உடல் நலன் காக்கும் உணவுகள் – Healthy Food

உடல் நலன் காக்கும் உணவுகள்

    ஒரு ஆரோக்கியமான உணவு வகைகளை உண்ணுதல் என்பது ஒட்டுமொத்த உடல் சுகாதாரத்தை பராமரிக்க அல்லது மேம்படுத்த உதவுகிறது. ஒரு ஆரோக்கியமான உணவு என்பது திரவம், நுண் ஊட்டச்சத்து, மற்றும் போதுமான கலோரிகள் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்து கொண்ட உடலை வடிவமைக்க உதவுகிறது. இங்கே, நங்கள் உடலுக்கு நன்மை தரக்கூடிய முதன்மையான உணவுகளை பற்றி பதிவிட்டுளோம்.

ஆப்பிள்

ஆப்பிள்கள் ஃபிளவனாய்டுகள், நார்ச்சத்து மற்றும் மிக முக்கியமான ஆன்டிஆக்ஸிடண்ட்களை (antioxidants) கொண்ட உணவாகும். ஆப்பிள்களில் உள்ள பைட்டோனுயூட்ரிட்டுகள் மற்றும் ஆன்டிஆக்ஸிடண்ட்கள் புற்றுநோய், ஹைபர்டென்ஷன், நீரிழிவு, மற்றும் இதய நோய் போன்ற ஆபத்தை குறைக்க பெரிய அளவில் உதவுகிறது. (1)

வெண்ணை பழம்

வெண்ணெய் பழம் வைட்டமின் C, E, K, மற்றும் B-6, அதேபோல் ரிபோப்லாவின், நியாசின் போலேட், பாந்தோத்தேனிக் அமிலம், மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் ஆகியவற்றின் மிக முக்கிய ஆதாரமாக விளங்குகிறது.

மேலும், அவை லுடீன், பீட்டா-கரோட்டின், மற்றும் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஆரோக்கியம் நிறைந்த கொழுப்புகளை கொண்டுள்ளதால், நம் உடலுக்கு ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் ஊக்குவிப்பதில் இப்பழத்திற்கு முக்கிய பங்குண்டு.

பூண்டு

இதயம் மற்றும் இரத்த அமைப்பு தொடர்பான பல ஆபத்தான நிலைமைகளுக்கு பூண்டு பண்டைய காலங்களிலிருந்தே மருந்தாக பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு மிக சிறந்த உண்வகும்.

குறிப்பாக, இவை உயர் இரத்த அழுத்தம், குறைந்த இரத்த அழுத்தம், உயர் கொழுப்பு, கொரோனரி இதய நோய், மாரடைப்பு, குறுகலான தமனி காரணமாக இரத்த ஓட்டம் குறைந்து போதல், மற்றும் தமனியின் கடினத்தன்மை போன்ற நோய்களின் அபாயத்தை குறைகிறது.

கீரை

கீரையில் உள்ள கால்சியம் உங்கள் எலும்புகளை வலுப்படுத்தவும் மற்றும் காயங்களை ஆற்றவும் உதவுகிறது. மேலும், இவற்றில் உள்ள வைட்டமின்கள் ஏ மற்றும் சி, ஃபைபர், ஃபோலிக் அமிலம், மற்றும் பிற சத்துக்கள், பெருங்குடல் மற்றும் மார்பக புற்றுநோய் எதிராக போராட உதவுகிறது.

கீரை இரத்தத்தில் சேதமடைந்த புரத அளவுகளை குறைத்து உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்க்கு எதிராக பாதுகாக்க முடியும்.

சூரை மீன்

சூரை மீன்கள் கொழுப்பு மற்றும் உயர்தர புரதம் கொண்ட மிக சிறந்த கடல் உணவாகும். இது லீன் தசை திசு வளர்ச்சி மற்றும் உடல் ஆரோக்கியத்தை பராமரிக்க தேவையான அனைத்து அத்தியாவசிய அமினோ அமிலங்களை கொண்டிருக்கிறது. சமைக்கப்பட்ட சூரை மீன்கள் இதயத்திற்கு ஆரோக்கியத்தை தரும் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்களின் ஒரு நல்ல ஆதாரமாக இருக்கிறது.

எலும்மிச்சை

வைட்டமின் சி, ஃபைபர், பொட்டாசியம், கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம் மற்றும் பல நன்மை பயக்கும் தாவர கலவைகளை எலுமிச்சை பழம் அதிக அளவில் கொண்டுள்ளது. உண்மையில், இந்த ஊட்டச்சத்துக்கள் இதய ஆரோக்கியம், எடை கட்டுப்பாடு மற்றும் செரிமான ஆரோக்கியத்தை ஊக்குவிக்க கூடிய காரணிகளாகும்.

மேலும், ஒவ்வொரு காலை வேளையிலும் சூடான தண்ணீரில் எலுமிச்சை சாறு குடிப்பது உடலின் பிஹெச் (PH)-இன் சமநிலையை பராமரிக்க உதவுகிறது.

அக்ரூட் பருப்புகள்

அக்ரூட் பருப்புகள், உடலுக்கு நன்மை தரும் கொழுப்பு அமிலம், ஒமேகா -3, இரும்பு, செலினியம், கால்சியம், துத்தநாகம், வைட்டமின் ஈ மற்றும் சில பி வைட்டமின்கள் ஆகியவற்றைக் கொண்டிருக்கின்றன. அக்ரூட் பருப்புகளில் உள்ள ஊட்டச்சத்துக்கள் இதய ஆரோக்கியம் மற்றும் மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, புற்றுநோய் ஆபத்துகளையும் குறைகிறது.

அவுரிநெல்லிகள்

நார்ச்சத்து, பொட்டாசியம், ஃபோலேட், வைட்டமின் சி, வைட்டமின் பி 6, மற்றும் பைட்டோரியூரிண்ட் போன்ற முக்கிய ஊட்டச்சத்துக்களை அவுரிநெல்லிகள் கொண்டுள்ளதால், நமது இதயத்தை பாதுகாப்பதில் அவுரிநெல்லிக்கு முக்கிய பங்குண்டு. மேலும், இவை, நார்சத்துக்களை அதிகமாக கொண்டுள்ளதால், இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை குறைத்து இதயத்தை பாதுகாக்கிறது.

ப்ரோக்கோலி

ப்ரோக்கோலி வைட்டமின்கள் கே மற்றும் சி, ஃபோலேட் (மற்றும் பொட்டாசியம், ஃபைபர் ஆகியவற்றின் ஒரு சிறந்த ஆதாரமாக விளங்குகிறது. இவற்றில் உள்ள வைட்டமின் சி - உடல் திசு மற்றும் எலும்பு ஆகியவற்றை உருவாக்கும் கொலாஜன்களை உருவாக்குகிறது.

மேலும் உடலில் ஏற்பட்ட வெட்டுக்கள் மற்றும் காயங்களைக் குணப்படுத்த உதவுகிறது. வைட்டமின் சி ஒரு சக்திவாய்ந்த ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் ஆகும். இவை நமது உடலை பிரீ ரேடிக்கல்ஸ் -லிருந்து பாதுகாத்து உடலின் செல்கள் தீவிரமாக சேதமடைவதைத் தடுக்கிறது.

பாதாம்

பாதாம் ஆரோக்கியமான கொழுப்புகள், நார்ச்சத்து, புரதம், மக்னீசியம் மற்றும் வைட்டமின் ஈ ஆகியவை கொண்டதாகும். இவை ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு, இரத்த அழுத்தம், மற்றும் ரத்தத்தில் உள்ள கொழுப்புகளை கட்டுப்படுத்த உதவுகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *