Top and Best Weight loss Foods List

உடல் எடையை குறைக்கும் எளிய உணவுகள்

    சிறந்த எடை எடையிழப்பிற்கான  உணவுகள் உடலில் உள்ள கொழுப்பினை உருக்குவதில் முக்கிய பங்கு வகிக்கும். எனவே, ஒரு விஞ்ஞான அடிப்படையிலான எடையிழப்பிற்கான சிறந்த உணவுகள் பட்டியலை வழங்கியிருக்கிறோம். அவை, எடை இழக்க மற்றும்  உன்னதமான உடலமைப்பை பெற உதவுகின்றன.

இஞ்சி​

          இஞ்சி உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பினை இழக்க பெரிதும் உதவுகிறது மற்றும் எடையை  திறமையாக பராமரிக்கிறது. இது உடலில் உள்ள கார்டிசோல் உற்பத்தியை குறைக்கிறது. ஏனென்றால், அதிக அளவு கார்டிசோல் எடை அதிகரிப்புக்கு காரணமாகிறது மற்றும் இது வயிற்று கொழுப்பை இழக்க தடையாகவும்  உள்ளது. 

   அடிக்கடி இஞ்சியை நுகர்வது நமது உடலின் உள் சமநிலையை மீண்டும் கொண்டு வரவும், ஒட்டுமொத்த நலன் மற்றும் எடை இழப்புகளை மேம்படுத்தவும் உதவுகிறது. 

ஆப்பிள் பழச்சாறு​

          ஆப்பிள் பழச்சாறீல்  குறைந்த அளவு  சோடியம் உள்ளது. இவை உடலிருந்து  அதிகப்படியான தண்ணீரை வெளியிட உதவும். உடலில் கூடுதல் தண்ணீரைக் கொண்டிருப்பது, உடல் சோர்வு மற்றும் பருமனான தோற்றத்தை அளிக்கிறது. ஆப்பிள் பழச்சாறீல்  உள்ள  நார்ச்சத்துக்கள் உங்கள் வயிறை சுத்தப்படுத்தி உங்களை முழுமையாக உணர வைத்து பசியை குறைகிறது.

மீன்கள்​

           மீன்களை சாப்பிடுவது கொழுப்பினை இழக்க உங்களுக்கு பெரிதும் உதவும். சூரை, கானாகெழுத்தி, சால்மன் போன்ற நல்ல கொழுப்புள்ள மீன்களை சாப்பிட வேண்டும். ஏனென்றால், இந்தவகை மீன்களில் உள்ள எண்ணெய் கெட்ட கொழுப்பினை உருக்கும் தன்மை கொண்டது. மேலும், இதிலுள்ள ஒமேகா 3 கொழுப்புகள் கொழுப்புச் செல்களை ஆரோக்கியமானவைகளாக மாற்றி கலோரிகளை எரித்து வேகமாக கொழுப்புகளை இழக்க செய்யும்.  

பால்​

     நீங்கள் உடற்பயிற்சி எடை இழப்பு உணவு அட்டவணை பற்றி அறிந்திருந்தால், ஒரு சிறந்த எடை இழப்பு உணவு அட்டவணையில் பாலின் முக்கியத்துவத்தை பற்றி நீங்கள் அறிவீர்கள் என்பது நிச்சயம். ஏனெனில், கொழுப்பு நீக்கிய பால் புரதத்திற்கு ஒரு சிறந்த ஆதாரமாக விளங்குகிறது மற்றும் கால்சியம், வைட்டமின் ஏ, பாஸ்பரஸ், வைட்டமின் டி, வைட்டமின் பி 12 மற்றும் ஆக்ஸிஜனேற்ற போன்ற பல முக்கிய ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளது. 

   அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் க்ளினிகல் நியூட்ரிஷன் என்ற நிறுவனம் நடத்திய சமீபத்திய ஆய்வின் படி, கொழுப்பு நீக்கிய பாலில் உள்ள புரதங்கள் பசியை குறைத்து கொழுப்பை நீக்குகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.

முட்டைகள்​

           எடை இழப்பு உணவுகளில் புரதம் முக்கிய பங்கு வகிக்கின்றன. புரதம் பற்றி நாம் விவாதிக்கும்போது, மனதில் தொடுகின்ற முதல் உணவு, முட்டைகள் ஆகும். முட்டைகளில் புரதம், இரும்பு, பாஸ்பரஸ், மற்றும் உடலுக்கு தேவையான வைட்டமீன்களை கொண்டுள்ளன.

          இது உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து, பசியை குறைத்து, மற்றும் பல கொழுப்பினனை கட்டுப்படுத்தும் ஹார்மோன்களை ஊக்குவிக்கின்றன. இது குறிப்பாக வயிற்றில் உள்ள கொழுப்பினை இழக்க உதவுகிறது.

கொட்டைகள்

               பாதாம், பிஸ்தா போன்ற கொட்டைகள் தொப்பையை குறைக்கக்கூடிய உணவு பட்டியலில் ஒரு முக்கிய பகுதியாக இருக்கிறது. ஒவ்வொரு நாளும் 30-50 கிராம்  அளவுள்ள கொட்டைகளை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் நமது வயிற்றின் உள்ள தேவையற்ற கொழுப்பினனை இழக்க நமது உடலை ஊக்குவிக்கின்ற என சில சமீபத்திய ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. ஏனென்றால், இவை நமது பசியின்மையை  கட்டுப்படுத்தி உணவு அதிகம் உட்க்கொள்ளுவதை தடுக்கிறது.

தக்காளி​

   எடை இழக்க உங்களுக்கு தக்காளி உதவும்  என்று நீங்கள்  நினைத்துயிருக்கிறார்களா? ஆம்! தக்காளி எடை இழக்க உங்களுக்கு உதவுகிறது. தக்காளியில் கலோரிகள்  குறைவாக இருப்பதுடன், கார்னைடைன் உற்பத்தியையும்  ஊக்குவிக்கிறது. மேலும், உடல் மூலம்  அமினோ அமிலத்தை சுரந்து கொழுப்பை ஆற்றலாக மாற்றுகிறது.

வெண்ணெய் பழம்

        வெண்ணெய் பழம் எடையை இழக்க விரும்பும் மக்களுக்கு ஒரு அசாதாரண பழம் ஆகும். உடலில் இருந்து தேவையற்ற கொழுப்புக்களை குறைக்க இது உதவுகிறது, இது நார் மற்றும் கலோரிகளால் நிறைந்திருக்கிறது. மேலும் இது கொழுப்பினை எரிக்கும் உணவாகவும் உள்ளது. இதனால், இது உங்கள் பசியைக் குறைத்து, அதிக உணவை உண்ணுவதை நிறுத்திவிடும்.

பெர்ரி பழம்​

         பெர்ரி பழம்  கொழுப்பு இழக்க விரும்பும் அவர்களுக்கு ஒரு பரிசு ஆகும். உணவில் பெர்ரி பழம் சேர்த்துக்கொள்வதன் மூலம் பசியின்மையை குறைத்து நம்மை நன்றாக உணரவைக்கிறது மற்றும்  வயிற்றுப் பகுதியில் குவிந்துள்ள கொழுப்புகளை அகற்றுவதில் முக்கிய பங்குவகிக்கின்றது. எனவே, இது  வயிற்றுப் பகுதியில் குவிந்துள்ள கொழுப்புகளை இழக்க ஒரு நல்ல  தேர்வு ஆகும். மேலும்,  நல்ல முடிவினை எட்ட காலையில் மட்டுமே உட்கொள்ள வேண்டும்.

ஓட்ஸ்​

           ஓட்ஸ் உங்கள் வளர்சிதை மாற்றத்தின் வளர்ச்சியை அதிகரிக்கும் பல ஊட்டச்சத்துக்கள்  கொண்ட ஒரு ஆரோக்கியமான உணவுப் பொருட்களாகும். இது உடலில் உள்ள கொழுப்பு மற்றும் நச்சுகளின்  திரட்சியைத் தடுக்கின்றன. கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் பீட்டா-குளுக்கன் ஆகியவை ஓட்ஸ் பகுதியில் காணப்படுகின்றன. 

     இவை, உங்கள் பசியின்மையைக் கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும், இவற்றை நீங்கள் உண்ணும் போது உங்கள் குடலில் பொதுவாக உற்பத்தி செய்யப்படும்  ஹார்மோனின் வெளியீட்டை மேம்படுத்த உதவுகிறது.

Leave a Comment

Your e-mail address will not be published. Required fields are marked *