எடை இழப்பு பானங்கள்( Weight loss drinks )

Weight loss drink in tamil பொதுவாக, தொப்பை மற்றும் உடல் எடையைக் குறைப்பது என்பது கடினமான செயல்களில் ஒன்றாக இருந்தாலும், தொடர்ந்து உடல் எடை குறைப்பு பயிற்சியில் ஈடுபட்டு வந்தால் நிச்சயம் உடல் எடையை குறைக்கலாம். அதிலும், நீங்கள் உடல் எடை குறைப்பு பானங்களை அருந்தி வந்தால் இச்செயல்முறை இன்னும் எளிமையானதாகலாம்.

Weight Loss Drinks

    ஏனென்றால், இந்த எடை குறைப்பு பானங்களை தினமும் காலையில் எழுந்ததும் அருந்தி வந்தால், உங்கள் உடலின் மெட்டபாலிசம் அதிகரிப்பதோடு, உடல் பருமன் உண்டாக காரணமாக இருக்கும் உடல் கழிவுகளையும் இவை வெளியேற்றும்.

     மேலும், வெறும் வயிற்றில் இந்த பானங்களைக் குடித்து வந்தால், எளிதில் அவற்றில் உள்ள சத்துக்கள் உங்கள் உடலால் உறிஞ்சப்பட்டு, கொழுப்புச் செல்களைக் குறைக்கும் பணி இன்னும் வேகமெடுக்கும்.

    சரி, இப்போது தொப்பையை அல்லது உடல் எடையை ஒரே மாதத்தில் குறைக்க உதவும் எடை குறைப்பு பானங்கள் என்னவென்று கீழ பார்ப்போம்.

மிளகு தண்ணீர்

       ஒரு குவளை அளவு எலுமிச்சை ஜூஸில், 1 டீஸ்பூன் மிளகுத் தூள் சேர்த்து நன்கு கலந்து, காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். குறிப்பாக, இதை குடித்து 1 மணிநேரம் கழித்த பின்னர் தான் காலை உணவை கண்டிப்பாக உட்கொள்ள வேண்டும். 

    இச்செயல்முறையில், மிளகில் உள்ள “கேப்சைசின்” உடலின் மெட்டபாலிசத்தை நன்கு தூண்டி, கொழுப்புச் செல்களைக் கரைக்கும். மேலும், இவை நுரையீரலில் உள்ள கெட்ட கழிவுகளை வெளியேற்றவும் உதவும்.

இஞ்சி தண்ணீர்

      இஞ்சி தண்ணீர், உடலினுள் உள்ள உடல் பருமனை அதிகரிக்கும் கெட்ட கழிவுகளை வெளியேற்றி, மெட்டபாலிசத்தை அதிகரித்து கொழுப்புக்களை வேகமாக குறைக்கும். இதற்கு, நீங்கள் இரவில் நித்திரை கொள்ளும் முன்பு ஒரு டம்ளர் நீரில் சிறிது இஞ்சியை துருவிப் போட்டு ஊற வைத்து, மறுநாள் காலையில் அதனை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

மஞ்சள் தண்ணீர்

Weight loss drink tamil காலையில் விழித்ததும் ஒரு டம்ளர் நீரில் 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும்.இச்செயல்முறையில் உடல் கழிவுகள் வெளியேறுவது மட்டுமல்லாமல் உடல் அழற்சியினால் ஏற்பட்ட வீக்கமும் குறையும். மேலும், மஞ்சள் ஒரு கிருமி நாசினி என்பதால் இவை உடலில் உள்ள கிருமிகளை அழித்து, உடலுக்கு நல்ல பாதுகாப்பையும் வழங்குகின்றது.

எலுமிச்சை தண்ணீர்

      ஒரு டம்ளர் எலுமிச்சை ஜூஸில் தேன் கலந்து தினமும் காலையில் குடித்து வந்தால், இவற்றில் உள்ள அமிலங்கள் மற்றும் ஊட்ட சத்துக்கள் உடலின் மெட்டபாலிசத்தை நன்கு தூண்டி, கொழுப்புகளை கரைக்க வழிவகுக்கும். கண்டிப்பாக, இந்த ஜூஸ் குடித்து 1 மணிநேரம் கழித்த பின்னர் தான் காலை உணவை உண்ண வேண்டும்.

ஆப்பிள் சிடர் வினிகர்

    காலை உணவு உண்பதற்கு முன், நீங்கள் ஒரு டம்ளர் நீரில் ஒரு டீஸ்பூன் ஆப்பிள் சிடர் வினிகரை கலந்து குடித்து வந்தால், கொழுப்புக்கள் கரைந்து உடல் எடை குறைவதோடு, நாள் முழுவதும் சுறுசுறுப்புடனும் இருக்கலாம். மேலும், இந்த பானம் கூடுதலாக செரிமான பிரச்சனைகளையும் சரிசெய்யும்.

குளோரெல்லா ( Chlorella ) தண்ணீர்

Weight loss drink in tamil குளோரெல்லா ( Chlorella ) தண்ணீர், உடலில் உள்ள நச்சுமிக்க மெர்குரிகளை வெளியேற்றி, உடலில் உள்ள பாதிக்கப்பட்ட செல்களைப் புதுப்பித்து, உடல் பருமன் குறைய உதவும். இதற்கு, நீங்கள் ஒரு டீஸ்பூன் குளோரெல்லா பொடியை ஒரு டம்ளர் நீரில் கலந்து, காலையில் வெறும் வயிற்றில் குடித்து வரலாம் அல்லது குளோரெல்லா மாத்திரை கிடைத்தால், தினமும் ஒன்றை வெறும் வயிற்றில் போட்டுக் கொள்ளலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *