்ரான்ஸ் கொழுப்புகளைக் ( Trans fat ) கொண்ட உணவுகளைத் தவிர்க்கவும்

       விலங்குகள் மீது நடத்தப்பட்ட ஆய்வுகளின் படி, ட்ரான்ஸ் கொழுப்புகளைக் ( Trans fats ) கொண்ட உணவுகளை உட்கொள்வதால் இதய நோய், இன்சுலின் எதிர்ப்பு மற்றும் வயிற்று கொழுப்பு அதிகரிப்பு போன்ற நோய்களுடன் தொடர்புடையயதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த வகை உணவுகளை அதிகம் சாப்பிடுவதால், 33% சதவீத்திற்கும் அதிகமான கொழுப்புகளை பெற வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

     பெரும்பாலும், அதிக டிரான்ஸ் கொழுப்பு கொண்ட உணவுகள் பைகளில் அடைக்கப்பட்ட தயாரிப்புகளிலே அதிகமாக காணப்படும். எனவே, தொப்பை குறைக்கவும், உங்கள் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும், மூலப்பொருள் லேபிள்களை கவனமாகப் படித்து, டிரான்ஸ் கொழுப்புகளைக் கொண்ட தயாரிப்புகளிலிருந்து விலகி இருங்கள்.(1)

அதிகமாக மது அருந்துதலை தவிர்க்கவும்

      பொதுவாக, ஆல்கஹால் சிறிய அளவில் மட்டுமே உடலில் நேர்மறை விளைவுகளை ஏற்படுத்தும். ஆனால், இதை நீங்கள் அதிகமாக குடித்தால் அது உடலுக்கு மிகவும் தீங்கு விளைவிக்க கூடியவை. அதுமட்டுமல்லாமல், அதிகப்படியான ஆல்கஹால் வயிற்றை சுற்றி கொழுப்பைப் உருவாகச் செய்யும் என்று ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன.(1)

குறுந்செய்தி !
பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால், உடல் எடை குறைவது மட்டுமல்லாமல் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.

      ஆகையால், நீங்கள் மது அருந்துபவர் எனில், நீங்கள் அருந்தும் ஆல்கஹால்-லின்அளவு குறைக்கப்படுவது உங்கள் வயிற்றை சுற்றியுள்ள கொழுப்பின் அளவைக் குறைக்க உதவும். ஆகையால், நீங்கள் அதை முழுவதுமாக விட்டுவிட முடியவில்லை என்றாலும், ஒரு நாளில் நீங்கள் குடிக்கும் ஆல்கஹால்-லின் அளவை குறைத்து வந்தாலே போதும்.

புரத உணவுகளை உண்ணுங்கள்

      பல புரத உணவுகளில் மீது நடத்தப்பட்ட ஆய்வுகளில், குறைந்த புரத உணவை உட்கொள்பவர்களைக் காட்டிலும் அதிக புரதத்தை உண்ணும் நபர்களுக்கு வயிற்றை சுற்றியுள்ள கொழுப்புகள் குறைவாக இருப்பதைக் ஆய்வு முடிவுகள் உறுதிசெய்துள்ளன.(1)

      ஏனெனில், அதிக புரத உட்கொள்ளல் PYY என்ற முழுமையான ஹார்மோனின் வெளியீட்டை அதிகரித்து பசியை குறைக்க முழுமையை ஊக்குவிக்கிறது. அதுமட்டுமல்லாமல், புரோட்டீன் உங்கள் வளர்சிதை மாற்ற விகிதத்தை உயர்த்தி, கட்டுக்கோப்பான உடல் அமைப்பை தக்க வைத்துக் கொள்ளவும் உதவுகிறது.

மன அழுத்தத்தை குறைக்கவும்

      மன அழுத்தம், அட்ரீனல் ஹார்மோன் சுரப்பிகளைத் தூண்டி கார்டிசோலை உற்பத்தி செய்கின்றது. இந்த கார்டிசோல்-இன் அதிக அளவு பசியை அதிகரிக்க செய்வது மட்டுமல்லாமல், வயிற்றை சுற்றி கொழுப்பினை சேமித்துவைக்க இலகுவாக்குகின்றது என்று ஆராய்ச்சி கட்டுரைகள் தெரிவிக்கின்றன.(1)

     மேலும் என்னவென்றால், ஏற்கனவே ஒரு பெரிய இடுப்பைக் கொண்ட பெண்கள் மன அழுத்தத்திற்கு உள்ளாகும் போது அதிக அளவு கார்டிசோலை உற்பத்தி செய்து வயிற்றை சுற்றி மேலும் கொழுப்பினை சேமிக்கின்றனர் எனவும் கூறப்பட்டுள்ளது.

      ஆதலால், தொப்பையை குறைக்க மன அழுத்தத்தைக் குறைக்கும் செயல்களில் ஈடுபடுங்கள். அதாவது யோகா அல்லது தியானத்தை பயிற்சி செய்வது பயனுள்ள முறைகளாக இருக்கும்.

சர்க்கரை உணவுகளை தவிர்க்கவும்

     வெள்ளை சர்க்கரை பிரக்டோஸ்-யை அதிக அளவில் கொண்டுள்ளது. இவற்றை அதிகமாக உட்கொள்ளும்போது, இதய நோய், வகை 2 நீரிழிவு நோய், உடல் பருமன் மற்றும் கல்லீரல் நோய் அதிகரிப்பதாக ஆய்வுகளில் அவதானிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், அதிக சர்க்கரை உட்கொள்ளல், வயிற்றை சுற்றி கொழுப்பு அதிகமாவதை ஊட்டமளிக்கிறது எனவும் கூறப்பட்டுள்ளது.

      எனவே, நீங்கள் தொப்பையை தவிர்க்க வேண்டுமானால், சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையை அறவே தவிர்க்க வேண்டும். ஆனால், தூய்மையான தேன் போன்ற ஆரோக்கியமான சர்க்கரைகளை போதுமான அளவு எடுத்துக்கொள்ளலாம். (1)

ஏரோபிக் (Aerobic) உடற்பயிற்சி செய்யுங்கள்

            ஏரோபிக் உடற்பயிற்சி செய்வது, உங்கள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், உடலில் உள்ள தேவையற்ற கலோரிகளை எரிக்கவும் உதவும் ஒரு சிறந்த வழியாகும்.

           ஒரு ஆய்வில், மற்ற உடற்பயிற்சி செய்தவர்களுடன் ஒப்பிடும்போது, ஏரோபிக் உடற்பயிற்சி செய்தவர்களின் உடலின் அணைத்து பகுதிகளிலிருந்தும் அதிக கொழுப்பை இழந்தனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

         மேலும், வயிற்றை சுற்றியுள்ள கொழுப்பைக் குறைப்பதற்கான உடற்பயிற்சிகளில் இது மிகவும் பயனுள்ள வடிவங்களில் ஒன்று எனவும் அந்த ஆய்வுகள் காட்டுகின்றன.(1)

சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரெட் உணவுகளை குறைக்கவும்

       நீங்கள் கார்போஹைட்ரெட் உணவு உட்கொள்ளலைக் குறைப்பது, தொப்பை மற்றும் தேவையற்ற கொழுப்பை இழக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

     அதற்காக, நீங்கள் கண்டிப்பான குறைந்த கார்போஹைட்ரெட் கொண்ட உணவை குறைக்க வேண்டும் என்ற அவசியமில்லை. மாறாக, சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரெட் உணவுகள் மற்றும் பதப்படுத்தப்படாத மாவுச்சத்து உணவுகளை தவிர்த்தாலே போதுமானது.

     ஏனெனில், இவற்றை தவிர்ப்பதால், உடலின் வளர்சிதை மாற்றம் மேம்படுத்தப்பட்டு தொப்பை மற்றும் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் 17% அதிகமாக குறைக்கப்படுகின்றன என்று சில ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.(1)

நிம்மதியான தூக்கத்தைப் பெறுங்கள்

        உடல் பருமன் உட்பட உங்கள் ஆரோக்கியத்தின் பல அம்சங்களுக்கு நிம்மதியான தூக்கம் மிகவும் அவசியம். ஏனெனில், போதுமான அளவு உறக்கம் கொள்ளாதவர்களின், உடல் எடை அதிகரிப்பதாக ஆய்வுகள் காட்டுகின்றன.(1)

Stomach weight loss tips in tamil     ஆகையால், உடல் எடையை குறைக்க விரும்பினால், குறைந்தது ஏழு மணிநேரம் தூங்குவது மட்டுமல்லாமல், போதுமான தரமான தூக்கத்தைப் பெறுகிறீர்களா? என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *