Weight reduce tips in tamil

எப்படி உடம்பைக் குறைக்கலாம்?

Weight reduce tips in tamil எப்படி உடம்பைக் குறைக்கலாம்? இதோ அதற்கான சில எளிமையான வழிமுறைகள். இவை உங்களின் உடல் பருமன் குறைய நிச்சயமாக உதவலாம்.

சோம்பு கலந்த தண்ணீரை குடிக்கவும்

       தாகத்திற்காக குடிக்கும் சாதாரண தண்ணீரைத் தவிர்த்து, அதற்குப் பதிலாக சோம்பு கலந்த தண்ணீரைக் குடிக்கலாம். சோம்பு கலந்த தண்ணீரைக் குடிப்பதால் விரைவிலேயே உடம்பில் உள்ள அதிகப்படியான தேவையற்ற சதைகள் குறைந்து, உடல் அழகான வடிவத்திற்கு வர வழிவகுக்கிறது.

அமுக்கிரா வேர் மற்றும் பெருஞ்சீரகம்

       அமுக்கிரா வேர், பெருஞ்சீரகம் ஆகியவற்றை பாலுடன் நன்கு கலந்து காய்ச்சிக் குடித்துவர உடல் எடை குறையும்.

சுரைக்காய்

     ” சுரைக்காய்”, வயிற்றை சுற்றியுள்ள கொழுப்பை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அதனால், சுரைக்காயை வாரத்திற்கு ஒருமுறையாவது உணவில் சேர்த்துக் கொள்ள முயற்சிசெய்யுங்கள்.

பூண்டு, வெங்காயத்தை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்

       உடலிலுள்ள கொழுப்புகளை கொஞ்சம் கொஞ்சம் கரைத்து வந்தாலே போதும், உடல் எடை வெகுவாக குறைத்து விடலாம். ஆகையால், கொழுப்புகளைக் குறைப்பதற்கு நாம் அன்றாடம் பயன்படுத்தும் பூண்டு, வெங்காயம் பெருமளவில் உதவுகின்றது. இவற்றை, நீங்கள், உணவுடன் அதிகமாக பயன்படுத்தும்பொழுது, உடல் எடை குறையும் வாய்ப்பும் அதிகரிக்கின்றது.

மந்தாரை வேர்

      மந்தாரை வேரை நீர்விட்டு, நீர் பாதியாக குறையும் வரை நன்கு காய்ச்சவும். பின்னர், காய்ச்சிய நீரை தொடர்ந்து அருந்தி வந்தால் உடல் எடைபாதியாக குறைந்து விடும் வாய்ப்புகள் உள்ளது.

லெமன் டீ

     அன்றாடம் குடிக்கும் தேநீருக்கு பதிலாக லெமன் டீ அருந்தி வந்தால் விரைவில் உடல் மெலிவதை நீங்களே உணரலாம்.

வாழ்த்தண்டு மற்றும் அருகம் புல் சாறு

      தினமும், வாழ்த்தண்டு சாறு அல்லது அரும்புல் சாறை பருகி வந்தால் உடல் எடையைக் குறைக்கலாம்.

நடைபயிற்சி, உடற்பயிற்சி மேற்கொள்ளுதல்

     மேலும், இவற்றுடன் காலையில் நடைபயிற்சி, உடற்பயிற்சி மேற்கொள்ளுதல் இயற்கையாகவே உடல் எடையை குறைப்பதற்குரிய சிறந்த வழிமுறைகளில் ஒன்றாகும். 

       மேற்கூறிய வழிமுறைகள் அனைத்தும் இயற்கையான முறையில் நாம் உண்ணும் உணவால் எடையை குறைக்க முயற்சிக்கும் வழிமுறைகளாகும். இவை அனைத்தும் தொடர்ந்து பின்பற்றி வந்தால் உடல் எடையில் நிச்சயம் மாற்றத்தை காணலாம்.

Leave a Comment

Your e-mail address will not be published. Required fields are marked *